மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....

Loading...

சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்


உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”.

புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை.
உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள்.

சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Winci) தான் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உபயோகத்திற்காக,குண்டு துளைக்க முடியாத மோட்டார் வண்டியை ஜெர்மனி கார் தொழிற்சாலையில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்தவர். இந்த ஏற்பாட்டிற்காக கமிஷன் பெற்றுக்கொண்டு வேலை செய்தவர்.
இது உங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? சற்றுப் பொறுங்கள்.

இதே வால்டர் வின்சியேதான், இந்திய சிறப்புப் பாதுகாப்புப்பணிக் குழுவின் அதிர்ச்சித் தாக்குதல் படைக்கு (SPG - Special Protection Group -commandos) இத்தாலிய பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்தவர். இத்தாலிய பயிற்சியாளர்கள், இந்திய SPG பயிற்சி பெறுபவர்களிடம் பலமுறை மரியாதையின்றி முரட்டுத்தனாக நடந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி உங்களுக்கு திகைப்பூட்டுகிறதா?
1985இல், ராஜீவ், சோனியாவுடன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்ட போது, பாதுகாப்புக்கு வந்த SPG இந்திய பாதுகாப்பு அமைப்புக்குக் கூடத் தெரியாமல், இத்தாலிய, ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ராகுல், பிரியாங்கா ஆகியோருக்கு இத்தாலிய வெளியுறவு அலுவலகத்திலிருந்து நேரிடையாக பாதுகாப்பு அளிக்கச் செய்தார் சோனியா.
உங்களுக்கு அவமானமாக இருக்கிறதா?
இதே சோனியா மேடம்தான், இன்று தேர்தல் மேடைகளிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் ஒரு நாள்விடாமல், “என் தாய் நாட்டுக்காக என் இன்னுயிரையும் தரத் தயார்” என உணர்ச்சி பொங்க முழங்குகிறார். இந்திய அரசு அமைப்பு முழுவதையுமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கையில் வைத்திருக்கிறார்.
சோனியா இந்தியர்களை நம்பாதது மேலை நாடுகள் முழுவதுக்கும் தெரியும். இது உலகப் பிரசித்தம். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் சோனியாவின் உண்மை ஸ்வரூபம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை!
இந்த திடுக்கிடும் ரகசிய வாக்குமூலங்கள், பாதுகாப்புப் பணி-பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து கிடைத்தவை (இதில் RAW அதிகாரிகளும் அடக்கம்). அவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது.


துணைக் காட்சிகளுக்கோ, அல்லது மறைமுகமாகவோ எதையும் காண்பிக்க இது நேரமல்ல. இனி நாம் நேரே விஷயத்துக்கே வருவோம்.

1968ல், இந்திய உளவுத்துறை RAW (Research & Analysis Wing) நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, வெவ்வேறு நாடுகளில் உள்ள இதே அலுவலில் இருக்கும் உளவுத்துறை வலைப் பின்னல்களுடன் (spy network) இரகசியமாகவோ அல்லது திரைமறைவுகள் மூலமோ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வன்முறையாளர்களைப் பற்றியும், ரகசிய ஊடுருவல் காரர்களைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், வெளி நாட்டுக் கலகக்காரர்களைப் பற்றியும் மேலும் இவை சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்று இன்னும் பல நாடுகளும் உண்டு.

இதில் இந்திய RAW என்றுமே இத்தாலிய ஒற்றர் அமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. காரணம் இத்தாலிய ஒற்றர் அமைப்பு தான் மேற்கொள்ளும் எந்த காரியங்களிலும் நல்லமுறையிலோ, அல்லது சுய லாபமின்றி செயலாற்றும் தகைமையிலோ என்றுமே, எதிலும் இருந்ததில்லை. ஆகவே, இந்திய பாதுகாப்பு அலுவலகம், இத்தாலியர்களை என்றுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

1980ல் சஞ்ஜய் காந்தி மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி சுறுசுறுப்பாக அரசியலில் திடீரென பிரவேசம் செய்தார். அப்போது, ஆரம்ப காலத்தில் ராஜீவ் RAW வின் பொதுவான கூட்டங்களில் (classified briefings) மட்டுமே பங்கேற்றார். ஏனெனில் அன்று அவருக்கு அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பும், பதவியும் இருக்கவில்லை. இக் கூட்டங்களில் அவருக்கு நெருக்கமான அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அவருடன் கூட பங்கு கொள்ள வேண்டுமென ராஜீவ் விரும்பினார். ராஜீவுக்கோ அல்லது அவர் சகாக்களுக்கோ இவ்வமைப்புகளில் பங்கேற்க அதிகார பூர்வ பதவி இல்லை என சம்பந்தப்பட்ட RAW அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இச்சமயத்தில் பிரதம மந்திரி என்ற பதவி கொடுத்த அதிகாரத்தாலும், பிரத்யேக சலுகைகளாலும், இந்திரா காந்தி ராஜீவுக்கு நெருங்கிய அருண் நேரு, அருண் சிங் போன்றவர்களும் அக்குழுவில் பங்கேற்க RAW அதிகாரிகளை நிர்ப்பந்தமாக உடன்பட வைத்தார். இந்த ஏற்பாட்டிற்கு RAW அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் ஒப்புகொண்டார்கள் ஆனால் இந்தக் கூட்டங்களில் ராஜீவ், அருண் நேரு, அருண் சிங் சொல்வது எதையும் அதிகாரபூர்வமான குறிப்பேடுகளில் (இவர்கள் பெயர்களால்) இணைக்கக் கூடாது என்று கறாராக RAW அதிகாரிகள் கூறிவிட்டனர்.

ராஜீவ் அன்று வகித்த பதவி காங்கிரஸின் பொதுக் காரியதரிசி என மட்டுமே இருந்தது. இருப்பினும், அரசாங்கத்திலோ அல்லது RAWவிலோ எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், இத்தாலிய ஒற்றர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய RAW அதிகாரிகள் செயலாற்றியாக வேண்டுமென ராஜீவ் நிர்ப்பந்தித்தார். இத்தாலியர்களை இந்திய உளவுத் துறையுடன் இணைக்க ராஜீவ் ஏன் இவ்வாறு நிர்ப்பந்திக்க வேண்டும்? இதில் இத்தாலியர்களின் ஒத்துழைப்பு எதற்காக, அதன் வரம்புகள் என்ன என கொஞ்சமும் ஆராயாமல், அல்லது ஒன்றுமே கண்டுகொள்ளாமல், கண்டபடி இக்காரியத்தில் வலுக்கட்டாயமாக ஏன் முனைய வேண்டும்?

காரணம், சாக்ஷாத் சோனியா தான். ராஜீவ் 1968லேயே சோனியா மைனோவை கடிமணம் புரிந்திருந்தார்.
இது நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் செயல், வேண்டாம் என RAW அதிகாரிகள் பரிந்துரைத்தும் ராஜீவ் கேட்கவில்லை. கடைசியில் RAW அதிகாரிகள் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஒன்றுக்குமே லாயக்கில்லாத உளவுக் கூட்டாளிகள் என பல பத்தாண்டுகளாக இந்திய RAW அதிகாரிகள் எவர்களை ஒதுக்கி வைத்திருந்தனரோ, அதே இத்தாலிய உளவுத்துறையுடன் பலவந்தமாக ஒத்துழைப்பு தர நிப்பந்திக்கப் பட்டனர்.
குறிப்பாக நாம் இதில் அறிய வேண்டியது, சோனியா தான் இரு உளவு அமைப்புகளுக்கும் இடையே உறவுப் பாலம் அமைக்க அரும்பாடுபட்டவர் என்பது.
சோனியா மேடம் இத்தாலிய ஒற்றர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எந்தவித ஐயமுமின்றி, தெள்ளத் தெளிவாகிறது. அப்போது அவர் இந்திய அரசியலிலோ அல்லது அரசாங்கத்திலோ எந்த ஈடுபாடும் இல்லாத, பழிபாவமற்ற பதி-பக்தியுள்ள சாதாரண இந்திய குடும்பத் தலைவி எனக் காண்பித்துக் கொண்டிருந்தவர். ஆனால், அச்சமயத்திலும், சோனியா இத்தாலிய நாட்டின் குடி மகள். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பத்தைக் கூட அந்த நேரத்தில் கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் குடிமையை வேறுவழியின்றி வேண்டா வெறுப்புடன் பின்னர் கோர நேர்ந்தது. சோனியா பிரதம மந்திரி இந்திரா காந்தியின் இல்லத்தில், அக்குடும்பத்தின் அங்கமாக இருப்பவர்; இந்திய அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருப்பவர்; ஆனால், இத்தாலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்!
உண்மையில் இத்தாலிய உளவு அமைப்புகளை RAW திரும்பிப் பார்க்காததற்குக் காரணமே, பிரதமரின் வீட்டில், குடும்பத்தில் சோனியா இருந்தது தான். இந்திய-இத்தாலிய உளவு அமைப்புகள் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளிக்கப் பட்டால், அது வெறும் RAWவுடன் நின்றுவிடாது, பிரதம மந்திரி வீடு வரை நீளும்; விபரீத விளைவுகளை பின்னர் ஏற்படுத்தக் கூடும் ; தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு RAWவுக்கு இருந்தது.

பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி குண்டு துளைக்க முடியாத மோட்டார் வாகனத்தில் தான் எந்தப் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ஆலோசனை தந்தனர். இந்திரா காந்தி இந்தியத் தயாரிப்பான அம்பாசிடர் காரையே குண்டு துளைக்க முடியாத வாகனமாக மாற்றி விட விரும்பினார். ஆனால் அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அப்போது இல்லை (1985ல் தான் இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானது). எனவே, ஒரு ஜெர்மன் நிறுவனத்திடம் அச்சமயத்தில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
அந்தக் குறிப்பிட்ட ஜெர்மன் நிறுவனத்திடம் இந்த காண்டிராக்டை பேசி முடித்தது யார் தெரியுமா? வால்டர் வின்சி என்பவர். இவர் சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர். இதற்கு வெகுமதியாக, வால்டர் வின்சிக்கு சிறிய கமிஷன் கிடைத்திருக்கலாமென RAW வுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை விட கவனிக்கவேண்டிய விஷயம் - பிரதமரின் பாதுகாப்பு என்ற அதி-ரகசியமான முக்கிய விஷயம் சோனியாவின் உறவினர் மூலமாகக் கொடுக்கப் பட்டது என்பது.

1984ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக SPG commandos என்கிற அதிரடித் தாக்குதல் படை இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. 1986ல், சோனியாவின் பரிந்துரைக்குப் பின்னர், இதே வால்டர் வின்சி மூலமாகத்தான், இத்தாலிய பாதுகாப்பு அமைப்பினால் SPGக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க அளிக்கப்பட்டது. இதற்காக வால்டர் வின்சிக்கு ரொக்கமாக, ஆம், ரொக்கப் பணமாக, கணிசமான தரகுக் கூலியும் (கமிஷன்) கட்டாயமாகக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டு, அப்படியே கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது!

இந்த கணிசமான அளவு ரொக்கப் பணத்தை ஜெனீவாவில் இருந்த RAW அதிகாரி மூலமாகவே பட்டுவாடா செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், வால்டர் வின்சி இந்த ஏற்பாட்டுக்கு உடன்படாமல், இத்தாலியில் உள்ள மிலானில் கொண்டுவந்து நேராகத் தன்னிடம் கொடுக்க வேண்டுமென விரும்பினார். ஏனெனில், தனக்கு ஸ்விஸ் - இத்தாலி எல்லை சுங்க அதிகாரிகளிடம் ’நல்லுறவு’ இருப்பதாகவும், ஆகவே, தனக்காக வரும் எவரையும் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்ய மாட்டார்கள் எனவும் RAW அதிகாரிகளுக்கு வின்சி உறுதியளித்தார்.


ஆனால் இதற்கு RAW அதிகாரி அசைந்து கொடுப்பதாக இல்லை. பிடிவாதமாக RAW அதிகாரி இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாததால், Operation Cancelled என்று வால்டர் வின்சிக்கு அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அந்த ரொக்கத் தொகை பின்னர் இத்தாலியின் ரோம் நகரத்திலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகவே வால்டர் வின்சிக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.
 இம்மாதிரி ரொக்கப் பணமாக கொடுப்பததற்காக அதிகாரபூர்வமாக சொல்லப் பட்ட ரகசிய காரணம் என்ன தெரியுமா? இந்திய SPG commandos-அதிரடித் தாக்குதல் படைக்கு பயிற்சி அளிப்பதற்காக, இத்தாலிய பாதுகாப்பு அதிகாரிகளின் வருகைக்கான பயணச் செலவுக்காகக் கொடுக்கப்பட்டது என்பது தான் அது. இதைப்பற்றி, அப்போது அமைச்சரவைக் கூட்ட காரியதரிசியாக இருந்த பி.ஜி. தேஷ்முக் சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
இந்தப் பயிற்சி படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். இத்தாலியிலிருந்து இந்தியா வந்த பயிற்சியாளர் இந்தியப் படையைச் சேர்ந்த ஒருவரைக் கன்னத்தில் பளாரென அறைந்தார். இத்தாலியர்கள் இதே போல பல தடவை SPG படையைச் சேர்ந்தவர்களிடம் தக்க மரியாதையின்றி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என RAW அதிகாரி மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப் பட்டது. இதன் விளவாக SPG commandos படைக்கு ராஜீவ் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியும், மனக் கசப்பும் ஏற்பட்டு விடும் எனவும், இது ராஜீவின் பாதுபாப்புக்கே குந்தகம் விளைவிக்கக் கூடியது எனவும் எச்சரிக்கப் பட்டது; ராஜீவும் உஷாராகி வால்டர் வின்சி ஏற்பாடு செய்த பயிற்சி முகாமுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தார். இந்த திடீர் முடிவின் விளைவு, படைகளுக்கு குறிப்பிட்ட பயிற்சியும் கிடைக்காமல், கணிசமான ரொக்கப் பணமும் பறிபோனது. இதெல்லாம் சோனியா-இத்தாலிய கைங்கரியம்.

1985ல் ராஜீவ் சோனியாவுடன் பாரிஸ் நகருக்கு பயணம் சென்ற போது, பாதுகாப்புக் கருதி வழக்கமான SPG அதிகாரிகளோடு கூட, பிரெஞ்சு மொழி அறிந்த RAW அதிகாரி ஒருவரும் (பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்புடன் உரையாடுவதில் உதவ) கூட பிரான்ஸுக்கு அனுப்பப் பட்டார். பிரான்ஸில் உள்ள லியோன் (Leon) நகரில், திடீரென்று ராகுலும், பிரியாங்காவும் காணாமல் போய் விட்டனர். இதை அறிந்த SPG அதிகாரிகள் மிகவும் கலவரமடைந்தனர். ஆனால், “கலவரமடையத் தேவையில்லை; ராகுலும், பிரியாங்காவும் சோனியாவின் மற்றொரு சகோதரி, நாடியாவின் கணவன், ஜோஸ் வால்டிமாரோவுடன் (Jose Valdemaro) பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று வால்டர் வின்சி தெரிவித்தார். மேலும், ராகுலும், பிரியாங்காவும் வால்டிமாரோவுடன் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு ரயில் மூலமாக சென்று விட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ஸ்பெயின் அதிகாரிகள் முன்னரே ஏற்பாடு செய்து விட்டதாகவும் வின்சி கூறினார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியாமல் இவர்கள் இப்படி பயணம் செய்தது இத்தாலிய பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொடுத்த வசதி என அறிந்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறி கலங்கிப் போனார்கள்.


அப்போது இந்திய பிரதமராக நரசிம்ம ராவ் இருந்தார். இந்த மாட்ரிட் பயணத் திட்டத்தில் நரசிம்மராவின் ஆதரவையோ, அல்லது உதவியையோ கொஞ்சமும் எதிர்பார்க்காது மட்டுமல்ல, இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சோனியா இப்படி செய்ததாக எவரும் தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம். இதன் மூல காரணம் சோனியாவுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் கொஞ்சமும் நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை என்பது தான். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? வேறு சில விஷயங்களையும் தெரிந்து கொண்டால் இது தெளிவாகப் புரியும்.
1986ல் ஒருநாள் ஜெனிவா நகரத்தில் இருந்த RAW அதிகாரிக்கு ஒரு செய்தி வந்தது - “இத்தாலியில் இருந்து வந்த பிரபலஸ்தர்களான வி.ஐ.பி குழந்தைகள் பத்திரமாக ஜெனிவாவிலிருந்து மறுபடி இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர்”. செய்தி அளித்தவர் ஜாக் குன்ஸி, ஜெனிவா நகரக் காவல் ஆணையர். யார் இந்த வி.ஐ.பி குழந்தைகள், எங்கு போகிறார்கள் எதுவுமே இந்திய அதிகாரிகளுக்குப் புலப்பட வில்லை. இந்திய வி.ஐ.பி குழந்தைகளின் பயணத்தைப்பற்றியும் RAW அதிகாரி களுக்கு ஒன்றுமே தெரியாது.


ராகுலும், பிரியாங்காவும் வால்டர் வின்சியுடன் காரில் ஜெனீவா வந்தடைந்ததாக RAW அதிகாரியின் நல்ல நண்பரான ஸ்விஸ் காவல் அதிகாரி விவரமாக எல்லாவற்றையும் சொன்னர். இதன் பின்னணியில் RAW அதிகாரிக்குத் தெரிவிக்காமல் இத்தாலிய வெளியுறவு அலுவலக அதிகாரிகளுடன் ஸ்விஸ் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.


அதோடு விடவில்லை காவல் ஆணையர் ஜாக் குன்ஸி. இந்திய RAW அதிகாரியைப் பார்த்து, படு நக்கலாகக் கேட்டாராம் - “ உங்கள் பிரதமரின் மனைவிக்கு உங்கள் மீதோ அல்லது இந்திய தூதரகத்தின் மீதோ சற்றும் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இத்தாலியர்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்கிறார் போலிருக்கிறது”.


இதனால் தனக்கு ஏற்பட்ட அவமரியாதை மற்றும் மதிப்புக் குறைவு பற்றி இந்திய RAW அதிகாரி தன் மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கிறார். அவரும் அவர் கடமைக்காக தன் மேலதிகாரி களுக்கும் இதே புகாரை அனுப்பியும் இருக்கிறார். அத்துடன் இந்திய RAW அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவு பற்றிய விஷயம் அங்கேயே முடிவவைந்து விடுகிறது. அவ்வளவுதான்.


ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி தகவல்கள் காட்டுத் தீபோன்று உலகளவில் உள்ள உளவு வலைப் பின்னல்கள் அனைத்திலும் உடனுக்குடன் பரவி விடுகிறது. இந்திய அதிகாரிகள், இந்திய தூதரகங்கள், இந்திய பாதுகாப்புப் படையினர் ஆகியவை மீது சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை என்கிற விஷயம், உலக அரசியல்-உளவு வட்டங்களில் இன்று சகலரும் அறிந்த தகவல்.


இதற்கு மேலும் இவ்விஷயத்தைப் பற்றித் தெரிய வெண்டுமா? மேலும் படியுங்கள்.
ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, சோனியா, ராகுல், ப்ரியங்கா ஆகியோர் வெளி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, SPG பாதுகாப்பு ஏற்பாடுகளுப்புப் பொறுப்பேற்றிருந்த RAW அதிகாரிக்கு, இவர்கள் பயண விவரங்கள் ஒன்றுமே தெரிவிக்கப் படவில்லை. ஆனால், மேலை நாட்டு உளவு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய அதிகாரிகளுக்குத் தெரியுமுன்பாகவே எல்லாமே தெரிந்திருந்தது. இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏதோ கொஞசம் தான் தெரியும்; பல சமயங்களில் அதுவும் வேற்று நாட்டு உளவு அமைப்புகள் மூலமாகத் தான் தெரியவரும். இதனால் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எவ்வளவு பாதகம், அவமதிப்பு, மதிப்புக் குறைவு, தலை குனிவு ஏற்பட்டது என இந்த இத்தாலிய பெண்மணி சோனியாவுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா?


சோனியாவின் பிரத்யேக காரியதரிசி ஜார்ஜ், டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் மூலமாக, ரோமில் உள்ள இத்தாலிய வெளியுறவு அலுவலகத்துடனும், மேலை நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடனும் நேரடியாகவே வழக்கமாகத் தொடர்பு கொள்வாராம்.


மேற்குறிப்பிட்ட நேர்மையான RAW அதிகாரி, தன் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் சமயத்தில் மேற்கூறிய விஷயங்களை தலைமை அதிகாரியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்த முறையீடு அப்போது பிரதம மந்திரியாக இருந்த நரசிம்ம ராவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜார்ஜ் (அதாவது சோனியா) மிக முக்கியமான பாதுகாப்பு விஷயஙகளைக் கூட இந்திய அமைப்புகளை நம்பாமல் அல்லது கலந்து கொள்ளாமல், நேராக இத்தாலிய தூதரகத்தின் மூலமாக செயல்படுத்துவது பற்றி அறிந்து ராவ் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், இதில் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.


இப்போது கேட்டாலும் அவர் உண்மையை நமக்கு சொல்லப்போவதில்லை, (இக்கட்டுரை 2004ல் எழுதப் பட்டது. அன்று நரசிம்ம ராவ் உயிருடன் இருந்தார்). ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்ற RAW அதிகாரி *எப்போதும்* உண்மையைத் தான் சொல்வார்.


எனவே, 1980களிலேயே, சோனியா இத்தாலிய உளவாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்; பற்பல அபாயங்களும், திகில்களும் நிரம்பிய உளவு அமைப்புகளின் வேலைகளில் பின்னல்களை உருவாக்கும் அளவு செயல்திறன் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. ஆனால், வெளி உலகில் சோனியா மேடம், ஒன்றுமே நடக்காதது போன்று, கபடற்ற ஒரு இந்திய இல்லாள் போல இந்திய உடையுடன் பாசாங்குடன், அன்றும் நடித்தார், இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.


இந்திரா காந்தி உயிருடன் இருக்கும் போதே மிக முக்கியத்துவமான இந்திய பாதுகாப்பு விஷயங்களில் சோனியா தன் இத்தாலியக் குடும்பத்தை ஈடுபடுத்தி உள்ளார்; ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும் போதே, இத்தாலியப் பாதுகாப்பை இந்தியாவின் மீது சோனியா திணித்துள்ளார்.


இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைப்புகள் மீது தன் அவநம்பிக்கையை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியதோடு மட்டுமின்றி, தனிப்பட்ட அளவில் தன் பாதுகாப்புக்காக இத்தாலிய அமைப்புகளுடன் உடன்படிக்கையும் செய்து கொண்டிருந்திருக்கிறார். இத்தகைய செயல்களை இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உயிருடன் இருக்கும் போதே, காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ எந்த பதவியிலும் இல்லாத போதே சோனியா செய்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் கையில் உண்மையிலேயே அதிகாரபூர்வமாக அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்?


அல்லது என்ன தான் செய்ய மாட்டார்?


இருப்பினும், இன்று இந்தியாவுக்காக தன் உயிரையும் தரத் தயார் என்று சோனியா பாசாங்கு செய்கிறார். இப்போது நாம் காணும் சோனியா, அசல் சோனியாவே அல்ல. இந்திய நாட்டுடன் அவ்வளவாகத் தோழமை கொள்ளாத மேலை நாடுகளுக்கும் கூட இவரைப் பற்றி சரியாகத் தெரியும். நாம், அதாவது, இந்திய மக்கள் தான் இன்னமும் இவரை இனம் கண்டு கொள்ளவில்லை.மூலம் :எஸ்.குருமூர்த்தி (ஏப்ரல் 17, 2004 - இந்தியன் எக்ஸ்பிரஸ்)

 தமிழில்: சேஷாத்ரி ராஜகோபாலன்

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் இந்துகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க ராமேஸ்வரத்தில் சிறப்பு யாகம்ராமேஸ்வரம்: அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டி ராமேஸ்வரத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோயில் பிரச்சனை தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24-ம் தேதி அன்று வழங்கப்பட உள்ளது.
நாடே ஆவலாக எதிர்பார்க்கும் இந்த வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமைய வேண்டி ராமேஸ்வரத்தில் அபய ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரசேகர சர்மா தலைமையில், 21 வேதவிற்பன்னர்களால் மகா ஸ்ரீ அனுமன் யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் முரளீதரன், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்

முத்துப்பேட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் சிலை ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் முத்துப்பேட்டை ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தøமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி முன்னிலையில் ஊர்வலத்தை சக்திராம சிதம்பர தேவர் துவக்கி வைத்தார்.


அதில், முத்துப்பேட்டைவடகாடு சிவன் கோவில், உப்பூர், கல்லடிக்கொல்லை, கீழ நம்மங்குறிச்சி, அரமங்காடு உட்பட 16 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முத்துப்பேட்டை பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக பாமணி ஆற்றில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது.

விழாவில், மாநில துறவிகள் பேரவை செயலாளர் ராகவானந்தா சாமி பங்கேற்று பேசியதாவது: தர்மம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை மற்ற மதங்களை விட இந்து மதத்தில் அதிகம் உள்ளது. பக்தி பூர்வமாக ஆரம்ப காலத்தில் இருந்தே பஞ்சபூதங்களை இயற்கையை ஒட்டி வழிபட்டு வந்தோம். இது தேசிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. விநாயகர் சிலை ஊர்வலம் தேசிய திருவிழாவாக நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., மாநில செயலாளர் முருகானந்தம் பேசியதாவது: நடப்பாண்டு விநாயகர் சிலை ஊர்வலம் பல்வேறு நெருக்கடியைத் தாண்டி நடத்தப்படுகிறது. பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸார் அச்சுறுத்தி வருகின்றனர். பல்வேறு சாதிகளில் பல்வேறு பிரிவு உள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும் விழா விநாயகர் சதுர்த்தி விழாவாகும். இது இந்துக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இதை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நெருக்கடி கொடுத்து நடத்தினாலும், நாம் அமைதியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடத்தி முடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி., கரண்சின்ஹா உத்தரவின் பேரில், தஞ்சை டி.ஐ.ஜி., திருஞானம், நேரடிப்பார்வையில், எஸ்.பி.,க்கள், திருச்சி கலியமூர்த்தி, தஞ்சை செந்தில்வேலன், திருவாரூர் மூர்த்தி, நாகை சந்தோஸ்குமார், கரூர், பிரவீன் குமார் அபினபு, அரியலூர் நஜ்மல் ஹோடா, கடலூர் அஸ்வின் கோட்னிஸ், ஏ.டி.எஸ்., துரைராஜ், உட்பட 3,000 போலீஸார் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு சோதனை அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3.30 மணிக்கு துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் 6.30 மணிக்கு பாமணி ஆற்றில் விநாயகர் சிலை இறக்கப்பட்டு கரைக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்லம் அமைதியான முறையில் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.ஊர்வலத்தில் சுமார் 10000 க்கு அதிகமான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம்


சென்னை: இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி கூறினார்.


சென்னையில் நடந்த சிதம்பரத்தின் 65வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் எல்லை தாண்டி பேசினால் ஒன்று நதி நீர் பிரச்சனை பற்றி பேசுவார்கள் அல்லது இலங்கைப் பிரச்சனை குறித்து பேசுவார்கள்.

காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக் கட்சிகள் பேசுவதில்லை.

தமிழர்களுக்கு தேசியமும் மிக அவசியம் தேவை. தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம். ஏனெனில் இந்தியா செழித்தால் தான் தமிழகம் செழிக்கும்.

இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்றார்.
நன்றி:thatstamil 21 09 2010


காஷ்மீரைப் போல இலங்கைக்கும் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பும் பாஜக


காஷ்மீருக்கு மத்திய அரசு உண்மை கண்டறியும் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பியிருப்பதைப் போல இலங்கைக்கும் ஒரு உண்மை கண்டறியும் குழுவை பாஜக அனுப்பவுள்ளது.

இந்தக் குழுவில் பாஜக கூட்டணி க் கட்சிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. அதிமுகவும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் போர் முடிவடைந்ததாக அந்த நாட்டு அரசு அறிவித்து ஒரு வருடத்தைத் தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போரினால் பாதித்து, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு எந்தவிதமான விமோச்சனமும் ஏற்படவில்லை. போர் நடந்த தமிழர் பகுதிகளில் இன்னும் யாரும் குடியமர்த்தப்படவில்லை. கண்ணிவெடிளை தேடுகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.


முள்வேலி முகாம்களில் இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அடைபட்டுள்ளனர். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல், அடிப்படை வசதி இல்லாமல், வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிப் போய் பிச்சைக்காரர்களாக திரியும் அவல நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்கும்போதெல்லாம் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றுமட்டும் கூறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவும், எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்று ஒற்றை வரியுடன் முடித்துக் கொண்டார்.

இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிய திமுக தலைமையில், ஒரு திமுக கூட்டணி குழு சென்று திரும்பியது. இருப்பினும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் தற்போது காஷ்மீர் நிலைமை குறித்து பெரும் கவலை அடைந்துள்ள மத்திய அரசு அந்த விவகாரத்தை பட்டும் படாமலும், மிக மிக கவனமாகவும் கையாளுகிறது. யாருடைய மனதும் புண்பட்டு விடாமல் பிரிவினைவாத தலைவர்களைக் கூட வீடு தேடிச் சென்று பார்த்து பவ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில், தற்போது பாஜக ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக தெரிகிறது. ஈழத்தில் தற்போது உள்ள உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக காஷ்மீர் பாணியில் ஒரு உண்மை கண்டறியும் குழுவை, பல்வேறு கட்சிகள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அது அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் ஆரம்பத்திலிருந்தே இலங்கைப் போரில் இலங்கை அரசை கடுமையாக சாடி வந்தது பாஜக மட்டுமே. அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்று குவித்து வருவதை நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மிகக் கடுமையாக சாடிப் பேசினார். தேசிய அளவில் ஈழத் தமிழர்களுக்காக ஒரே குரலில் தனது கருத்தை ஒலித்து வரும் கட்சியும் பாஜக மட்டுமே.

இந்த நிலையில் தற்போது தேசிய அளவில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்து உண்மையைக் கண்டறிய அது திட்டமிட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறவுள்ளனர்.மேலும், தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் சிலவும் கூட இடம் பெறும் எனத் தெரிகிறது. அதிமுகவும் கூட இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழுவுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இக்குழு இலங்கை செல்லலாம்.

காஷ்மீருக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவினருடன் பத்திரிக்கையாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. அதேபோல பாஜக குழுவினருடன் பத்திரிக்கையாளர்களும் செல்லலாம் என தெரிகிறது. ஆனால் பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு அனுமதிக்குமா என்பது சந்தேகம்தான்.
நன்றி : thatstamil 21 09  2010

பொருத்தமானவரைத் தேர்ந்தெடுங்கள்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரத்யூஷ் சின்ஹாவுக்குப் பதிலாக பி.ஜே. தாமஸ் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் பல நாடகங்கள் நடந்திருக்கின்றன. இந்த விவகாரம் ஊடகங்கள் வழியாகப் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இதிலிருக்கும் சில ÷முக்கிய விஷயங்கள் பலராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை.


1998-ம் ஆண்டில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியானது, ஒரு அவசரச் சட்டத்தின் மூலமாக சட்டப்பூர்வமாக்கப்பட்டது. புதிய முக்கியத்துவம் கிடைத்த அந்தப் பதவிக்கு என்.விட்டல் முதலாவதாக நியமிக்கப்பட்டார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் தவிர, குறைந்தபட்சம் மேலும் இரு ஆணையர்களும் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. சில ஆண்டுகளில் அந்தச் சட்டம் காலாவதியானது.
அதன் பிறகு 2003-ல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பிரதமர், இன்னொரு அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய 3 நபர் குழு தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வினீத் நரேன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது.
இதற்கிணங்க, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி காலியான சில நாள்களில் இந்தக் குழு கூடியது. அமைச்சரவைச் செயலாளர் தயாரித்த மிகத் திறமையான அதிகாரிகளின் பட்டியல் இந்தக் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அந்தப் பட்டியலில் மூன்று அதிகாரிகள் பெயர்கள் இருந்தன. தொலைத்தொடர்புத்துறை செயலாளராக இருந்த பி.ஜே.தாமஸ் பெயரும் அதில் அடக்கம். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் குழுவில் இடம்பெற்றிருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு, தாமஸ் மீது அதிருப்தி இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், குழுவில் இருந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் தாமஸýக்கு ஆதரவு தெரிவித்ததால், சுஷ்மாவின் கருத்து நிராகரிக்கப்பட்டது. அவரது எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், 2-1 என்கிற வாக்கு அடிப்படையில் தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் உண்மையில் நடந்தது. தற்போது வெளியாகிவரும் தகவல்கள் உண்மைக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.
÷இன்னொரு விஷயத்தையும் இதில் கவனித்தாக வேண்டும். தாமஸ் தவிர, பட்டியலில் இருந்த மற்ற இருவருக்கும் எந்தவித ஆட்சேபத்தையும் சுஷ்மா தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, அந்த இருவரையும் பரிசீலனை செய்யாமல் தாமûஸயே தேர்வு செய்ய வேண்டும் என பிரதமரும், உள்துறை அமைச்சரும் பிடிவாதமாக இருந்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
÷இவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என அரசு முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்திருக்குமானால், அவரது பெயரை மட்டுமே பட்டியலில் காட்டிவிட்டு, அவரையே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கும்படி செய்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மூன்று பேரின் பெயர்களைக் கொடுத்துவிட்டு அதில் ஒருவரைத் தேர்வு செய்வதில் பிடிவாதமாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுந்திருக்கிறது. முதல் பட்டியலில் இருந்த மற்ற இருவர் மீதும் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் ஆட்சேபம் இருந்தால், இன்னொரு பட்டியலைப் பரிசீலிப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் சுஷ்மா தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்து மத்திய கண்காணிப்பு ஆணையர் பதவிக்கான தேர்வு நடைமுறையை வெறும் சம்பிரதாயமாகவே அரசு நடத்தியிருக்கிறதே தவிர, திறமையையும் நேர்மையையும் பரிசீலித்து முடிவெடுக்கும் நிகழ்வாக நடத்தவில்லை.


÷கடந்த இரண்டு ஆண்டுகளாக தொலைத்தொடர்புச் செயலாளராக இருந்த காரணத்தினாலேயே தாமஸின் தேர்வுக்கு, சுஷ்மா ஆட்சேபம் தெரிவித்திருக்கக்கூடும். 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல், இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே மிகப் பெரியதும் மோசமானதும் என்று கருதப்படுகிறது.

அப்படியொரு ஊழல் நடந்த சமயத்தில் தொலைத்தொடர்புச் செயலாளராக தாமஸ் இல்லை. ஆயினும், தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தலைமையில் நியாயமான விசாரணை நடத்தப்படுமா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதையும் ஒதுக்கிவிட முடியாது.

÷அரசின் கொள்கை முடிவுகளில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமோ, பொது தணிக்கை அதிகாரியோ தலையிட முடியாது என்கிற கருத்து மத்திய சட்ட அமைச்சகத்தால் இப்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும் ஒரு துறையின் செயலாளரே விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியாக இருந்தால், குற்றச்சாட்டுகளை மிக எளிதாகத் தடுத்துவிடமுடியும். இந்த எண்ணமேகூட தாமûஸ தேர்ந்தெடுப்பதில் அரசு பிடிவாதமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதனால், வேறொரு அதிகாரியை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கலாம் என சுஷ்மா எடுத்திருக்கும் நிலை நியாயமானதே.


நல்லது செய்தால் மட்டும் போதாது, அது மக்கள் பார்வைக்கும் நல்லவிதமாகத் தெரிய வேண்டும் என்பதே நிர்வாகவியலின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால், மத்திய அரசு இந்தக் கோட்பாட்டை பொருள்படுத்தவில்லை. தாமஸ் மிகவும் திறமையான, நேர்மையான அதிகாரி என அரசு கருதுமேயானால், அவருக்கு வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியைக் கொடுக்கலாம். அதைவிடுத்து, பரவலான எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக, இருப்பது சரியல்ல.


÷அரசுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு கைமாறு செய்யும் விதமாக ஓய்வுக்குப் பிறகு, நல்ல நல்ல பதவி வழங்கி கெüரவப்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். சிபிஐ, ஐபி, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவோரை அரசு நியமிக்க விரும்புவதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி வளைந்து கொடுக்கக்கூடிய அதிகாரிகளை பெரிய பதவிகளில் நியமிக்கும் நடைமுறைதான் நமது நிர்வாக அமைப்பில் உள்ள மிகப் பெரிய ஓட்டை.
÷இதைத் தடுப்பதற்காகக்தான் சில பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்வதில் எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஓரளவுக்கேனும் நியாயமான தேர்வு நடைபெறும் என்கிற நம்பிக்கையில்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையர் தேர்வில், உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நடைமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறது.
÷திறமை, நேர்மை போன்ற தகுதிகளின் அடிப்படையிலேயே இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தகுதிகள் இங்கே புறக்கணிக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாக, தங்களுக்கு யார் வளைந்து கொடுப்பார்கள் என்பதை மட்டுமே ஆளும்கட்சிகள் பார்க்கின்றன. அதனால், திறமையைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டிய இடத்தில் அரசியல் புகுந்துவிடுகிறது. நாடாளுமன்றத்தில் அரசியல் பெரும்பான்மை ரீதியாக முடிவுகள் எடுக்கப்படுவதைப் போல முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
÷தவறான நபர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் பல முக்கிய பொறுப்புகளை வகிப்பதால்தான் நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறது. வளர்ச்சியை விரும்பும் ஒரு நாட்டுக்கு இது நல்லதல்ல. அரசியல் ஆதாயங்களை ஓரங்கட்டிவிட்டு, திறமையின் அடிப்படையில் முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகளைத் தேர்வுசெய்யும் நடைமுறையை உறுதியுடன் அமலாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வளைந்து கொடுக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமானவர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல நிர்வாகத்துக்கு அவர்கள் பொருந்த மாட்டார்கள். மக்கள் நலனுக்காக அவர்கள் பணியாற்ற மாட்டார்கள். நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமான இது போன்ற அதிகாரிகள், முக்கிய பொறுப்புகளிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு உரியவரைத் தேர்வுசெய்த விதத்திலிருந்து, நல்ல நிர்வாகத்தின் மீது அரசுக்கு நாட்டமில்லை என்பது தெரிந்துவிட்டது. பிறகு, சீர்திருத்தத்தை மட்டும் இவர்களிடமிருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்?


நன்றி:தினமணி 17 .09 .2010‘ஸ்டன்ட்’ அடிக்கிறார் உமாசங்கர்-சோ

கே : ‘தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’ – என்று உமாசங்கர், ஐ.ஏ.எஸ். கூறியுள்ளது பற்றி?
ப : அது எப்படி குடும்பத்துடன் தற்கொலை? தான் தற்கொலை செய்வது என்று வேண்டுமானால், ஒருவர் தீர்மானித்துக் கொள்ள முடியும். மற்றவர்களைப் பற்றி எப்படி இவர் நிச்சயமாகக் கூறுகிறார்? அவர்களையும் தற்கொலைக்குத் தூண்டி விடலாம் என்று நம்புகிறாரா? அல்லது, நிர்பந்தப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறாரா? அல்லது கொலையே செய்து விடுவதுபோல, ‘கட்டாயத் தற்கொலை’ ஆக்கி விடுவாரா?
இது எதுவும் நடக்காது. அவருக்கும் எதுவும் நேர்ந்து விடாது. அவர் ‘ஸ்டன்ட்’ அடிக்கிறார். ஒரு அரசியல்வாதி போல, பத்திரிகைகளுக்குப் பேட்டி; அதில் பல குற்றச்சாட்டுகள்; அவை போக இப்படி ஒரு ஸ்டன்ட்! ஒரு அதிகாரி இப்படியெல்லாம் நடந்து கொள்வது, அவருடைய பணி தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராகத்தான் இருக்கும். ரொம்பவும் தவறு.

நன்றி:துக்ளக் 17 09 2010

ரஷ்ய பெண்ணை கவர்ந்த பெருமாள் : மதம் மாறி புகழ் பரப்ப முடிவு


ராமநாதபுரம் : நடனம் கற்க இந்தியா வந்த ரஷ்ய யூதர் இன இளம்பெண், பெருமாளின் பெருமைகளால் வைணவத்திற்கு தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார்.
ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்தவர் தார்யா(20). எம்.ஏ., உளவியல் படித்து வரும் இவருக்கு, "குச்சுப்புடி' நடனம் மீது மோகம் ஏற்பட்டது. இதற்காக இந்தியா வந்த தார்யா, கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் கலைமாமணி சைலஜாவிடம் குச்சுப்புடி நடனம் கற்று வருகிறார். இந்த காலகட்டத்தில், நடனத்தில் வரும் அபிநயங்களை அறிய முயன்ற போது, பெருமாளின் பெருமைகள் தெரிய நேர்ந்தது. அதில் கவரப்பட்ட தார்யா, வைணவத்தில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பினார். இதற்காக தமிழகத்திலுள்ள பல்வேறு வைணவ தலங்களுக்கு சென்று, பெருமாளை வழிபட்ட பின், தன் முறையான இணைப்பை சென்னை அகோபிலா மடம் ஜீயர்கள் முன்னிலையில் நடத்தவிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் வந்த தார்யா, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள், சேதுக்கரை, ராமநாதபுரம் கோதண்டராமர் கோவில்களில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் தார்யாவின் குச்சுப்புடி நடனம் நடந்தது. இதை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
தார்யா கூறியதாவது: நடனம் மீது எழுந்த ஆசையில் இந்தியா வந்த என்னை, பெருமாளின் பெருமைகள் கவர்ந்தன. அவர் சார்ந்த வைணவ மதத்தை பின்பற்றி, நடனம் மூலம், அவரது புகழை பரப்புவதே என் எதிர்கால திட்டம். இதற்காக, அனைத்து வைணவ தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறேன். அகோபிலா மடம் ஜீயர்களிடம் முறைப்படி முத்திரை தானம் பெற்று, வைணவத்தில் முறையாக இணைய உள்ளேன். இவ்வாறு தார்யா கூறினார்.


நன்றி :தினமலர் 13 .09 .2010

த.மு.மு.க.மற்றும் தவ்ஹித் ஜமாஅத் மோதல் துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலி

திருவாரூர் அருகே த.மு.மு.க.மற்றும் தவ்ஹித் ஜமாஅத் முஸ்லிம்களுக்குள் நடைபெற்ற மோதல் காரணமாக, துப்பாக்கியால் சுட்டதில் ஜமாத் தலைவர் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த திருவிடைச்சேரி சின்னபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில்(55). அதே ஊரைச் சேர்ந்தவர் குத்புதீன். திருவிடைச்சேரி கிராமத்தில் 300 முஸ்லிம் குடும்பத்தினர் உள்ளனர். இதில், பெரும்பான்மையானோர் ஒரு முஸ்லிம் அமைப்பினர். குத்புதீன் மற்றும் எட்டு குடும்பத்தினர் இன்னொரு முஸ்லிம் அமைப்பினர். இவர்கள், பள்ளிவாசலுக்கு வராமல், அதன் நடைமுறையை பின்பற்றாமல், கோஸ்பாப்பா என்பவர் வீட்டில் தொழுகை நடத்தினர். கடந்த 4ம் தேதி இரவு கோஸ்பாப்பா வீட்டில் தொழுகை நடந்தபோது, பெரும்பான்மை அமைப்பினர் தகராறு செய்தனர். இது பற்றி, ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயிலுக்கு புகார் வந்ததால், அவர், குத்புதீன் மற்றும் அவருடன் சேர்ந்தவர்களை அழைத்து சமாதானம் பேசினார். கடந்த 5ம் தேதி இரவு 9 மணிக்கு, குத்புதீன் மைத்துனர், தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த ஹாஜ் முகம்மது மற்றும் சிலர் மூன்று காரில் திருவிடைச்சேரி வந்தனர். அங்கு, ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயிலுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, குத்புதீன் ஆதரவாளர் ஒருவர், முகம்மது இஸ்மாயிலையும், வேறு சிலரையும் தாக்கினார். இதில், ஹாஜ் முகம்மது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில், ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில், அவருடன் இருந்த தர்கா தெருவைச் சேர்ந்த ஹக்கீம் முகம்மது(60) ஆகியோர் குண்டு காயம் பட்டு இறந்தனர்.

இப்பேச்சு வார்த்தையில் பங்கேற்ற மற்றும் வேடிக்கை பார்த்த திருவிடைச்சேரி ஹாஜா மைதீன்(40), சந்தியாகு(30), விழுதியூர் பால்ராஜ் (60), அவரது மகன் ராமதாஸ்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், எதிர் தரப்பைச் சேர்ந்த திருமெய்ச்சூர் ரவி என்பவரும் காயம் அடைந்தார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் இருந்த கடை, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முக்கிய குற்றவாளி ஹாஜ் முகம்மது நேற்று முன்தினம் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். குத்புதீன், ரவி, ஜியாவுதீன், சலாவுதீன், அன்வர்தீன், பசீர் மைதீன், காஜா, முகம்மது பர்வா, முகம்மது இஸ்மாயில், பசீர் அகம்மது, முகம்மது அஜீஸ், முகம்மது அக்தர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான, சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்த தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடி, குறிச்சிமலை மெயின் ரோட்டில் வசிக்கும் ஹாஜ் முகம்மது வீட்டில், திருவிடைமருதூர் போலீஸ் டி.எஸ்.பி., ரத்தினவேல் திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு, ஒரு ரைபிள், ஒரு ரிவால்வர் கைப்பற்றப்பட்டது; இவை இரண்டுக்கும் லைசென்ஸ் இல்லை.


நன்றி தினமலர் 08 09 2010

பாதிரியார்களின் ஓரினச் சேர்க்கைதிருவனந்தபுரம் : கேரள கத்தோலிக்கத் திருச்சபையில், பாதிரியார்களிடையே இருக்கும் ஓரினச் சேர்க்கைப் பழக்கம், ஒழுக்கக் கேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து, பாதிக்கப்பட்ட பாதிரியார் ஒருவர், தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதனால் கேரள கத்தோலிக்கர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி, கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் இளம் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றியும், அதில் தான் பாதிக்கப்பட்டது பற்றியும் "ஆமென்' என்ற புத்தகம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார். தற்போது அதே கேரள கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், மீண்டும் அதே போன்ற பரபரப்பைக் கிளப்பி வருகிறார். கேரள மாநிலம் கொச்சி அருகிலுள்ள அங்கமாலியைச் சேர்ந்தவர் ஷிபு களம்பரம்பில் (39). இவர் கத்தோலிக்க மதகுருமார்களுக்கான பயிற்சிப் பள்ளியில் 13 ஆண்டுகள் பயிற்சி எடுத்து, பின் பாதிரியாரானவர். கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் உறுப்பினராக, கடந்த 24 ஆண்டுகளாக இருந்து வந்தவர். இவர் இந்த ஆண்டு மார்ச் மாதம், திடீரென தன் திருச்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பின், தோகாவுக்குச் சென்றவர், அங்குள்ள இந்தியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் மத்தியில் நிலவி வரும் ஒழுக்கக்கேடுகள் பற்றியும், அதனால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும், சுயசரிதையாக, "ஹியர் இஸ் தி ஹார்ட் ஆப் ஏ பிரீஸ்ட்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தன் சொந்தக் காசை செலவழித்து முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட்டுள்ள இவர், அடுத்த பதிப்பில் 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட திட்டமிட்டுள்ளார். தன் பணி விடுமுறையில் இப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்.


இவர் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது: நான் மூன்று தடவை, சாலை விபத்தில் சிக்கினேன். பாதிக்கப்பட்ட என்னை திருச்சபை ஆதரிக்காததால், நானே என் சிகிச்சைக்கான செலவை செலுத்தினேன். அதேபோல், காசர்கோட்டில், திருச்சபைக்குச் சொந்தமான பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த போது, மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும், சபை என்னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதிரியாரை, தொடர்ந்து அவமானத்தைச் சந்திக்க வைத்து, "இயேசுவுக்காக ஒரு பாதிரியார் சகல துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, சபை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? புனேயில் உள்ள, "பபல் செமினரி'யில் நான் பயிற்சி பெற்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். ஓரினச்சேர்க்கை என்பது அங்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து புகார் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெளியேற்றப்படுவர். அதற்கு பயந்து யாரும் புகார் அளிப்பதில்லை.பயிற்சிக் காலத்தில், இளம் துறவிகள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். பள்ளிச் சிறுவர்களை அவர்கள் சைக்கிளில் கொண்டு போய் விடுவர். அப்போது, சிறுவர்களை இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி இளம் துறவிகள் வற்புறுத்துவர். இது போன்ற நடவடிக்கைகள் பாலியல் நோக்கத்தோடு வெளிப்படையாக நடக்கின்றன. பயிற்சிக் கல்லூரியின் மூத்த பயிற்சியாளர்கள், பாதிரியராக தங்களைக் காட்டிக் கொண்டு, பின் அதற்காக பாவமன்னிப்பும் கேட்டிருக்கின்றனர். பாதிரியார்கள் பலர், விதவைகள், கன்னியாஸ்திரிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்திருக்கின்றனர். மேலும் சிலர், சர்ச்சுக்கு வரும் நன்கொடைகளை, தங்கள் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிட்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றால், சர்ச்சின் நிதி, அரசால் கையாளப்பட வேண்டும். இவ்வாறு ஷிபு, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நன்றி தினமலர் 08 09 2010

ராம ஜென்ம பூமியில் வரலாற்று ஆதாரங்கள்

செப்டம்பர் 04,2010
சென்னை : ""ராம ஜென்ம பூமியில் பல வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன,'' என தொல்லியல் ஆய்வாளர் அருண்குமார் சர்மா பேசினார்.இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், ராம ஜென்ம பூமி குறித்த கருத்தரங்கு, சென்னை மயிலாப்பூரில் நடந்தது. கருத்தரங்கில், மூத்த வக்கீல் ராஜகோபாலன் பேசியதாவது: தற்போது, நடைமுறையில் இருக்கும் பல சட்டங்கள், அன்றே ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டவை. பலதார மணம் முடிக்கும் பழக்கம் இருந்தும், ஒரு மணம் தான் சிறந்தது என்ற சமூக ஒழுக்க நெறிமுறை ராமாயண காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது. அரசியல் பார்வையில், மதச்சார்பற்ற கொள்கை வேறு கண்ணோட்டத்துடன் அணுகப்படுகிறது. ஆனால், மதச்சார்பற்ற கொள்கை என்பது எல்லா மதத்திற்கும் சம மரியாதை வழங்குவது தான்.ராம ஜென்ம பூமி குறித்து ஐந்து வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த பிரச்னை குறித்து, கோர்ட் விவாதத்தின் போது ராமர் பிறந்த இடமா, இதற்கு முன் கோவில் இருந்ததா என்பன போன்ற கேள்வி எழுந்ததையடுத்து, சுப்ரீம் கோர்ட் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது, வரலாற்று சான்றுகள் மூலம் உண்மை நிரூபிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது.

தொல்லியல் ஆய்வில், வராகம் மற்றும் இந்து கோவில்களின் வரலாற்று தூண்கள் என பல புராதன சின்னங்கள் கிடைத்தன. சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மை சமூகம் மீது ஆட்சி செலுத்துவது, இந்தியாவில் மட்டும் தான் உள்ளது. இது வேறு எந்த நாடுகளிலும் இல்லை.ராம ஜென்ம பூமி குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், இந்துக்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு ராஜகோபாலன் பேசினார்.


தொல்லியல் ஆய்வாளர் அருண்குமார் சர்மா பேசும் போது,"" ராம ஜென்ம பூமி பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல வரலாற்று சின்னங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வு பணிகள் அனைத்தும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு உருவ வழிபாடு முறை மீது நம்பிக்கை இல்லை. இந்து கோவில்களில் உள்ள தூண்கள் மற்றும் புராதன சின்னங்களை கொண்டு தான் மசூதி கட்டப்பட்டிருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.இவ்வாறு அருண்குமார் சர்மா பேசினார். கருத்தரங்கில், ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணாசலம், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் இல. கணேசன், தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
தொல்லியல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி பேசியதாவது: தொல்லியல் ஆய்வில், ஒரு விஷயத்தை முன் இருந்த விஷயங்கள் மற்றும் தற்போது உள்ள விஷயங்களுடன் தொடர்புபடுத்தியே விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வில், உள்ளூர் இலக்கியம், சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழி, வேத அறிவு உள்ளிட்டவை அவசியம்.


தற்போதைய தொல்லியல் ஆய்வாளர்களுக்கு வேதங்களைப் பற்றிய அறிவு குறைவாக உள்ளது. முன் தொல்லியல் துறையில் சேர சமஸ்கிருதம், பாலி மற்றும் செம்மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். தற்போது அந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.விஷ்ணு சம்கிதா என்ற பழமையான நூல், விஷ்ணுவை வழிபடும் முறைகள் குறித்து எடுத்துரைக்கிறது. விஷ்ணு சிலையின் ஒவ்வொரு பகுதியையும், விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களாக வழிபடலாம் என விஷ்ணு சம்கிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, விஷ்ணு சிலையை ராமராகவும் வழிபடலாம். இதற்கு உதாரணம் தற்போதும் உள்ளது. குருவாயூரில் விஷ்ணு சிலை, கிருஷ்ணராக வணங்கப்படுகிறது. பின்னர் இப்பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு சத்தியமூர்த்தி பேசினார்.கருத்தரங்கில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, மூத்த வக்கீல் ராமானுஜம், வேளுக்குடி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த ஆவணப் படங்களைக் காட்டி, தொல்லியல் ஆய்வாளர் சர்மா விளக்கமளித்தார்

நன்றி தினமலர் 05 09 2010