‘ஸ்டன்ட்’ அடிக்கிறார் உமாசங்கர்-சோ

கே : ‘தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’ – என்று உமாசங்கர், ஐ.ஏ.எஸ். கூறியுள்ளது பற்றி?




ப : அது எப்படி குடும்பத்துடன் தற்கொலை? தான் தற்கொலை செய்வது என்று வேண்டுமானால், ஒருவர் தீர்மானித்துக் கொள்ள முடியும். மற்றவர்களைப் பற்றி எப்படி இவர் நிச்சயமாகக் கூறுகிறார்? அவர்களையும் தற்கொலைக்குத் தூண்டி விடலாம் என்று நம்புகிறாரா? அல்லது, நிர்பந்தப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறாரா? அல்லது கொலையே செய்து விடுவதுபோல, ‘கட்டாயத் தற்கொலை’ ஆக்கி விடுவாரா?
இது எதுவும் நடக்காது. அவருக்கும் எதுவும் நேர்ந்து விடாது. அவர் ‘ஸ்டன்ட்’ அடிக்கிறார். ஒரு அரசியல்வாதி போல, பத்திரிகைகளுக்குப் பேட்டி; அதில் பல குற்றச்சாட்டுகள்; அவை போக இப்படி ஒரு ஸ்டன்ட்! ஒரு அதிகாரி இப்படியெல்லாம் நடந்து கொள்வது, அவருடைய பணி தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராகத்தான் இருக்கும். ரொம்பவும் தவறு.

நன்றி:துக்ளக் 17 09 2010