மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....

Loading...

தூக்கில் தொங்கும் தீர்ப்புகள்!-(பாராளுமன்ற தாக்குதல்)
தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுதுபுலம்பினாலோ, முணுமுணுத்தாலோ அதற்குக் காரணம் அவர்கள் பிறந்த பொன்னாட்டை வெறுப்பதால் அல்ல. தவறுகள் திருத்தப்படாதா, நான் பிறந்த நாடு போற்றுதலுக்கு மட்டுமே உரிய நாடாக மாறிவிடாதா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்தான் காரணமே தவிர, அது நாட்டுப்பற்று இல்லாமையால் அல்ல. 63 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தும் முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்கக்கூடத் துணிவில்லாத அல்லது மனமில்லாத நாடாக இந்தியா தொடர்கிறதே என்று ஆதங்கப்படுவது தவறா என்ன?

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தீவிரவாத சக்திகளால் தாக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்படி இந்திய நாடாளுமன்றத்தையே தகர்த்தெறியும் திட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான அப்சல் குரு என்பவர் பிடிபட்டார். இது சர்வாதிகார நாடாக இருந்தால், அடுத்த சில நாள்களிலேயே அப்சல் குரு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.
நாடாளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்துக்கான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து, 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குற்றவாளியான அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை அளிப்பது எனத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலேயே விஷயம் முடிந்துவிடாதே; மேல்முறையீடு செய்வதற்காக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பது என்று 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இதற்குள் 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தடை விலக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடுவதற்கான நாளும் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, அப்சல் குருவின் மனைவி தபாசம், குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதுபோன்ற கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவர், தனக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்தக் கருணை மனுவை அனுப்புகிறார்.
இதெல்லாம் நடந்தது 2006-ம் ஆண்டில். மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி அப்சல் குரு தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசுக்கு அனுப்பி அந்த அரசின் கருத்தைக் கோருகிறது. தில்லி அரசுக்குப் போன அப்சல் குருவின் கருணை மனு தொடர்பான கோப்பு கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதின. பொதுநல சங்கங்கள் ஊர்வலங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊஹூம், அந்தக் கோப்பைப் பற்றிய பேச்சுமூச்சே காணோம்.
மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் திடீரென்று விழித்துக்கொண்டு தில்லி மாநில அரசுக்கு கோப்புப் பற்றி நினைவூட்டும். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு மீதான தில்லி அரசின் கருத்தைக் கேட்டும் தில்லி அரசு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறது.
இதுவே எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தால் இந்தக் காரணத்துக்காகவே அந்த ஆட்சியைக் கலைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 16 கடிதங்களை தில்லி அரசு பார்த்தும் பார்க்காமலும் இருந்தது என்றால், அதுவே நம்பும்படியாக இல்லை.
கடந்த மே மாதம் 18-ம் தேதி தில்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சில விளக்கங்களைக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். விளக்கங்கள் கிடைத்ததும் உடனடியாக தில்லி அரசு முடிவெடுத்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு வாரத்துக்கு முன்புதான் சற்று மனம்இறங்கி, குற்றவாளி அப்சல் குரு சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தில்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா.
அப்சல் குருவைத் தூக்கிலிடுவது என்கிற தீர்ப்பில் தங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "அப்சல் குருவைத் தூக்கிலிடுவதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி நன்றாக மறுபரிசீலனை செய்துவிட்டு முடிவெடுக்கவும்' என்று அவர் பரிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் பெரிய விந்தை.
அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க முயன்ற நாசகாரக் கும்பலைச் சேர்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர். அவரைத் தூக்கிலிடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறாரே தில்லி துணைநிலை ஆளுநர், அப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருக்கலாமே...
இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அப்சல் குருவுக்காக வருத்தப்படுவார்கள் என்றோ குரல் கொடுப்பார்கள் என்றோ யாராவது நினைத்தால், அப்படி நினைப்பவர்கள்தான் தேசத் துரோகிகள். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களைக் களங்கப்படுத்துவதும், அவர்களது தேசபக்தியைக் கொச்சைப்படுத்துவதும்தான் இப்படிக் கூறுபவர்களின் உள்நோக்கம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தூக்கிலிடுவதற்கு முன்னால் தீர யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், தவறான காரணத்தைக் காட்டி தீர்ப்பைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல. கருணை மனுவை காலவரையில்லாமல் ஒத்திபோடுவது நீதிக்கும் இழுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் இழைக்கப்படும் அநீதி.
தேசத்தை நேசிப்பதால் கோபம் வருகிறது. தூக்கிலிடப்பட வேண்டியது அப்சல் குருவையா, இவர்களையா? இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், இந்திய மக்களே கொதித்தெழுந்து நாடாளுமன்றத்தைத் தகர்த்தெறிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை மேலெழுகிறது...

நன்றி தினமணி தலையங்கம் 31 .08 . 2010

பெங்களூர் குண்டுவெடிப்புகள்: தீவிரவாதிகளுடன் தொடர்பை ஒப்புக் கொண்ட மதானி

ஆகஸ்ட் 27, 2010
பெங்களூர்: பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்குள்ள தொடர்பை கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பெங்களூரில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நாசீர், சர்பார் நவாஸ், முனாப், முஜீப், சக்காரியா ஆகியோரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மதானியிடம் ஆலோசனை நடத்திவிட்டே இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியதாக வாக்குமூலம் அளித்தனர்.


இதையடு்த்து மதானியையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் பெங்களூர் போலீசார் விசாரித்தபோது தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துவந்தார்.

ஆனால் மதானியுடன் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களை போலீசார் காட்டினர்.


இதையடுத்து மதானி அவர்களுடனான தொடர்பை ஒப்புத் கொண்டதாகத் தெரிகிறது.


பெங்களூர் குண்டு வெடிப்பு பற்றி எனக்கு முன் கூட்டியே தெரியும். இது தொடர்பாக அவர்கள் என்னிடத்தில் பேசினர். நான் அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினேன் என்று மதானி கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் ஊர்வலத்தை முடக்க திட்டம்- ராம.கோபாலன் புகார்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அரசு முடக்க நினைக்கிறது. 25 ஆயிரம் இடங்களில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.அரசு தடை விதித்தாலும் ஊர்வலம் நடந்தே தீரும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலன் தெரிவித்தார்.


திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் என்கவுன்டர் நடக்கிறது.குஜராத்தில் பா.ஜ., ஆட்சி நடப்பதால் அங்கு நடந்த என்கவுன்டர் குறித்து கொச்சைபடுத்தப்படுகிறது.முஸ்லிம்,கிறிஸ்துவர்கள் இந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆபத்தானது.போலி சாமியார்கள் பெருகிவிட்டனர்.யார் தவறு செய்தாலும் அது தவறு தான்.நீதிபதி தினகரன், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் போன்றவர்கள் மதம் மாறி சலுகைகளை அனுபவிக்கின்றனர்.இலங்கை அருகே சீனா கப்பல்தளம் அமைத்து வருகிறது. இது நமது நாட்டிற்கு ஆபத்தானது.தமிழகத்தில் 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆன்மிகம் சாராத பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசு வழங்க வேண்டும்.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அரசு முடக்க நினைக்கிறது. கடந்த ஆண்டில் வைத்த இடத்தை விட புதிய இடத்தில் சிலைகள் வைக்க கூடாது என்கின்றனர். மாநிலத்தில் 25 ஆயிரம் இடங்களில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். அரசு தடை விதித்தாலும் ஊர்வலம் நடந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ. மாநில துணை தலைவர் ராஜா, ஆர்.எஸ்.எஸ்.மாநில அமைப்பாளர் கேசவவிநாயகம், வி.எஸ்.பி., மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் பாலாஜி உடனிருந்தனர்.

தமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை


தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்களிடம் தமிழகத்தின் காஷ்மீர் எது என்று கேட்டால் சட்டென்று முத்துப்பேட்டை என்று சொல்லி விடுவார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியான முத்துப்பேட்டை, எப்போதும் போர்க்களம் போல் இருக்கிறது. முத்துப்பேட்டை, காஷ்மீர் என்றால் அதற்கு அருகில் உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி ஜம்மு போல இருக்கிறது. இரண்டு ஊரையும் பிரிக்கும் கோரையாறு இந்தப் போர்க்களத்திற்குச் சாட்சியாக மெல்ல சலசலத்துக் கொண்டிருக்கிறது. முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் மிகப்பெரிய தர்கா உள்ளது. நாகூர், ஏர்வாடிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தர்கா இதுதானாம். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் சந்தனக்கூடு விழா, அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இந்த சந்தனக்கூடு ஊர்வலமும், முஸ்லிம்களின் சுன்னத் ஊர்வலமும் ஹிந்துக்களின் கோயில் வழியாகவும், ஹிந்துக்களின் தெரு வழியாகவும் சர்வசாதாரணமாய் செல்கிறது. முத்துப்பேட்டையில் மிகப்பெரிய 13 மசூதிகள் உள்ளன. இந்த மசூதிகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹிந்துக்களால் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட சொத்துக்கள் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.


இங்கும் சுன்னத் ஊர்வலம் உள்ளிட்ட முஸ்லிம்களின் மத ஊர்வலங்கள், ஹிந்துக்களின் கோயில்கள் மற்றும் தெருக்களின் வழியாகச் செல்கிறது. ஹிந்துக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடையில் ஹிந்துக்களின் வீட்டில் விசேஷம் என்றால் முஸ்லிம் சமையல்காரர்களைக் கொண்டே அசைவம் சமைக்கிறார்கள். முஸ்லிம் சமையல்காரர்கள் சமைக்கவில்லை என்றால், அவர்கள் சாப்பிட மாட்டார்களாம். முத்துப்பேட்டை லயன்ஸ் கிளப்பில் ஓரிரு முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஓரிருவருக்காக லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் சமையல்காரரைக் கொண்டுதான் சமைக்கிறார்கள்.

இப்படி ஹிந்துக்கள் எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், முஸ்லிம்கள் ஹிந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகின்றனர். 1990ல் இங்கு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் காலூன்றியவுடன் ஹிந்துக்களின் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. அதன் பிறகுதான் ஹிந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாகக் கொண்டாட ஆரம்பித்தனர். முஸ்லிம்களின் ஊர்வலங்கள் ஹிந்துக்களின் கோயில்கள் வழியாக தடையின்றிச் செல்கிறது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் தடுக்கின்றனர். காவல்துறையும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே ஒவ்வொரு வருடமும் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் உள்ளூர் இந்துக்கள்.

2002ல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கலந்து கொண்டார். அப்போது ஒரு முஸ்லிம் அரவாணியின் கைகளை முஸ்லிம்களே வெட்டி அந்த ரத்தத்தில், `ஓம் காளி, ஜெய் காளி' என்று எழுதி அந்தப் பழியை ஹிந்துக்கள்மீது போடப் பார்த்துள்ளனர். உண்மையை போலீசார் கண்டுபிடித்ததால் முஸ்லிம்களின் சதித்திட்டம் அம்பலமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை மசூதியில் சாக்கடை தோண்டியபோது மூன்று குண்டுகள் வெடித்தது. போலீசாரின் உதவியுடன் இந்தச் செய்தியை மூடிமறைத்து விட்டனர். `முத்துப் பேட்டை மசூதியில் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன' என்பதற்கு இது ஆதாரம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.முத்துப்பேட்டையில் இப் போது செருப்புக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுடன் தொடர்பிருப்பதாக சில போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.இந்த நபர் லண்டனில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர்.
ஒவ்வொரு வருடமும் கடும் போராட்டங்களுக்கிடையே, போலீஸ் படைகளுக்கு மத்தியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் நடக்கிறது. விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துவிட்டு திரும்பும்போது ஹிந்துக்களின்மீது முஸ்லிம் குண்டர்கள் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசுவது வழக்கமாக நடக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு விநாயகர் சிலைகளைக் கரைத்துவிட்டு திரும்பும்போதும் இதுபோல முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதனால் கொதித்தெழுந்த ஹிந்துக்கள் அன்றைய தினமே தாக்குதல் நடத்திய முஸ்லிம்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசிடம் ஊர்வலமாகச் சென்று புகார் மனு கொடுத்தனர்.

ஹிந்துக்களின் புகார் மனுவுக்குப் போட்டியாக, மறுநாள் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக வந்து ஹிந்துக்கள்மீது போலீசில் புகார் கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் ஹிந்து தெய்வங்கள் மற்றும் உள்ளூர் ஹிந்துப் பெரியவர்கள் பற்றி ஆபாசமாகக் கோஷமிட்டுள்ளனர்.

முத்துப்பேட்டையில் ஹிந்துக்களுக்கு எதிரான கும்பலுக்கு தலைமை வகிக்கும் பொட்டை பஷீர் என்பவன், பல நேரங்களில் எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் காரில் பகிரங்கமாக உலா வருவானாம். இந்த பொட்டை பஷீர் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொட்டை பஷீர் கைதானதால் கோபமடைந்த முஸ்லிம்கள், ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பா.ஜ.கவின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான கருப்பு என்கிற முருகானந்தத்தையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.


ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கலவரங்களைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் எத்தனை முஸ்லிம்களை கைது செய்கிறார்களோ, அதே எண்ணிக்கையில் ஹிந்துக்களையும் போலீசார் கைது செய்கின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஹிந்து இளைஞர் ஒருவரை முஸ்லிம்கள் வெட்டி விட்டனர். இதற்காக முஸ்லிம்களில் 32 பேரை கைது செய்த போலீசார், 32 ஹிந்துக்களையும் கைது செய்தனர்.

மிகப்பெரிய பயங்கரவாதியான பொட்டை பஷீரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், அப்பாவியான மகேஷ் என்ற 28 வயது இளைஞரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். எந்தத் தவறும் செய்யாத இந்த அப்பாவி இளைஞர், கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் அமைப்புகளின் போஸ்டர்களும், `உணர்வு', `மக்கள் உரிமை' போன்ற முஸ்லிம் பத்திரிகைகளின் விளம்பரப் போஸ்டர்களுமே கண்ணில் படுகின்றன. கடந்த 2005ம் ஆண்டு பொட்டை பஷீர் தலைமையில் முஸ்லிம்கள் , `12-09-05 அன்று நடக்கவிருக்கும் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த விடக்கூடாது. முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களுக்கு நிகராக ஹிந்துக்களை வாழவிடக் கூடாது. இஸ்லாமியர்களின் கொள்கை களுக்கும், நடவடிக்கைகளுக்கும் இடையூறாக இருக்கும் எந்த மதத்தினரையும் உயிருடன் வாழவிடக் கூடாது. இஸ்லாமிய இனத்தையும், மதத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு இஸ்லாமியனும் ரத்தம் சிந்தத் தயங்கக் கூடாது. இந்த நாடு துண்டானாலும் கவலை இல்லை' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அதோடு இந்த உறுதிமொழியைத் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து முஸ்லிம் களிடம் விநியோகித்துள்ளனர்.

எப்படியாவது விநாயகர் ஊர்வலத்தைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கடந்த 2005ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம் விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தைத் தடுக்க பல வழிகளில் முஸ்லிம்கள் முயன்று வருகின்றனர். விநாயகர் சிலைகளை அந்தந்த ஊரிலேயே கரைக்க வேண்டும், ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டை பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டு வாழ்க்கைப் படகை நகர்த்திக் கொண்டு வருகிறார்கள் முத்துப்பேட்டை ஹிந்துக்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் போராடி வருகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை.

பிரிவினைவாதத்துக்கு துணை போகிறதா மத்திய அரசு?

காஷ்மீரில் தொடர்ந்து போலீஸுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. போலீஸார் மீது மக்கள் கல்லெறிந்து, வன்முறையில் ஈடுபடுவதும், மக்களைக் கட்டுப்படுத்த போலீஸ் முனைவதும், சில உயிரிழப்புகள் ஏற்படுவதும் – கிட்டத்தட்ட தினந்தோறும் நடக்கிற நிகழ்ச்சிகளாகி விட்டன. காஷ்மீரில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அவ்வப்போது நிகழ்ந்தாலும், இப்போது நடப்பது, சாதாரண மக்களே பங்கேற்கிற நிகழ்ச்சிகள் என்று சொல்லப்படுகிறது. இருக்கலாம். தீவிரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகளின் தூண்டுதலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


போலீஸார் ஒரு குடிமகனைச் சுட்டு வீழ்த்தியதுதான் இந்தக் கலவரங்களுக்கு ஆரம்பம் என்று கூறப்பட்டாலும், பிற சக்திகளின் தூண்டுதல் இல்லாமல், பல நாட்களாக மக்களின் ‘கோபம்’ இப்படி தொடர்ந்து கொண்டிருக்காது என்றே தோன்றுகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலையில், ஒரு அரசு, கலவரத்தை அடக்குகிற வழிமுறைகளைத்தான் உடனடியாகக் கவனிக்க வேண்டும். ஆனால், நமது மத்திய அரசோ, இந்தச் சமயம் பார்த்து ‘சர்வ கட்சிகளுடன் ஆலோசனை; காஷ்மீருக்கு சில விசேஷ சலுகைகள்...’ என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறது. பிரதமர், ‘காஷ்மீருக்கு சுயாட்சி தருவது பற்றி யோசிக்கத் தயார்’ என்று கூறுகிறார். இதைவிட கையாலாகாத்தனம் வேறு இருக்க முடியாது. மக்கள் தொடர்ந்து போலீஸாருடன் மோதுகிறார்கள் என்றால் – அதற்கு முக்கிய காரணம், ‘இந்த மத்திய அரசு கோழைத்தனமானது’ என்ற எண்ணம்தான்.

‘தீவிரவாதிகளுக்கு எதிராக விசேஷ சட்டம் வேண்டாம் என்று கூறி, ‘பொடா’ சட்டம் ரத்து; பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில், முதல் குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை, வேண்டுமென்றே நிறைவேற்றப்படாமல் இருப்பது; குஜராத் போலீஸாரால் வீழ்த்தப்பட்ட இர்ஷாத் ஜஹான் தீவிரவாதத் தொடர்புடையவர் என்றும், பின்னர் இல்லை என்றும் நீதிமன்றத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பிரமாணப் பத்திரம் அளிப்பது; ஒரு தீவிரவாதியின் மரணத்தை, ஒரு அப்பாவியின் மரணமாகச் சித்தரித்து, குஜராத் அரசை ஆட்டம் காணச் செய்யப்படுகிற முயற்சி; நக்ஸலைட்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்தலாமா கூடாதா என்று பேசிக் கொண்டேயிருப்பது; நக்ஸலைட் பிரச்சனையை அணுக வேண்டிய முறை குறித்து, ஆளும் கட்சியிலேயே உள்ள வாதப் பிரதிவாதம் பொதுமேடைகளில் அரங்கேறுவது...’ என்றெல்லாம் ஓர் அரசு செயல்படுகிறபோது, அந்த அரசின் மாட்சிமையை எதிர்ப்பவர்களுக்கு அச்சமோ, தயக்கமோ உண்டாகுமா என்ன?
இந்த உறுதியற்ற அணுகுமுறையைக் கைவிட்டு, கலவரத்தை ஒடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ‘சுயாட்சி தருவது பற்றி யோசிக்கிறோம்’ என்கிறார் பிரதமர்.
காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள விசேஷ சலுகைகள் நிரந்தரமானவை அல்ல. அவை தாற்காலிகமானவையே என்று அரசியல் சட்டமே கூறுகிறது. சில வருடங்களில் போயிருக்க வேண்டிய அந்தச் சலுகைகளை நீக்குவதை விட்டு, ‘சுயாட்சி’ தருவதாகக் கூறுவது, மிகவும் பொறுப்பற்ற பேச்சாக இருக்கிறது.

நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்க வேறு வழியே வேண்டாம். இன்று காஷ்மீருக்கு சுயாட்சி என்றால், நாளை அஸ்ஸாமுக்கு சுயாட்சி, அடுத்த நாள்... என்று ‘சுயாட்சிப் பட்டியல்’ நீண்டு கொண்டே போகும். காஷ்மீரில் சுயாட்சி என்பது, சுதந்திரம் என்ற கோஷத்திற்குப் பாதை அமைக்கும்.
பிரதமர் பலவீனமானவர் என்று அத்வானி வர்ணித்தபோது, நாட்டில் பலர் அதை ஏற்கவில்லை; அப்படிப்பட்டவர்களுக்கு, அத்வானியின் விமர்சனத்தில் உள்ள உண்மையை, பிரதமர் நிரூபிக்காமல் விட மாட்டார் போலிருக்கிறது.
 
நன்றி-துக்ளக் 23 .08 .2010

தமிழக சிலைகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை

சென்னை: தமிழகத்தின் புராதனமான சாமி சிலைகளைக் கடத்தி அமெரிக்காவில் விற்று வரும், நியூயார்க்கில் வசிக்கும் இந்தியரைக் கைது செய்ய தமிழக போலீஸார் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர்.


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த சுபாஷ் கபூர் (62), நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். நியூயார்க் மடிசன் அவென்யூவில் ஒரு மியூசியமும் சிலைகள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார்.
உலகின் பல்வேறு நாட்டு அருங்காட்சியகங்களுக்கும் சுபாஷ் சிலைகளை விற்று வருகிறார்.
இந் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பழமை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் சாமி சிலைகள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிலை திருட்டு கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையிடம் சஞ்சீவி அசோகன் என்ற நபர் சி்க்கினார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, திருச்சி , தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகளை திருடி, வெளிநாடுகளில் விற்றது தெரியவந்தது.
இந்த சிலைகளில் 90 சதவீதத்தை சுபாஷ் கபூரிடம் தான் விற்றதாக சஞ்சீவி அசோகன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சிலைகளை பார்வையிட்டுவிட்டுச் செல்ல அவர் பலமுறை தமிழ்நாட்டுக்கும் வந்து சென்றது உறுதியாகியுள்ளது.
அவர் பார்த்து ஓ.கே. சொன்ன பின் சிலைகளை சர்வதேச கும்பல்கள் மூலம் கடத்துவது சஞ்சீவி அசோகனின் வேலையாக இருந்துள்ளது. இப்போது அசோகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தமிழ்நாட்டின் அரிய சாமி சிலைகளை திருடப்பட்ட சம்பவங்களில் சுபாஷ் கபூருக்கு நேரடி தொடர்பு இருப்பதால் அவரை பிடிக்க தமிழக போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுபாஷ் கபூரை கைது செய்ய ஜெயங்கொண்டம் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பேரில் சுபாஷ் கபூரை கைது செய்ய சிபிஐ மூலமாக இன்டர்போலை தமிழக காவல்துறை நாடியுள்ளது.

நம்பர் 10, ஜன்பத் பீதி! அம்மாவும் மகனும் திடீர் மாயம் ஏன்?

காஷ்மீர் மீண்டும் பற்றி எரிகிறது... நாடாளுமன்றம் விலைவாசி உயர்வுப் பிரச்னையால் கொதிக் கிறது... காமன்வெல்த் விளையாட்டுத் திடல்கள் ஊழல்களாலும் கொட்டும் மழையாலும் ஒழுகு கிறது...

எரிகிறது! கொதிக்கிறது! ஒழுகுகிறது! இவ்வள வும் நடக்கும்போது இந்தியாவை ஆளும் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் காணவில்லை என்பது வெறும் வதந்தி அல்ல!


நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து சூடாகப் பேசும்போது, ஆளும் கட்சி தரப்பில், குறிப்பாகக்
கட்சியின் தரப்பில் விளக்கம்அளிக்கப்பட வேண்டும். ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் சபைக்கு ஆஜராக வேண்டும்'' என்று கேட்டுக்கொண்ட சோனியாவையே சபையில் காண வில்லை. கூடவே எதிர்காலத் தலைமையான ராகுல் காந்தியின் இருக்கையும் காலி.
'பிரதமர் இருக்கிறார்... நிதி அமைச்சரும் இருக்கிறாரே...' என்று நீங்கள் நினைக்கலாம். இவர்கள் இரண்டு பேரும் முறையே சீஃப் எக்ஸ்கியூட்டிங் ஆபீஸர் மற்றும் எக்ஸ்கியூட்டிங் ஆபீஸர் ரீதியில் இருக்கின்றனர். அரசாங்கத்தின் செயல் அதிகாரிகளைவிட இதை இயக்குபவர் முக்கியம். கட்டளை போடுபவரும் கொள்கையை உருவாக்குபவருமான சோனியா காந்தி எங்கே? எதிர்க்கட்சியான பி.ஜே.பி. முன்பு பெண்கள் மசோதா, விலைவாசிஉயர்வு, இந்திய அமெரிக்க ஒப்பந்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளில் நெருக்கடிகளைக் கொடுக்கும்போது, கட்சித் தலைமையான சோனியா முன்வரிசையில் இருந்தபடி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, 'இப்படிச் சொல்லுங்கள்... அப்படி நடந்துகொள்ளுங்கள்...' என்று தகவல்களை கொடுத்துக்கொண்டு இருந் தார். இப்படிப்பட்ட டைரக்ஷன்கள் இம்முறை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிஸ்ஸிங். கிட்டத்தட்ட ஒரு வாரம் நாடாளுமன்றம் தடைப்பட்டது. இந்த சமயத்தில் சோனியா, ராகுல் எங்கே என்று கேட்கப் பட்டபோது காங்கிரஸ் பேச்சாளர்கள், ''கட்சியில் எத்தனையோ அமைப்புகள், பொறுப்புகள் உண்டு. கட்சித் தலைமை அவற்றில் கவனம் செலுத்தச் சென்றிருக்கலாம். நாடாளுமன்றத்தில் முக்கியப் பிரச்னைகள் இருக்கும் போது, அவர்கள் வரவில்லையென்றால், இவற்றைவிட முக்கியமான காரணங்கள் இருக்கலாம்!'' என்று சமாதானம் சொன்னார்கள்.
இதுவாவது பரவாயில்லை.. இந்தியாவுக்கு வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை சோனியா காந்தி சந்திக்கவில்லை. இது ஆச்சர்யமாக இருந்தது.அரை மணி நேரத்தைக்கூட ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு என்ன தலைபோகிற வேலை இருந்திருக்கும் என்று நாமும் விசாரணையில் இறங்கினோம்.
சோனியா காந்தியின் தாயாரான பாலோ மெய்னோவுக்கு உடல் நிலைசரியில்லை. சோனியா தனது குடும்பத்துடன் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்கிற தகவல் முதலில் கிடைத்தது. பாலோ மெய்னோ வுக்கு 81 வயது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவேண்டியது இருப்பதால் சோனியா, அவர்களுடன் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளார் என்றார்கள்.ஆனால், சோனியா 'அவுட் ஆஃப் இந்தியா' விவகாரத்தில் வேறு சில வதந்திகளும் காரணங்களும் கிளப்பப்படுகின்றன. ராஜீவ் காந்தியோடு டூன் ஸ்கூலில் ஒன்றாகப் படித்தவரும் முன்னாள் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையாளருமான சுமன் துபேயின் மகன் திருமணமும் வரவேற்பும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. அந்த விஷேசத்துக்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் அமெரிக்கா சென்றுள்ளது என்றும் சொல்கிறார்கள். சுமன் துபே, ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, ராஜீவ் அதிகாரத்தில் இருக்கும்போது அவருடைய முக்கிய ஆலோச கராகவும் இருந்தவர். இந்த நட்பு சோனியா, ராகுல் வரை தொடருகிறது. ஆனால், பொதுவாகத் திருமண வரவேற்புகள் ரகசியமாக இருப்பதில்லை. வெளிப்படையாகவே நடக்கும். சுமன் துபே தரப்பினரும் இந்த நிகழ்வுகளை உறுதி செய்ய மறுக்கின்றனர்.

இவற்றையெல்லாம் தாண்டி மற்றொரு செய்தியும் உலாவருகிறது. அது ராகுல் காந்தியின் திருமணம். இது திருமணமா... அல்லது நிச்சயதார்த்தமா என்கிற சந்தேகம் டெல்லி மேல்மட்டங்களோடு பழகுபவர்களுக்கு இருக்கிறது. சோனியா, ராகுல் ஆகியோரின் செயலாளர்கள் விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் அவரவர் ஊர்களுக்கும் சொந்தப் பணிகளுக்கும் சென்றுவிட்டனர். அவர்களிடமும் இதை உறுதிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது. இதனாலும் கிடைத்த தகவல்களில் எது உண்மை என்கிற குழப்பம் நிலவுகிறது.

ராகுல் காந்தி விரும்பிக் காதலித்தது ஸ்பானிஷ் பெண்மணியை. ஆரம்பத்தில் கொலம்பியா பெண்மணியைக் காதலிப்பதாகத் தகவல் வந்தது. இரண்டும் வேறு வேறு என்று சொல்லப்பட்டு பின்னர், அதுதான் இது, இதுதான் அது என்றும் சொல்லப் பட்டது.

இந்த விவகாரத்தில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வாய் திறக்காத வரை வதந்திகள் வந்துகொண்டேதான்இருக்கும்!

 

பாகிஸ்தானில்தான் இருக்கிறார் பின்லேடன்-பழங்குடிப் பகுதியே அல் கொய்தாவின் தலைமையிடம்

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினப் பகுதிதான் அல் கொய்தாவின் சர்வதேச தலைமையிடமாக திகழ்கிறது எனக் கூறியுள்ளார் அமெரிக்க ராணுவத்தளபதி மைக் முல்லன்.


இதுகுறித்து அவர் கூறுகையில், ஒசாமா பின் லேடனும், அவருடைய தளபதியுமான ஈமான் அல் ஜவாஹிரி ஆகியோர் பாகிஸ்தானில்தான் பதுங்கியுள்ளனர். இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இதன் காரணமாகவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை நாங்கள் தொடர்ந்து குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறோம். அந்தப் பகுதிதான் தற்போது அல் கொய்தா அமைப்பின் சர்வதேச தலைநகரமாக திகழ்கிறது என்றார் மைக் முல்லன்.


சமீபத்தில் இஸ்லாமாபாத் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும் இதேபோல கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்

ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42)ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார்.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார்.

“ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு சென்று பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகங்களில் கலந்து கொண்டார்.

டெல்லி அருகே உள்ள ஹரி மந்திர் ஆசிரமம் சென்று சாமியார் தரம் தேவிடம் ஆசி பெற்றார்.தரம் தேவ் ஜூலியாவுக்கு இந்து மத தத்துவங்கள் ஆழகாக எடுத்துக்கூறினார். பூஜை,யாகம், அபிஷேகங்களின் மகத்துவம் பற்றி விளக்கினார்.இதனால் ஜூலியாவுக்கு இந்து மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டது.
 இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.
தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார். இது பற்றி ஜூலியா ராபர்ட்ஸ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.
ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார்.
ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.

ஓவியங்களை திருடியதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது குற்றசாட்டு

ஆகஸ்ட் 6, 2010
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உலகப் புகழ் பெற்ற பாகிஸ்தான் ஓவியரின் ஓவியங்களைத் திருட உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மறைந்த ஓவியர் லைலா ஷாஸதாவின் மகள் ஷாஹின். இவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அதிபர் சர்தாரி மீது திருட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஷாஹினின் இல்லம் கராச்சியில் உள்ளது. அங்கு தான் லைலாவின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 1994ம் ஆண்டு சர்தாரி, ஷாஹினின் சகோதரருடன் சேர்ந்து 93 ஓவியங்களைத் திருடி, லண்டனுக்கு கப்பலில் கொண்டு சென்றதாக புகார் கூறியுள்ளார்.

சர்தாரி தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு ஷாஹின் லண்டன் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜகவின் போராட்டங்கள் யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல: பொன். ராதாகிருஷ்ணன்
திருத்துறைப்பூண்டி, ஜூலை 24: பாஜகவின் போராட்டங்கள் மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல என்றார் அக்கட்சியின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
    சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போல, இந்து மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், கோரிக்கை பொது விளக்கக் கூட்டமும் சனிக்கிழமை நடைபெற்றது.
    அப்போது, கூட்டத்துக்குள் திடீரென புகுந்த நோயாளிகள் யாரும் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தால் தகராறு ஏற்பட்டு, மறியல், தடியடி நடத்தப்பட்டது. கல்வீச்சும் சம்பவமும் நடைபெற்றது.
    இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
    இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல இந்தப் போராட்டங்கள்.
      காவல் துறையினரின் அனுமதி பெற்றே, இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
திருத்துறைப்பூண்டியில் அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிலர் திட்டமிட்டு செயல்பட்டனர்.
     கூட்டத்துக்குள் புகுந்த வாகனத்தின் ஓட்டுநர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்ததை தொடர்ந்து, பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை என்றார் அவர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? இதற்கான பதில் நேற்றுவரை தஞ்சை என்பதுதான். ஆனால், இனிமேல் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா என்பதில் ஐயம் இருக்கிறது. ஏனென்றால், தஞ்சை டெல்டா பகுதியில் மிகக் குறைவாகவே குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.
இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.
மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து,  அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.
அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல்  கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக்  கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள்.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.
குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.
அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.
அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).
தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார். இது என்ன முரண்?

உணர்ந்தால்தானே...

தீவிரவாதிகளுக்குத் தேவைப்படும் பணம், வளர்ந்த நாடுகளிலிருந்துதான் போகிறது என்பதால் தங்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குப் போகும் பணம் எதற்காகக்  கொடுக்கப்பட்டது என்பதைத் துருவித்துருவிப் பார்ப்பதில் அமெரிக்க அரசு மிகவும் கறாராக இருக்கிறது. இப்படியான ஒரு கணக்கு வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த "கன்ட்ரோல் காம்பனன்ட் இன்க்' என்ற நிறுவனம், தான் வெளிநாடுகளுக்கு அளித்த பணம் தனது நிறுவனத்துக்கு ஆர்டர்கள் பெறுவதற்காகக்  கொடுக்கப்பட்ட லஞ்சம் என்று பட்டியலோடு, பணத்தின் அளவையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
சரி, அதனால் என்ன? என்று கேட்கலாம். அந்தப் பட்டியலில் பல இந்திய நிறுவனங்களின் பெயர்கள் இருக்கின்றன என்பதும், அவர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட விவரமும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதும்தான்.
இந்த அமெரிக்க நிறுவனம் மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவைப்படும் வால்வுகளைத் தயாரிக்கிறது. இந்த வால்வுகளுக்கு மின்நிலையங்கள் உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும்போது, இந்த நிறுவனமும் தனது விலையைக் குறிப்பிட்டு, ஒப்பந்தம் கோருகிறது. ஆனால், தனக்கு மட்டுமே இந்த ஆர்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறது. 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியா, சீனா, கத்தார் உள்பட 36 நாடுகளுக்கு இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றி, தனது வால்வுகளை விற்பனை செய்துள்ளது இந் நிறுவனம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நவரத்தின நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட், மகாராஷ்டிர மாநில  மின்வாரியம், ஹரியாணா மாநில மின்வாரியம், தேசிய அனல் மின்னுற்பத்திக் கழகம், பிலாய் எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ள மிக முக்கியமான நிறுவனங்கள். இதில் லஞ்சம் வாங்கியவர்கள் யார், எவ்வளவு தொகை என்பது இந்நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், இப்போதைக்கு அதை அமெரிக்க நீதிமன்றம் வெளியில் தெரிவிக்காது.
இருப்பினும், தேசிய அனல் மின்னுற்பத்திக் கழக (என்.டி.பி.சி.) சிபட் நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையத்துக்காக 1.63 லட்சம் அமெரிக்க டாலர்களை இரு தவணையாக அளிக்கப்பட்டதும், அதை மாஸ்கோவில் அலுவலகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் பொறுப்பாளர் விளாதிமிர் பாதென்கோ மூலம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தாலும்கூட, இந்த அதிகாரிகள் வெறும் தேனை எடுத்து புறங்கை நக்கியவர்களாக இருப்பார்களே தவிர, தேன் அடையை முழுமையாக எடுத்துச் சென்றவர்கள் நிச்சயமாக அரசியல் பின்புலம் உள்ளவர்களாக மட்டுமே இருக்க முடியும். இவர்களால்தான் வெளிநாட்டில் நிறுவனத்தைத் தொடங்கவும், அமெரிக்க டாலர்களை அப்படியே வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கவும் முடியும். இதையெல்லாம் உயர் அதிகாரிகள்  செய்வது மிகவும் கடினம்.
வெளிநாடுகளில் நிலக்கரி வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதி, ஆயுதங்கள் வாங்குவது, முக்கியமான கருவிகளை உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி வாங்குவது, அல்லது இந்தியாவில் அணைகள் அல்லது மிகப்பெரிய பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றுக்காக உலக ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, அயல்நாட்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்துவது ஆகிய அனைத்திலுமே இதுபோன்று கையூட்டுகள் அளிக்கப்படுகின்றன என்பதும், இவற்றை இந்திய மண்ணுக்குள் கொண்டுவராமல் மோரிஷஸ், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளாக மாற்றிக் கொள்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஓரளவு அரசியல் அனுபவம் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தேர்தல் நேரங்களில் இந்தக் கருப்புப் பணம் ஓரளவுக்குக் களத்தில் இறக்கிவிடப்பட்டாலும், மீதிப் பணம் இந்த அரசியல்வாதிகளின் முதலீடாக வெளிநாட்டு வங்கிகளிலேயே இருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இல்லாத போதும், அரசியலில்  இல்லாதபோதும் இந்தப் பணம் அவர்களுக்குத் துணையாக இருக்கிறது.
அரசியல்வாதிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், இந்த மோசடியை ஒப்பிட்டுப்பார்க்கையில் மிகச்சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு மிகப்பெரும் பழியை ஏற்றுக்கொள்வதோடு, அதிகாரிகளின் வர்க்கத்துக்கே அவப்பெயரையும், தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள். தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டுவதும், கவசமாக இருந்து காப்பாற்றுவதும் மட்டுமே தங்களது கடமை என்று கருதும் அதிகார வர்க்கத்தை யார் திருத்துவது?
தாராளமயமாக்கல் என்கிற பெயரில் தாராளமயமாக்கப்பட்டிருப்பது வர்த்தகம் மட்டுமல்ல. முறைகேடான வியாபார உத்திகளும், 20 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத கையூட்டுகளும், இந்தியாவின் இறையாண்மைக்கும், மக்களாட்சித் தத்துவத்துக்கும் உலை வைக்கும் திட்டங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் போன்றவையும் அரங்கேறி இருப்பதற்குக் காரணமே தாராளமயமாக்கப்பட்ட உலகமயக் கொள்கைதான். பொதுத்துறை வங்கிகள்கூட, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கி லாபம் ஈட்டுவதைக் கைவிட்டுவிட்டு, வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் கசக்கிப் பிழிந்து, ஆசைகாட்டி மோசம் செய்து லாபத்தைக் காட்டலாம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
இப்போது வெளிவந்திருப்பது அதிகார வர்க்கத்துக்கு அளிக்கப்பட்ட கையூட்டு. வெளிவராமல் இருப்பது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு வங்கிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் பங்குத் தொகை. ஆட்சியில் அமர்ந்த 15 நாள்களில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வதாகச் சொன்ன பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று கருதப்படுபவர். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்குத் தரப்படும் வாக்குறுதிகள் மட்டும்தான் நினைவில் தங்குகின்றன. இந்திய மக்களுக்குத் தரும் வாக்குறுதிகளை மறக்காமல் இருக்க அவர் என்ன மக்களைச் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகிப் பிரதமரானவரா? இல்லையே.
இப்படியே போனால் 540 மக்களவை உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கி ஒரு கைப்பாவை அரசை வைத்து ஆட்சி நடத்தி, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பாணியில் ஒரு வல்லரசுச் சுரண்டல் நடைபெறுவதுகூட சாத்தியமாகிவிடுமே. இந்தியாவைக் காப்பாற்றியாக வேண்டிய பெரும் பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது. உணர்ந்தால்தானே!

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்


ராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது

வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்


ஆகஸ்ட் 3, 2010
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவில் அருகே பஞ்சலோகத்தால் ஆன சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற மாதா கோவில் ஆர்ச் அருகில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரில் உள்ள வெற்றிடத்தை ஆரோக்கிய சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் விலைக்கு வாங்கினார்.

அந்த இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ஆரோக்கியசாமி. வீட்டின் அஸ்திவாரத்துக்கு குழி தோண்டியபோது, 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.


இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கும் கிடைத்தது. அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் முனியநாதன் முன்னிலையில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் மீண்டும் தோண்டினர். அப்போது மேலும் 10 சாமி சிலைகள் கிடைத்தன.
இதையடுத்து, அந்த இடத்தில் மேலும் சிலைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சிலைகள் ஒவ்வொன்றும் 3 அடி உயரம் கொண்டவையாக உள்ளன. நடராஜர், விநாயகர் மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் இவை. சிலைகளுக்கு அருகே சில அலங்காரப் பொருட்களும் கிடைத்துள்ளன.

விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்-அரவிந்தன் நீலகண்டன்

இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக தாமோதர சவார்க்கர்(1883ெ1966). மெக்காலேயிஸ்ட் போலி மதச்சார்பற்ற அரசு அதன் தொடக்க காலங்களிலிருந்தே வீர சவார்க்கர் மீது அனைத்து விதமான அவதூறு பிரச்சாரங்களையும் செய்து வந்தது. பின்னர் அரசு அதிகாரம் காங்கிரஸ் மற்றும் அதன் நகலிகளிடமிருந்து மாறியதும் இப்பிரச்சாரம் இடதுசாரி அறிவு ஜீவிகளாலும் அவர்களது சில மேற்கத்திய நண்பர்களால் 'ஆராய்ச்சி ' என்ற போர்வையிலும் நடந்து வருகிறது.

வீர சவார்க்கர் ஒரு பிரிட்டிஷ் அடிவருடி (உதாரணமாக ராம் புண்யானி மற்றும் ப்ரண்ட்லைன்) என்பதிலிருந்து அவர் ஒரு இனவெறி பிடித்த நாஜி கோட்பாடுடையவர் (இத்தாலிய 'ஆராய்ச்சியாளர் ' மார்ஸியா கஸோலாரி) என்பது வரை இப்பிரச்சாரம் பல மேடைகளில் பல உருவங்களில் பரப்பப்படுகிறது. அண்மையில் தீராநதி ராம் புண்யானியின் வழக்கமான இந்த குற்றச்சாட்டினை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாது வெளியிட்டு தன் அறிவுஜீவி தர்மத்தை நிலை நாட்டியுள்ளது.
ஆனால் உண்மை என்ன ? வீர சவார்க்கர்தான் எப்படிப்பட்டவர் ?
ஹிந்துத்வ சித்தாந்த தந்தை என்றறியப்படும் வீர சவார்க்கர் குறித்த முதல் பிரச்சார அவதூறு அவரால் பிரிட்டிஷ் அரசிற்கு 1913-இல் அளிக்கப்பட்ட கருணை காட்டக் கோரும் மனு குறித்தது. தன் புரட்சி நடவடிக்கைகளை முழுவதுமாக துறந்து பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடப்பதாக அம்மனுவில் வீர சவார்க்கர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ச்சியாக நடந்த நிகச்சிகளில் இம்மனுவும் ஒன்று. இதன் முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகளை வசதியாக வெட்டி எறிந்து விட்டு காட்டப்படுகையில் பிரிட்டிஷ் அரசிடம் சவார்க்கர் சரணடைந்து விட்டதாக உணர்த்தும் இதே நிகழ்ச்சி சங்கிலித்தொடரென நடந்த நிகழ்ச்சிகள் வரிசைபடுத்த படுகையில் அதற்குரிய சரியான முக்கியத்துவம் அல்லது முக்கியமற்ற தன்மையை பெறுகிறது. அந்நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

ஜூன் 8, 1909 வீர சவார்க்கரின் அண்ணன் கணேஷ் தமோதர சவார்க்கருக்கு 25 வருட சிறைத்தண்டனை (ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது.

டிசம்பர் 4,1910 வீர சவார்க்கருக்கு 25 வருட சிறைத்தண்டனை (ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது

ஜனவரி 30,1911 வீர சவார்க்கருக்கு மற்றொரு 25 வருட சிறைத்தண்டனை (இரட்டை ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது.

நவம்பர் 14,1913 வீர சவார்க்கர் கையெழுத்திட்ட கருணை மனு சமர்ப்பிக்கப்படுகிறது ( 'சட்டரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிரிட்டிஷ் அரசின் மிக்க விசுவாசமான ஊழியனாக இருப்பேன். ')

1914 சிறை ஆவணக்குறிப்பு 'பிரிட்டிஷ் அரசிற்கு எதிரான ராஜ துரோக இலக்கியங்களை சிறைக்கு ள் பரப்பிய காரணத்துக்காக சவார்க்கருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. ' 1

1923 இந்திய தேசிய காங்கிரஸ் வீர சவார்க்கரின் உடனடி விடுதலையைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.
ஜனவர் 6, 1924 (இரத்னகிரி மாவட்டத்திற்கு வெளியே செல்லகூடாது என்பது போன்ற) நிபந்தனையுடனான விடுதலை

ஆக, உலகெமெங்கும் புரட்சியாளர்கள் பயன்படுத்தும் 'பதுங்கியிருந்து பாயும் ' தந்திரத்தையே வீர சவார்க்கர் கையாண்டார் என்பது தெளிவு. தன் கருணை மனுவிற்கு பிறகும் வீர சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக புரட்சி நடவடிக்கைகளை கைவிடவில்லை என்பதற்கு தெள்ளத் தெளிவான ஆவண ஆதாரங்கள் இருந்த பின்பும் கூட 1913-இன் கருணை மனு வாசகங்களை வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இந்த போலி வரலாற்றாசிரியர்களும், இவ்வுண்மைகளை எவ்வித ஆய்வுமின்றி மக்களிடையே தங்களுக்கு அறிவு ஜீவி ஜிகினாத்தன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே பரப்பும் பத்திரிகைகளும் இன்று அனுபவிக்கும் விடுதலை வீர சவார்க்கரின் குடும்பம் தன்னைத்தானே அழித்ததன் விளைவாக கிடைத்த ஒன்றுதான் என்பது ஒரு இந்திய முரண்நகை.

மார்ஸியா கஸோலாரி போன்றவர்களால் கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு வீர சவார்க்கரின் நாஜி மற்றும் பாசிச கோட்பாட்டு ஈர்ப்பும் அதன் அடிப்படையில் இனவாத ரீதியில் சமைக்கப்பட்ட இந்திய கோட்பாடே சவார்க்கரிய ஹிந்துத்வம் என்பதும்.

வீர சவார்க்கரின் 'ஹிந்துத்வம் ' (1917/1923) எனும் நூல் ஹிந்துத்துவ சித்தாந்த பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல். ஆனால் ஹிந்து தேசியத்தின் வேர்கள் அதைக்காட்டிலும் வயதானவை. நவீன அரசியல் சித்தாந்தமாக ஹிந்து தேசியத்தை
பொதுவாக வரலாற்றறிஞர்கள் ராஜ் நாராயண் போஸ் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகியோரது எழுத்துக்களிலிருந்து தொடங்குவதாக கருதுகின்றனர். 1917ெஇல் வீர சவார்க்கரால் அந்தமான் சிறைகளில் மிகுந்த இன்னல்களுக்கிடையே எழுதப்பட்ட இந்நூல் கடத்தி வரப்பட்டு பிரசுரிக்கப்பட்டது 1923 ஆம் ஆண்டில். இதில் காணப்படும் இனவாத கோட்பாட்டின் அழுத்தத்தை இதோ காணலாம்,
'உலகமெங்கிலும் இருப்பது ஒரே இனம் - ஒரே மனித இரத்தத்தால் உயிர் வாழும் மனித இனம்தான். மற்ற அனைத்து விஷயங்களும் சார்பியல் தன்மையுடையவைதான். இனத்துக்கு இனம் என்று மனிதன் எழுப்பும் செயற்கை அரண்களையெல்லாம் இயற்கை என்றும் உடைத்தெறியவே செய்யும். உங்களுடைய அனைத்து தேவ தூதர்களையும் விட, தீர்க்கதரிசிகளையும் விட பாலியல் ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது....துருவம் முதல் துருவம் வரை மானுட இனத்தின் ஒற்றுமையே உண்மை. மற்ற அனைத்து பிரிவுகளும் சார்புடையனதாம். ' 2
போலி மதச்சார்பற்ற வாதிகளின் மேற்கத்திய பிரச்சாரத்திற்கும் இந்திய பிரச்சாரத்தையும் ஒப்பிடும் போது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு சங்கடம் தெரிகிறது. உதாரணமாக இந்தியாவில் வீர சவார்க்கர் தன் கருணை மனுவிற்கு பின் ஒரு தடவை கூட பிரிட்டிஷாரை எதிர்க்கவில்லை என நிரூப்பிக்க வேண்டியிருக்கிறது. மேற்கிலோ அவர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நாசிகளுடன் தொடர்புடையவர் என காட்ட வேண்டியுள்ளது. ஆக ராம் புண்யானி சவார்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு தடவை கூட வீர சவார்க்கர் பேசவில்லை எனக் கூறும் அதே சமயம், இந்திய இடதுசாரிகளின் மேற்கத்திய பிரச்சார பீரங்கிகள் வீர சவார்க்கர் 1938 நவம்பரில் ஹிந்து மகாசபையில் உலகப்போரில் இந்திய நிலை குறித்து பேசியதை நாசிகளுக்கு ஆதராவாக இருந்ததாக காட்ட பயன்படுத்துவார்கள். 1938 நவம்பரில் அவர் பேசியதாவது, 'எந்த சக்திகள் இந்தியாவுக்கு அதன் சுதந்திர போராட்டத்திற்கு உதவுகிறதோ அதுவே நம் நண்பன், அதற்கு எதிரானவர்கள் நம் எதிரிகள். நம்மை குறித்து நடுநிலை வகிப்பவர்களைக் குறித்து நாமும் கவலைப்பட தேவையில்லை. ' 3

உலக நாடுகளுக்கு ஒரு அடிமை சமுதாயம் அந்த அடிமைத்தனத்தையே ஒரு நற்பண்பாக காட்டி ஒழுக்க விதிகளை போதிப்பதை விட்டு இந்தியாவின் நலனைக் கருதிய நிலைபாடுகளையே எடுக்க வேண்டும் என்பதே வீரசவார்க்கரின் கருத்தாக இருந்தது என்பது தெளிவு.

ஹிந்துத்வம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரானதா ?

ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் ,ஹிந்துத்வம் என்பது ஹிந்துத்தன்மை , இந்த தேசத்தின் தன்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள் .


மற்றொன்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், பாரத நாட்டுக்கு வெளியே இருந்து வந்தது இஸ்லாமும் , கிறிஸ்தவமும் என்பது உண்மை . ஆனால் இங்கு வாழும் முஸ்லீம்களும் , கிறிஸ்தவர்களும் வெளியே இருந்து வந்தவர்கள் அல்ல என்பதும் உண்மை .

அவர்கள் நம்மவர்கள் ; அவர்களது முன்னோர்களும் நம் முன்னோர்களும் ஒன்று . அவர்களது பாரம்பரியமும் நம் பாரம்பரியமும் ஒன்று .அவர்களது உடலில் ஓடும் ரத்தமும் நம் ரத்தமும் ஒன்று . அவர்களது பண்பாடும் நம் பண்பாடும் ஒன்று . நம் தேசியமும் அவர்களது தேசியமும் ஒன்று . சுருக்கமாகச் சொன்னால் இனத்தால் அவர்களும் நாமும் ஒன்று .

மதத்தால் ?

அவர்களது மதம் நாட்டில் தோன்றிய மதம் இல்லை என்பதால் ஹிந்து மதம் என்கின்ற குடைக்குள் அவர்கள் வர மாட்டார்கள் . ஆனால் ஹிந்து இனம் என்கின்ற குடையின் கீழ் வருவார்கள் .

அதாவது நம் நாட்டில் உள்ள மக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்

ஒன்று ) மதத்தாலும் இனத்தாலும் ஹிந்துக்கள் .

இரண்டு ) இனத்தால் ஹிந்து , மதத்தால் இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவர் .

இந்த இரு பிரியுகள் தான் தற்போது உள்ளவர்கள் .

கேரிஷ்தவர்களும் முஸ்லீம்களும் வழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டிருக்கலாம் தவறில்லை .ஆனால் அதன் காரணமாக பெயர் மாற்றம் , உடை மாற்றம் , பண்பாடு மாற்றம் ஆகியவை அறியாமையின் காரணமாக ஏற்படும் விளைவு . அது கடைசியில் தேசியத்தில் மாறிவிட்டதாக அறிவித்து பிரிவினைக்கு வித்திட்டு விடும் .

மதம் மாறியவர்கள் தங்களது அறியாமையின் காரணமாக இந்த மண்ணின் பழக்க வழக்கங்களை , மதத்தின் பழக்க வழக்கங்களாக நினைத்து விட்டு விடுகிறார்கள் .

மாறாக இந்த மண்ணுக்கு புறம்பான பழக்க வழக்கங்களை தங்களது மதத்தின் பழக்க வழக்கமென கருத்து ஏற்று விடுகிறார்கள். இதனால் வெறும் பழக்கம் மட்டுமல்ல பண்பாட்டு அடையாளமும் மாறிவிடுகிறது .

உதாரணமாக வாசலிலே கூலமிடுவது, சுப நிகழ்ச்சிக்கு வாயிலிலே வாழை மரம் கட்டுவது , ஒரு நிகழ்ச்சியின் துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றுவது போன்றவைஎந்த மதத்துக்கும் சொந்தமல்ல , இந்த மண்ணுக்கு சொந்தம் . இதை அவர்களுக்கு உணர்த்த அந்த பிரிவிலேயே ஒரு இயக்கம் உருவாக வேண்டும் .

ஹிந்துத்வம் என்றால் என்ன ?உலகில் ஆண்டவன் கோடான கோடி ஜெவராசிகளை படைத்துள்ளான் . ஒரு படைப்புக்கும் வேறுபாடு உள்ளது . ஒரு பூச்சிக்கும் மற்றொரு பூச்சிக்கும் , ஒரு மிருகத்துக்கும் மற்றொரு மிருகத்துக்கும் , ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் வேறுபாடு உள்ளது .


கோடான கோடி மனிதர்கள் ஒரே மாதிரி படைப்பாக தெரிந்தாலும் அவர்களுள்

புற வேறுபாடு உள்ளது . அமைப்பில் ,நிறத்தில் , உயரத்தில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு மனிதனது முக அடையாளம் மற்றொரு மனித அடையாளத்துடன் வேறுபடுகிறது .

இது போலவே தேசத்துக்கு தேசம் அடையாளங்கள் வேறுபடுகின்றன . மேம்போக்காக பார்க்கும் பொது ஒரே நிலப்பரப்பாக தெரிந்தாலும் அதில் வாழும் மக்கள் ஒரே மாதிரி தெரிந்தாலும் தேசத்துக்கு தேசம் மாறும் என்பது உண்மை .இந்திய தேசத்துக்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது . ஒரு தனித்தன்மை உள்ளது . இது வெறும் தனித்தன்மை மட்டுமல்ல அது மிகப் பழமையான தன்மை . பாரம்பரியமாக வாழையடி வாழையாக தொடரும் தன்மை , உலகில் உள்ள ஏனைய நாட்டுத் தன்மையை விட சிறந்த தன்மை .

இந்த நிலப்பரப்பில் வாழும் மக்களை ஒன்றுபடுத்தும் ஒரே தன்மை .இந்த நிலப்பரப்பில் வாழும் மக்களை ஒரே தேசமாக அங்கீகரிக்கும் தேசியத் தன்மை .

இந்த தன்மைக்குப் பெயர் ஹிந்துத்தன்மை . சமஸ்கிருதத்தில் "ஹிந்துத்வ". ஆங்கிலத்தில் hinduness .

தர்மயுத்தம்

உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)


(அடைப்புகளிலுள்ள குறியெண்கள் கீதையில் அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் குறிக்கின்றன).

ஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக் காட்டிலும் முன்தோன்றியது

உங்களைச் சுற்றி எல்லா திசைகளையும், உற்று நோக்கிப் பாருங்கள். இவ்வாறு நோக்குங்கால், காற்றோடு காற்றாக மறைந்து போகாமல், தண்ணீரில் அமிழ்ந்து போகாமல், அல்லது மண்ணோடு மண்ணாகாது இந்நாள்வரை உறுதியுடன் வாழும், வேத வழி நன்நெறி கலாச்சாரம் போன்று, வேறொரு கலாச்சாரம் ஏதாகிலும் உலகில் தென்படுகிறதா? ஹிந்து கலாச்சாரமோ, குறைந்து, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக (இன்னமும் அதிகமாகச் சொல்ல வேண்டும்), ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அதே வீரியம் இன்றும் குன்றாது, வெற்றிகரமாக செழித்தோங்கி, இதற்கிணையில்லை என கூறுமளவிற்கு, இயங்கும் ஆற்றலுக்குரியதாகவும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே வழி வழியாக மரபு கொண்டு, தழைத்தோங்கி, அந்நாட்களில் செயலாற்றிய அதே திறனுடன், இந்நாட்களிலும் கொள்கையளவில் இல்லாது தற்காலத்திற்கு ஒப்ப மெய்யாக செயலிலும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சமயம் வேறொன்றுண்டா? மற்ற பழைய கலாச்சாரங்களான, எகிப்திய, இன்கா, மயன்***, அஸ்டெக், (Egyptian, the Inca, Maya, Aztec) ஆகிய இவையெல்லாமே, 5000 ஆண்டுகள் புராதனமானது தான், ஆனால் இதில் ஒன்றுகூட இன்று வரை நிரந்தமாக இல்லையே. இவைகள் எல்லாம் மறைந்து, அந்நாளிலிருந்து இன்றுவரை எஞ்சியுள்ள, அக்கால மனிதர்களால் உண்டாக்கப்பெற்ற சில கட்டங்கள், வடிவங்கள் என நமக்கு அக்கால கலாச்சாரம் எப்படி உண்மையில் செழித்தோங்கி இருக்கவேண்டுமென தெரிந்து கொள்ளும் நம் ஆவலை மட்டுமே தூண்டிவிட்டு, ஆனால், நம்மிடம் மௌன மொழியில்தான் பேசுகின்றன. அவ்வளவுதான். இவைகளைப்பற்றி நிரந்தரமான. உண்மையென தகவல் இதுதான் என நிரூபித்து நமக்கு உறுதியளிக்கவில்லையே! இக்கலாச்சாரங்கள் இருந்தன என நம் கண்ணெதிரே தெரிந்தாலும், அவைகளைப் பின்பற்றுவோர் எப்படி வாழ்ந்தனர், இன்று அக்கலாச்சாரங்களை அனுசரிப்பவர்கள் எங்கேயாவது இருக்கின்றனரா? இருந்தால், எங்குள்ளனர்? என்றோ, அல்லது அவர்களது சமயப் பெயர்கள் தான் என்ன? அவர்கள் சமய சித்தாந்தங்கள் தான் என்ன, என சொல் வழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ விவரமாக, முடிவாக, நாம் காண முடியலில்லையே! இவைகளைப்பற்றி எல்லா முடிவுகளும் கற்பனையில், அல்லது ஆராய்ச்சியால், தர்க்க ரீதியில் ஊகித்து சொல்லப் படுபவைகளாகவே இன்று நமக்குக் கிடைகின்றன. இவைகள் எல்லாமே காலத்தின் கோலத்தால் நமக்கு விவரமாகக் கிடைக்க நாம் கொடுத்துவைக்க வில்லை.

பேராசிரியர் ஜோஸப்பின் கை வெட்டு - தொடரும் இஸ்லாமிய பயங்கரவாதம்

கேரளாவில் ஒரு கிறிஸ்துவ பேராசிரியரது கையை வெட்டியதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள அரசு பொங்கி எழுந்து பலரை கைது செய்து, FI என்ற இஸ்லாமிய தீவிரவாத கட்சியை தடை செய்ய வேண்டும் என்பது போல பேசுகிறது. முதல்வர் அச்சுதானந்தன் கேரளாவை இஸ்லாமிய நாடாக ஆக்க பிஎஃப் ஐ திட்டமிட்டு மதமாற்றம் செய்கிறது என்று பேசி காங்கிரஸின் கடும் எதிர்ப்பையும், முஸ்லீம் தீவிரவாத கட்சிகளின் கடுங்கோபத்தையும் எதிர்கொண்டுள்ளார்.


இதில் வினோதம் என்னவென்றால், கிறிஸ்துவ பேராசிரியரின் கையை வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளவர் முன்னரே ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரது கையை வெட்டி பிறகு கொலை செய்திருக்கிறார். அதற்காக சும்மா கைது செய்து பிறகு விட்டுவிட்டது இதே கம்யூனிஸ்டு அரசு. ஆனால் இப்போது வெட்டப்பட்டிருப்பது இன்னொரு சிறுபான்மையினரது கை. அதெப்படி சும்மா இருக்கமுடியும்? ஏற்கெனவே, முவட்டுப்புழாவில் கிறிஸ்துவர்களை முஸ்லீம்கள் கடைகளில் எதுவும் வாங்கக்கூடாது என்று சர்ச் ஆணையிட்டிருக்கிறதாக தெரிகிறது.

பிரச்னை முற்றுவதற்கு முன்னால், அரசு உடனே இறங்கி ஆட்களை கைது செய்து சர்ச்சை குளிர வைக்க வேண்டிய நிலை. ஆனால் இந்துத்வ தொண்டர்களுக்கு ஆதரவாக பலமான அமைப்பு இல்லை என்பதால், சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் போலிருக்கிறது. ஆனால் பெரிய பிரச்னை என்னவென்றால், ஒரு சிறுபான்மை கிறிஸ்துவரது கை வெட்டப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கமான மனித உரிமை காவலர்களான வி ஆர் கிருஷ்ணய்யர், சிவிக் சந்திரன், அ மார்க்ஸ் போன்றோர் குரலை காணவில்லை. அல்லது நான் தான் படிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்

கல்லெறிதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?-ம. விஸ்வநாதன்

காஸ்யப முனிவரின் பெயரால் காஷ்மீர் என பெயர் பெற்று, ஆதிசங்கரர் விஜயம் செய்த சாரதா பீடத்தின் அதிதேவதையாக உள்ள சரஸ்வதி தேவியின் இருப்பிடமாகத் திகழும் ஜம்மு - காஷ்மீர் இன்று இந்தியாவுக்கு பெருத்த சவாலாக எழுந்துள்ளது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டுவிட வேண்டும் என நினைத்த பாகிஸ்தான், பழங்குடியினரைத் தூண்டிவிட்டு உள்ளே நுழையவைத்தது.

ஆனால், அந்த முயற்சியை இந்தியா முறியடித்தபோதும், அதன் பின்னர் 1965-லும், 1999-லும் மீண்டும் இந்தியாவுடன் போர் தொடுத்தது.

நமது வரைபடத்தில் நாம் பார்க்கும் காஷ்மீரில் 1,01,338 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே நம் வசம் உள்ளது. 85,846 சதுர கி.மீ. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகவும், 37,555 சதுர கி.மீ. பரப்பளவு சீனா வசமும் உள்ளது.

இப்போது நம் வசம் உள்ள காஷ்மீரிலும் கடும் சவால் எழுந்துள்ளது.

"சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்; போராடி ஹிந்துஸ்தானத்தைக் கைப்பற்றுவோம்' என தேசத்தைப் பிரித்தபோது பாகிஸ்தான் தலைவர்கள் கூறினார்கள். அந்தத் தலைவர்களின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் அவர்களது வழித்தோன்றல்கள் இந்தியாவில் கலவரத்தைத் தூண்டி வருகின்றனர்.

நேரடிப் போரில் வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பாகிஸ்தான், தனது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் மூலம் கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது.

தொடர்ந்து மாநிலத்தில் நிலவி வரும் பிரச்னை காரணமாக லட்சக்கணக்கான பண்டிட்டுகள் மாநிலத்தில் இருந்து அகதிகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.

இப்போது, புதிய உத்தியாக மக்களைத் தூண்டிவிட்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிய வைக்கின்றனர். முதலில் இளைஞர்கள் மட்டும்தான் கல்லெறிதலில் ஈடுபட்டனர். அடுத்து பெண்களும், முதியவர்களும் கூட இந்த கல்லெறிதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

மக்களுக்கு இடையே பயங்கரவாதிகள் சிலர் புகுந்து கொண்டு பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுடுகின்றனர். தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினர் சுடுவதில் சிலர் உயிரிழக்கும்போது நிலைமை இன்னும் உணர்ச்சிகரமானதாக ஆகிவிடுகிறது.

இதுபோதாதென்று பாதுகாப்புப் படையினரின் முகாம்களைத் தாக்கி தீவைத்துக் கொளுத்துவதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

நிலைமை எந்த அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது என்றால் சையத் அலி ஷா ஜீலானி தலைமையிலான ஹுரியத் அமைப்பு, ஞாயிற்றுக்கிழமையை வேலைநாளாகவும், வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்காதவண்ணம் ஜூலை 28 முதல் பொதுமக்கள் யாரும் மின் கட்டணம், விற்பனை வரி, தண்ணீர் வரி ஆகியவற்றை கட்ட மறுக்க வேண்டும் என ஹுரியத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீர் பல்கலைக்கழகமும், பாரத ஸ்டேட் வங்கியும் ஜூன் 25-ம் தேதி செயல்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது அங்கு அரசாங்கம் என்று ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

ஏன் இந்த நிலை? எந்தவொரு போராட்டமுமே திடீரென ஒரே நாளில் உருவாவதில்லை. அதுவும் காஷ்மீர் பிரச்னை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

ஆனால், மக்கள் இந்த அளவுக்கு இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க உளவு அமைப்பு தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஏழ்மையின் காரணமாகவும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகவும்தான் மக்கள் இதுபோன்ற வன்முறையில் இறங்கியுள்ளனர் என்றும் அதனால் அதற்குரிய சில திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இப் பிரச்னைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் என்ற காரணத்தில் முழு உண்மையில்லை. அதுதான் உண்மையென்றால் நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சுமார் 50 கோடி பேர் தினசரி கல்லெறிதலிலோ, துப்பாக்கியைத் தூக்குவதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும்.

அது காஷ்மீராக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி, மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். எல்லாப் பகுதிகளிலும் சீரான வளர்ச்சிப் பணிக்கு திட்டமிடும் அதே நேரத்தில் தூண்டிவிடுபவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது அவசியம்.

பிரிவினையின்போது பாகிஸ்தான் சென்றவர்கள் படும் துன்பங்களையும், இந்தியாவுடன் இருப்பதே நன்மை பயக்கும் என்பதையும், இந்தியப் பற்று உள்ள உள்ளூர் தலைவர்கள் மூலம் மக்களுக்குப் புரியவைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

எந்த விலை கொடுத்தும் காஷ்மீரை நாம் தக்கவைத்துக் கொள்வோம் என்பதை பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அரசு உணர்த்த வேண்டும்.

பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்ததால் பிரச்னை தீரும் என நினைத்தே தேசம் பிரிக்கப்பட்டது. அதனால், கடந்த 63 ஆண்டுகளாக காஷ்மீரில் கலவரம், மும்பைத் தாக்குதல், நாட்டின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் என தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.

காஷ்மீர் நம் கையை விட்டுப் போனால், அடுத்து மேற்கு வங்கத்துக்கும், அசாமுக்கும் குறிவைக்கப்படும். அதற்கான பணிகளை ஏற்கெனவே பாகிஸ்தானும், வங்கதேசமும் தொடங்கிவிட்டன.

மேற்கு வங்கத்திலும், அசாமிலும் லட்சக்கணக்கானோர் இரு தேசங்களிலும் இருந்து ஊடுருவியுள்ளனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட அவர்களை வெளியேற்ற முடியவில்லை. காரணம் இரு மாநிலங்களிலும் ஊடுருவியவர்களை ஓட்டு வங்கியாகக் கருதி, அவர்களுக்கு ரேஷன் அட்டை உள்பட சகல வசதிகளையும் இரு மாநில அரசுகளும் செய்து கொடுத்துவிட்டன. 1947-ல் ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் ரசாக்கர்கள் எனப்படுவோர் பாகிஸ்தானுடன் சேரப் போவதாக முரண்டு பிடித்தபோது, ராணுவத்தை அனுப்பி தனது உறுதியான நடவடிக்கை மூலம் அவர்களை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் பணியவைத்தார்.

அதுபோன்ற துணிவான, சாதுர்யமான நடவடிக்கையால் காஷ்மீரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் பாகிஸ்தானுக்கு உரிய பதிலை நாம் தர முடியும். செய்யுமா மத்திய அரசு?

அங்கீகரிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள்...

.

இரா. மகாதேவன் 05 Aug 2010

இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இப்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 3 கோடி.

இந்த வழக்குகளின் ஒரு பகுதியாக நிலுவையில் உள்ளதுதான் விவாகரத்து வழக்குகள். இவற்றின் எண்ணிக்கை நாடு முழுவதும் சுமார் 55 ஆயிரம். நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் பெரும்பான்மையாக நிலுவையிலுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை விரைந்து தீர்க்க முனையாத மத்திய அரசு, பண்பாட்டோடு தொடர்புடைய விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அதீத முயற்சி எடுத்துக்கொண்டுள்ளது.
அதாவது, நிலுவையில் உள்ள 55 ஆயிரம் விவாகரத்து வழக்குகளையும் விரைந்து தீர்ப்பதற்காக இந்து திருமணச் சட்டம் 1955, 13-வது பிரிவிலும், சிறப்புத் திருமணச் சட்டம் 1954, 24-வது பிரிவிலும் திருத்தம் கொண்டுவருவதுதான் அது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இனி தம்பதிகள் 2 வாரங்களில் விவாகரத்து பெற முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மணமுறிவு பெறுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவுதான் என்றாலும், இப்போது இந்த எண்ணிக்கை "ஜெட்' வேகத்தில் உயர்ந்து வருவது நம்மை அச்சுறுத்துவதாகவே உள்ளது.
அன்பு செய்வதற்கும், சகிப்புத்தன்மைக்கும் உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய பாரதத் திருநாட்டில், மணமுறிவு பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்தது எவ்வாறு?
கல்வியின் காரணமாக, அவர்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு, சமஉரிமைச் சிந்தனைகளினூடே பரவிய மேற்கத்திய கலாசாரம் என்ற விஷக்கிருமிகள் இன்று நோயாக மாறி, குடும்ப அமைப்புகளைச் சிதைத்து வருவதாலேயே விவாகரத்து கேட்டு வழக்குத் தொடரும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, விழிப்புணர்வு பெற்ற நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்த பிறகு, ஆண்கள், பெண்களுக்கான பொறுப்புகளைப் பிரித்துக்கொடுத்து, உரிமைகளை வழங்கி, அவர்களின் முரண்பாடுகளைப் பொறுத்துச் செல்லும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"கூடிவாழ்ந்தால் கோடி நன்மை', "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' போன்ற பொன்மொழிகள் மூலம் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, அன்பு பாராட்டுவது ஆகியவற்றை நம் முன்னோர்கள் வளர்த்து வந்தனர். ஆனால், இன்று இவையெல்லாம் மறைந்து, உரிமை பேசுவதும், சுதந்திரப் போக்கை நாடுவதும், வேலைப் பளுவைக் குறைப்பதற்காக குழந்தைகளை விடுதியில் சேர்த்துவிடுவதும், வயதானவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் போக்கும் அதிகரித்துள்ளது.


இவற்றுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இந்து திருமணச் சட்டத்திருத்தம் அமைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறைந்தது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும், பிறகு ஓராண்டுக்கும் மேலாக உள்ள வழக்குகளுக்கும் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகக் கூறப்பட்டாலும், நாளடைவில் உயரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவை விரைவாகவும், அவசரமாகவும் விசாரிக்கப்பட்டு மிகக் குறைந்த இடைவெளியில் தீர்ப்பு வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.


விவாகரத்து பெறுவது என்பது இரு தரப்பைப் பொறுத்தவரை நியாயமானதாகவும், உரிமை என்பதாகவும் இருந்தாலும், நமது பாரம்பரியம், பண்பாடு என்னும்போது, இந்தப் போக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பிட்டுச் சொல்லப்போனால், அண்மையில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின்போது, உலகமே எதிர்பாராத வகையிலும், வியக்கும் வகையிலும் இந்தியா அதை வெற்றிகரமாகச் சமாளித்துக் காட்டியது. இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது, இந்திய மக்களின் சேமிப்பு மற்றும் வாழ்க்கைமுறைதான்.

இந்தச் சேமிப்பு, வாழ்க்கை முறைதான் நமது அடிப்படை எனும்போது, அதைச் சிதைக்கும் காரணிகளில் ஒன்றான விவாகரத்தைத் தடுக்க நாம் செய்தது என்ன? விவாகரத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பதில் ஆர்வம் காட்டு அரசு, இதுபோன்ற பண்பாட்டைச் சீரழிக்கவல்ல போக்கைத் தடுக்க என்ன முயற்சியை இதுவரை மேற்கொண்டுள்ளது?

மணமுறிவைத் தடுக்க குடும்ப ஒற்றுமை, நேசம் குறித்தும், அதனால் விளையும் பயன்கள் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை கடமை உணர்வோடு போதிக்கப்பட வேண்டும். இளம் வயதிலேயே குடும்பம் குறித்து குழந்தைகளின் மனதில் பதியும் நேர்மறைச் சிந்தனைகளால் வருங்காலத்தில் விவாகரத்தின் எண்ணிக்கையை பலமடங்கு குறைக்க முடியும்.

அதோடு, கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வரிச்சலுகைகளை அளிப்பதோடு, அரசின் நலத் திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 முக்கியமாக, இந்திய நடைமுறைச் சட்டங்கள் அனைத்தும் பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை வழங்குவதாக இருக்க வேண்டும். இரு வாரங்களில் விவாகரத்து வழக்கில் முடிவெடுப்பது, ஆண்களுக்கான சட்டப்படியான திருமண வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைப்பது போன்ற அரசின் முடிவுகளும், பாலியல் தொழில், ஓரினச் சேர்க்கை போன்றவற்றை அங்கீகரிக்க வலியுறுத்தப்படுவதும், இந்தியாவில் ஒளிபரப்பாகும் அயல்நாட்டு தொலைக்காட்சி சேனல்களில் நீலத் திரைப்படங்களை ஒளிபரப்புக்கு அனுமதியளித்துள்ளதும் இந்தியாவின் பண்பாட்டைச் சிதைக்க நினைக்கும் குள்ளநரிகளின் எண்ணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது.

முற்போக்கு வாதம், பிற்போக்கு வாதம் என்ற வகையில் இவற்றைக் கையில் எடுக்காமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் விட்டுக்கொடுக்காத வகையில் இந்தியாவின் பண்பாட்டைக் காப்பாற்றுவதில் கடமையாற்ற வேண்டும்.

தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா?

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 8, 2010
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு.


தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டனம் கடற்கரையோரங்களில் அவ்வப்போது இலங்கை படையினர் ஊடுறுவி வருவது குறித்து மத்திய அரசு அக்கறை இல்லாமல்இருக்கிறது. மேலும், கச்சத்தீவில் சீனப்படையினர் நிலை கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் குறித்தும் மத்திய அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்குள் 2 சீன ராணுவத்தினர் வந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொண்டியக்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ உடையில் வந்த இரண்டு பேர் அந்தப்பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த நாகரத்தினம் என்ற பெண்ணிடம் தமிழ் அல்லாத ஏதோ ஒரு மொழியில் பேசியிருக்கிறார்கள்.
நாகரத்தினத்திற்கு அந்த மொழி தெரியாததால் கடற்கரைக்கு வழி கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கடற்கரை பக்கமாக வழி காட்டியுள்ளார்.
இதன் பின்னர் ஊருக்குள் வந்த நாகரத்தினம், அங்கிருந்த பொதுமக்களிடம் சற்று வித்தியாசமான முறையில் தோற்றம் கொண்ட இருவர் ராணுவ உடையுடன் இருந்தனர். அவர்கள் பேசிய மொழியும் எனக்கு தெரியவில்லை. அதனால் அவர்களிடம் கடற்கரை வழியை காட்டிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காட்டுப்பகுதி மற்றும் கடற்பகுதிக்குள் தேடிப்பார்த்தும் அவர்களை காணவில்லை. அதன்பிறகு காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது.இதையடுத்து போலீஸ் டிஐஜி திருஞானம், எஸ்.பி.பிரவீண்குமார், ஏ.எஸ்.பி.சரவணன் ஆகியோர் தலைமையிலான படையினர், கடற்பகுதி மற்றும் அலையாத்திக் காடுகளிலும் தேடி வருகின்றனர்.காட்டுப்பகுதிக்குள் வந்தவர்கள் இலங்கையில் ராணுவ முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விவேகானந்தர்

om

உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்

டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.
புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.
காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் "பண்டிட்" பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.
தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
ஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.
பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.
தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.
இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் "ஆதிக்க சாதியினர்" என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?

உண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்?

பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்?
"இரெட்டைக் குவளை" முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்?
தலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்?
தலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்?
இவர்களெல்லாம் யார் தெரியுமா?

பிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் "ஆதிக்க சாதியினர்"தான்!

இவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்!

ஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்!

உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.

தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.

ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து "பஞ்சமர்" என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.

ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?

இது இன்றைய நிலைமை – பழைய கதை அல்ல!

யார் அவர்கள்?

இனம் கண்டுகொள்ளுங்கள் தலித்துக்களே!

பிரிவினைவாதத்தை தடுக்க முதல்வர் விரும்பவில்லை:பொன்.ராதாகிருஷ்ணன்

முத்துப்பேட்டை:தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தடுக்க தந்தையைப் போல் உள்ள முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை,'' என, தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பாரதிய ஜனதா சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:முத்துப்பேட்டை பகுதியில் ஹிந்து, முஸ்லீம்கள் இடையே தொடர்ந்து வரும் பிரச்னையை தீர்த்துவைக்க தமிழக அரசு விரும்பவில்லை. ஓட்டுக்காக பிரிவினைவாதத்தை தூண்டும் விதத்தில் செயல்படுகிறார்கள். சிறுபான்மையினர் என்ற நிலையில், முஸ்லீம்களுக்கு கல்விச் சலுகைகளை அரசு வழங்கி வருவது மதமாற்றத்தை தூண்டுவதற்கு அடிப்படையாக அமையும்.
தந்தை ஸ்தானத்தில் உள்ள முதல்வர் நினைத்தால் இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அன்று மண்டைக்காட்டில் தொடர்ந்து வந்த பிரச்னையை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தீர்த்து வைத்தார்.எனவே, முத்துப்பேட்டை பகுதியில் தொடரும் பிரச்னைக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு முஸ்லீம்களும் ஒத்துழைப்பு தந்தால், முடிவுக்கு கொண்டு வர நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு அவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

மாநில துணைத்தலைவர் ராஜா பேசுகையில், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். ஆன்லைன் வர்த்தகம் மூலம் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. காரணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், கனிமொழி மற்றும் மத்திய அமைச்சர்களின் மகன்கள் இதில், ஈடுபட்டுள்ளதால் தடை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய, மாநில அரசுகள் உடன் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.நகர செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்

முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு கருத்தொற்றுமை உருவாக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

ஹைதராபாத், ஜூலை 8: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு தேசிய அளவிலான கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி ஹைதராபாதில் உள்ள ஜாமியத் உலமா-இ- ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு பதில் அனுப்பியுள்ளார் மன்மோகன். மன்மோகன் அனுப்பியுள்ள கடிதத்தில் இக் கருத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2007-ம் ஆண்டில் சிறுபான்மை மக்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2010-11-ம் ஆண்டில் ரூ.2600 கோடி ஒதுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோராண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு
வருகிறது.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் நாட்டின் 80 மாவட்டங்களில் ரூ.2000 கோடியில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதில் மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத்துக்கு இந்து முன்னணி கேள்வி

கரூர், ஜூலை 8: திராவிடர் கழகத்திற்கு இந்து முன்னணி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரூரில் அண்மையில் மாநில அளவிலான இந்து முன்னணி மாநாடு நடைபெற்றது. இதையடுத்து, திகவின் மண்டல மாநாடு ஜூலை 6-ல் கரூரில் நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் திகவிற்கு 4 கேள்விகள் கேட்கப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தக் கேள்விகளுக்கு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பதிலளித்ததோடு, சில கேள்விகளையும் கேட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்தக் கேள்விகளுக்கு, கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விளக்கம் அளித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
திக தலைவராக தலித் ஒருவரை நியமிக்காதது ஏன் என்ற கேள்விக்கு, காஞ்சி சங்கரமடத்தில் தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்போது, திகவிலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கரமடம் பிராமணர்களால், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்களாலும், கோவை மருதாச்சலம் அடிகளார் மடம் கவுண்டர்களாலும், கோவினூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு சமுதாய ரீதியாக மடங்கள் உள்ளன.
திக கடவுள் மறுப்பு இயக்கமாக இருந்து வந்ததா?, இல்லை ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
கடவுள் இல்லை என்ற மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சியினர், தாங்கள் தேர்தலில் போட்டியிடும்போது, கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி.

பாரத தேசத்தின் சில அவலங்கள்!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6. அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!

மதமாற்றம் மூலம் கேரளாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி-அச்சுதானந்தன்

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010


இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு முஸ்லிம் அமைப்பினர், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களை தங்கள் பக்கம் கவர பணத்தை வாரி இறைத்து, கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திசை திருப்பவும் முயல்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை.
20 ஆண்டுக்குள் கேரளாவில் முஸ்லிம்களை பெரும்பாமையாக்கி, கேரளத்தை முஸ்லிம் நாடாக்க சதிகள் நடக்கிறது.
இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாம். அவர்கள் ஆகஸ்டு 15ந் தேதி நடத்த இருந்த மாநாட்டுக்கு தடை விதித்து இருக்கிறோம். இது போன்ற ஆபத்தான இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும்.தற்போது இந்த இயக்கம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை எதுவும் முஸ்லிம் சமூதாயத்தை பாதிக்காத வகையில் இருக்கும் என்றார்.மாநில காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் தான் இந்தப் புதிய இயக்கமாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

என்ன கொடுமையடா இது?-இல.கணேசன்

என்ன கொடுமையடா இது?


இல.கணேசன்

--காங்கிரஸ் என்பது ஒரு மதச்சார்பற்ற கட்சி; பாரதிய ஜனதா ஒரு வகுப்புவாதக் கட்சி'' என்கிற தோற்றம் நிலவி வருகிறது. ஆம், இரண்டுமே தோற்றம்தான். காட்சிப் பிழைதான். உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் போற்றுவது பா.ஜ.க.; பச்சையான வகுப்புவாதக் கட்சி காங்கிரஸ் என்பதுதான் உண்மை நிலை.

இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது. காங்கிரûஸத் தோற்றுவித்தவன் ஆங்கிலேயன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மகாராணிக்கு ஓர் எதிர்க்கட்சி அன்று இருந்ததுபோல இங்கும் ஒரு கட்சியை உருவாக்க விரும்பினான். பெயரளவுக்குத்தான் எதிர்க்கட்சி. இன்றைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ள பிரதான எதிர்க்கட்சியின் பங்கைத்தான் அன்றைய காங்கிரஸ் செய்தது. காலம் மாறியது. லோகமான்ய பாலகங்காதர திலகர் போன்றவர்கள் தலையெடுத்தார்கள்.

எந்தக் காங்கிரஸ் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைத்து வெள்ளையன் தொடங்கினானோ அதே காங்கிரஸ், அரசுக்கு எதிராகத் திரும்பியது. வீறுகொண்டது. ""சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை'' என முழங்கியது.

""நீங்கள் ஒரு இந்துக் கட்சி. உங்களுக்குச் சுதந்திரம் தந்தால் முஸ்லிம்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் முஸ்லிம்களது ஆதரவையும் பெற்று வாருங்கள். பரிசீலிப்போம்'' என்றனர் ஆங்கிலேயர்கள்.

கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆங்கிலேயர் தந்த முத்திரை இந்துக் கட்சி. முஸ்லிம் லீக் தொடங்கவும் ஆங்கிலேயனே பின்னணியில் திட்டமிட்டான். ஆஹாகான் தலைமையில் பின்னாளில் முஸ்லிம் லீகும் தோன்றியது.

""முஸ்லிம் சமுதாயம் காங்கிரஸýக்குப் பின்னால் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆண்ட சமுதாயம்! உங்கள் உரிமைகளை நீங்கள் கேளுங்கள்'' என்று முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டான். அவனது தந்திரம் பலித்தது.

1857-ம் ஆண்டு யுத்தத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். அந்த ஒற்றுமை குலைந்தது.

காங்கிரஸின் சிந்தனையில் எப்படியாவது முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் கொண்டு வரவேண்டும் என்கிற ஒரே சிந்தனை நிலவியது. முஸ்லிம்கள் காங்கிரஸிடம் ஆர்வம் காட்டவில்லை.

காங்கிரஸ் மாநாட்டுக்கு வரும் முஸ்லிம் பிரதிநிதிகளது போக்குவரத்துச் செலவைக் கட்சியே ஏற்றது.

மற்றவர்கள் பிரதிநிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்குத் தரப்படும் எளிய உணவு முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்கு விசேஷ ஏற்பாடு.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் அணிய வேண்டும். காங்கிரஸின் வெள்ளை கதர் தொப்பி அணிய வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மத உடையுடன் (மத உடை என எதுவும் இல்லை. தேசத்தின் உடைதான்) மதத் தொப்பியுடன் வரலாம்.

சாதாரணமாக ஒரு கூட்டத்தில் ஒரு தீர்மானம் பெரும்பான்மை ஆதரவின்றிப் போனால் தோற்றுப் போகும். ஆனால், காங்கிரஸ் கூட்டங்களில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி அதிருப்தி தெரிவித்தாலும் தீர்மானம் விலக்கிக் கொள்ளப்படும்.

மதச்சார்பற்ற தன்மை பேசுகிற காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களது மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள்.

தேசியத்தன்மை உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்தும் காங்கிரஸ் முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதி என்கிற அந்தஸ்தை, அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட்டது. பின்னாளில் இந்த மதச்சார்பற்ற கட்சிதான் முஸ்லிம் லீகோடு கூட்டணியே வைத்தது.

1916-ல் லக்னௌ ஒப்பந்தம் என்பது காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம் லீக் தலைவர்களும் செய்து கொண்ட தாஜா ஒப்பந்தம். அதன் முக்கியமான அம்சங்கள் இரண்டு.

ஏற்கெனவே 1909-ல் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவைகளில் ஒதுக்கீடு வழங்கியது போதாது. இன்னும் கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி தேவை.

கிலாபத் இயக்கம் என்பது முற்றிலும் மதம் சம்பந்தப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் மதச்சார்பற்ற காங்கிரஸ் முழு வீச்சில் பங்கேற்றது.

ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிக்கு காங்கிரஸில் இருந்த முஸ்லிம் தலைவர்களே துணை புரிந்தனர்.

இதைத் தடுக்க விரும்பியவர் சுவாமி சிரத்தானந்தா; அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் மதம் மாறிய முஸ்லிம்களை தாய்மதம் திரும்பும் பணியை நடத்தினார்.

ஒருநாள் உடல்நலமின்றி படுத்திருந்த சுவாமி சிரத்தானந்தாவை, அவர் ஆசிரமத்துக்கு வந்து அப்துல் ரஷீத் என்கிற இளைஞர் அவரைச் சுட்டுக் கொன்றார். நீதிமன்றம் ரஷீதுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ரஷீதின் இறுதி ஊர்வலத்தில் திரளான எண்ணிக்கையில் காங்கிரஸôர் கலந்துகொண்டனர்.

சிரத்தானந்தாவின் கொலையை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைவிட்டனர்.

ஆனால், பகத்சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவரது உயிரைக் காப்பாற்ற மனு தயாரித்து காங்கிரஸ் பெருந்தலைவர்களிடம் கையொப்பம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். பகத்சிங் வன்முறையைக் கடைப்பிடித்தார் எனக் காரணம் சொன்னதும் அதே தலைவர்தான்.

காக்கிநாடா மாநாட்டில் வந்தேமாதரம் பாடப்பட்டபோது தலைமை வகித்த அகில இந்திய காங்கிரஸின் தலைவரே எதிர்த்து வெளிநடப்புச் செய்தார். எந்தப் பாடல் தேசத்துக்காகத் தன்னுயிரையும் தந்து போராட ஊக்கம் தந்ததோ அந்த பாரதத்தாயின் புகழ்பாடும் பாடல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக வெட்டப்பட்டது. பல்லவியையும் முதல் சரணத்தையும் மாத்திரம் தக்க வைத்துக் கொண்டார்கள்.

வரலாறு நீளும். காங்கிரஸின் தாஜா செய்யும் போக்கின் பட்டியலும் நீளும். அன்று பாட்டை வெட்டியதுதானே பின்னாளில் நாட்டை வெட்டியதில் முடிந்தது!

வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா? விடுதலை பெற்ற பிறகு மீண்டும் தாஜா செய்யும் படலம் தொடங்கி வளர்ந்து வருகிறதே. அது மீண்டும் ஒரு பிரிவினையில் கொண்டு போய் விடாது என்பது என்ன நிச்சயம்?

விடுதலை பெற்ற பிறகு அரசு செய்யும் தாஜாவின் சமீபத்திய கொடுமை கல்வி நிலையங்களில் ஆரம்பப்பள்ளி தொடங்கி உயர்நிலை, மேற்படிப்பு வரை மாணவர்களில் இந்து அல்லாதவருக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகுப்பிலேயே மாணவர்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்கும் இந்த அரசுகள் தானே பச்சையான வகுப்புவாத அரசுகள்.

கொட்டிய பிறகும் தேள் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை என்னவென்று சொல்வது? நாட்டை வெட்டிய பிறகும் புரிந்து கொள்ளாதவர்களை என்ன செய்வது?

தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டில் வாழும் மக்களை மதரீதியாகப் பிரித்தாளும் காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சியாம்! மாறாக இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதங்கள் மட்டுமே அன்னிய நாட்டிலிருந்து வந்தவை; இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மவர்கள். அவர்களது பாரம்பரியமும், பண்பாடும், உடலில் ஓடக்கூடிய ரத்தமும், இந்துக்களது பாரம்பரியமும் பண்பாடும் ரத்தமும் ஒன்று.

நாம் பாரதத்தாயின் குழந்தைகள். "எல்லாரும் ஓர் இனம். எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என நம்புகிற பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சியாம்.

என்ன கொடுமையடா இது!

ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வரை ஓயமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வரை ஓயமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்


நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 21 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கலந்துகொண்டவர்கள் 86 ஆயிரம் பேர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் லட்சம் பேர் கலந்துள்ளனர்.தமிழக முதல்வருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எந்த மாணவர் சக்தியை பயன்படுத்தியதோ, அந்த மாணவர் சக்தி இப்போது பா.ஜ. பக்கம் உள்ளது. எனவே இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.இஸ்லாமியர்கள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் எனவே கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம் என மத்திய அரசு சொல்கிறது. நாங்கள் சொல்கிறோம் கட்டாயம் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுங்கள். கிறிஸ்தவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். அவர்கள் கல்வியில் பின் தங்கி இல்லை. என்றாலும் அங்கும் ஏழைகள் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கும் கட்டாயம் கல்வி உதவித்தொகை கொடுங்கள். ஆனால் பெரும்பான்மை என கூறி ஒதுக்கப்பட்டிருக்கும் இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும் என கேட்கிறோம்.அமைச்சருக்கு பதிலடி: அதிகாரத்திற்கு வருவதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களையும் பெறவேண்டுமானால் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வாயில் மண்ணை அள்ளி போடுகிறார்கள். திருச்சியில் இதுபோன்ற போராட்டம் நடத்தினோம். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் நேரு வேறு வழியாக சென்றுவிட்டார். அதைப்போல் மற்ற மாவட்டங்களிலும் அங்குள்ள அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பேசாமல் இருந்தனர். ஆனால் இங்குள்ள அமைச்சர் சுரேஷ்ராஜன் தமிழகத்தில் இல்லாத மதங்களின் பெயரை சொல்லி அவர்களுக்கெல்லாம் கல்வி உதவி தொகை கொடுப்பதாகவும், இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு கட்சியின் மாநிலத்தலைவர் தெருதெருவாக சென்று பிரசாரம் செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல என கூறியுள்ளார்.அவருக்கு நான் கூறுகிறேன். பிற மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் அமைதியாக சென்றது போல் இங்குள்ள அமைச்சர் சுரேஷ்ராஜனும் அமைதியாக இருக்க வேண்டும். எங்கள் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக தெருதெருவாக மட்டுமல்ல ஒவ்வொரு பா.ஜ. தொண்டனின் வீடு வீடாகவும் செல்வேன். குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செல்வேன். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வாங்கும் வரை ஓய மாட்டோம்.முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கிதான் ஆட்சியை பிடித்தது. இப்போது ஓட்டு போட்ட இந்துக்களையே தி.மு.க. ஏமாற்றுகிறது. இனிமேலும் தி.மு.க.விற்கு ஓட்டு போட குமரி மாவட்டத்தில் மக்களும், இந்துக்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க போகிறோம்.ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ. ஆட்சியை கொண்டு வந்ததுபோல் தமிழகத்திலும் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம். எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இந்துவும் விலை போக மாட்டோம் என சவால் விடுகிறோம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படுவதற்கான முதற்கட்ட எழுச்சி ஏற்பட்டு விட்டது என மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், நாகர்கோவிலில் குமரிமாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில் கூறினார். குமரி மாவட்ட பா.ஜ., சார்பில் அணைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்ககோரி நாகர்கோவில் ஸ்டேடியம் முன் போராட்டம் நடந்தது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர் ராஜா கூறியதாவது;- ஜூலை போராட்டம் நடைபெறுவது எங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான். சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுக்கும் கல்வி உதவித்தொகை எங்களுக்கும் வேண்டும் என கேட்டு போராட வந்துள்ளோம்.சோனியாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் தான் இது போன்று பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சுரேஷ்ராஜன் இந்து குழந்தைகளுக்கும் கல்விஉதவித்தொகை கொடுத்து வுருகிறோம் என கூறுகிறார். இதனை அவர் நிருபிக்க வேண்டும். தி.மு.க., அரசு இந்து சமுதாய மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை காட்டி வருகிறார். காங், தி.மு.க., கூட்டணி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நிருபிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த போராட்டம் குமரியில் எழுச்சியுடன் துவங்கியுள்ளது. ஜூலை போராட்டம் ஜூலை மாதத்துடன் முடிந்து விடுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர். டிசம்பர் தொடர்ந்து மேமாதம் வரை நடைபெறும் அப்போது தி.மு.க., ஆட்சியும் அகலும், தாமரையும் மலரும். இவ்வாறு ராஜா கூறினார்.தமிழிசைசவுந்தர்ராஜன்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழிசைசவுந்தர்ராஜன் போயதாவது;- தமிழகத்தில் எழுச்சியோடு நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலில் போராட்டம் நடக்கிறது. இயற்கையே நம்மை வரவேற்கம் விதமாக சூரியனை மறைத்து நமக்கு மாலை நேர தென்றலை தந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகனுக்கு ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இங்கு எழுச்சியுடன் காணப்படும் கூட்டம் தி.மு.க., அரசை வீழ்த்தும் கூட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.