அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் இந்துகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க ராமேஸ்வரத்தில் சிறப்பு யாகம்



ராமேஸ்வரம்: அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டி ராமேஸ்வரத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோயில் பிரச்சனை தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24-ம் தேதி அன்று வழங்கப்பட உள்ளது.
நாடே ஆவலாக எதிர்பார்க்கும் இந்த வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமைய வேண்டி ராமேஸ்வரத்தில் அபய ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரசேகர சர்மா தலைமையில், 21 வேதவிற்பன்னர்களால் மகா ஸ்ரீ அனுமன் யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் முரளீதரன், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்