தொடர்ச்சி…

சிமி (Students Islamic Movement of India)
1977ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ந் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகார் பல்கலைக் கழகப் பேராசிரியர் முகம்மது அகமத்துல்லாக் சித்திக் என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இவர் Western Illinois University Macombல் இதழியல் மற்றும் பொதுத் தொடர்பு பிரிவின் பேராசிரியராக பணிபுரிந்தவர். ஜமாத்-இ-இஸ்லாம்-இந்து எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். சிமி இயக்கத்தை துவக்கி அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி தெளிவாக அறிவித்துள்ளார். மனித வாழ்க்கையைக் குரானின் போதனைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும், இஸ்லாத்தை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். இதற்காக ஜிகாத்தை துவக்க வேண்டும் என்பவை இவ்வமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளாகும்.
1977ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ந் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகார் பல்கலைக் கழகப் பேராசிரியர் முகம்மது அகமத்துல்லாக் சித்திக் என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இவர் Western Illinois University Macombல் இதழியல் மற்றும் பொதுத் தொடர்பு பிரிவின் பேராசிரியராக பணிபுரிந்தவர். ஜமாத்-இ-இஸ்லாம்-இந்து எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். சிமி இயக்கத்தை துவக்கி அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி தெளிவாக அறிவித்துள்ளார். மனித வாழ்க்கையைக் குரானின் போதனைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும், இஸ்லாத்தை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். இதற்காக ஜிகாத்தை துவக்க வேண்டும் என்பவை இவ்வமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளாகும்.

சிமி இயக்கத்தில் இருப்பவர்கள், இஸ்லாம் அல்லாத மற்ற அனைத்துக் கருத்துக்களுக்கும், முக்கியமாக இந்து மதங்களுக்கும், மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் சிந்தனைக்கும் எதிரானவர்கள். SIMI is widely belived to be against Hinduism, western beliefs and ideals, as well as othe ‘anti-islamic cultures, ‘ has declared Jihad against India, the aim of which is to establish Dar-ul-Islam (Land of Islam) by either forcefully converting everyone to Islam or by violence. As the organization does not belive in a nation-state, it does not believe in the Indian Constitution or the secular order. SIMI also regards idol worship as a sin and considers it to be a holy duty to terminate idol worship.
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களின் மூலமாக பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்குப் படித்து வேலையில்லாத இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்ய சிமி இயக்கத்தில் சேர்க்க அதிகக் கவனத்தை அவர்கள் செலுத்தினார்கள். 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கும்மட்டம் இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் இவர்கள் ஜிகாத் பாதைக்கு மாறியதாகவும் பலர் கூறுகின்றார்கள்.

27.7.2006ந் தேதி புது டெல்லியில் Unlawful Activities (Prevention ) Tribunal இவ்வமைப்பு குறித்து விவாதம் நடந்தது. “முன்பு தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மீது மீண்டும் தடை விதிக்க வேண்டுமா?” என்கிற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்த பதில் “ வெளிப்படையாகத் தடை விதிக்கப்பட்ட பின் சிமி இயக்கத்தினர் எவ்விதத் தீவிரவாதச் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. ஆனால் நாட்டில் நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும், வகுப்புக் கலவரங்களிலும் சிமி இயக்கத்தினர் அதிக அளவில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் உள்ளன” எனத் தெரிவித்தனர்.
2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று புது டெல்லியில் மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு Islamic Inquilabi Mahaz என்கிற Islamic Revolutionary Front அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது. இந்த அமைப்பிற்கும் சிமி இயக்கத்தினருக்கும் அதிக தொடர்பு இருப்பதாகவும், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன் பல முறை இரண்டு அமைப்பினரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்க்கா மற்றும் ஹூப்ளியிலும் சந்தித்துள்ளனர் என்று விசாரணையின் போது மத்திய உளவுத் துறையினர் தெரிவித்தார்கள்.

2003ம் ஆண்டு நடந்த பல தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது லஷ்கர்-இ-தொய்பாவின் கூட்டாளியாகவோ தீவிரவாத தாக்குதல்களை இவ்வமைப்பு நடத்தியுள்ளது. நடந்த அனைத்து தாக்குதல்களிலும் சிமி இயக்கத்தினரின் முழு உதவியுடன் லஷ்கர்-இ-தொய்பாவினர் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளர்கள்.
பாக்கிஸ்தான் வகுத்து கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் பாரத தேசத்தில் உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளை பயன் படுத்திக் கொண்டவர்கள் சிமி இயக்தினர். மத்திய பிரதேசம் இந்தூரிலிருந்து 35 கிமீ தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் ஜிகாதிகளுக்கு வெடிமருந்து தயாரிப்பது, அவற்றை எப்படி கையாளுவது என்கிற பயிற்சிகள் கொடுத்தனர். இந்தப் பயிற்சிக்கு ஜார்கண்ட் , கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் உள்ள சிமி இயக்கத்தினர் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வுக்குப் பின் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் சிமி இயக்கத்தினர் அதிக அளவில் மகாராஷ்ட்ரம், அஸ்ஸாம், பீகார், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள். சிமி இயக்கத்தினருக்கு பங்களா தேஷ் நாட்டின் தீவிரவாத இயக்கமான Harkat-ul-Jehad-al-Islamiயுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்த இயக்கத்தின் தொடர்பு மட்டுமில்லாமல் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடனும் பாக்கிஸ்தானின் தீவிரவாத இயக்கமான் லஷ்கர்-இ-தொய்பாவுடனும் சிமி இயக்கத்தினருக்கு தொடர்ப்பு உண்டு. Harlat-ul-Jehad-al-Islamiக்கு ஆட்கள் பிடிக்க கான்பூர் லக்னோ, அம்பேத்கார் நகர், அலிகார், அலகாபாத், ஆஸிம்காட், சோனலி, பெரேஷ்ஸாபாத் போன்ற நகரங்களில் உள்ள சிமி இயக்கத்தினர் அவர்களுக்கு முழு உதவி புரிந்தார்கள்.
துவக்க காலங்களில் சிமி இயக்கச் செயல்பாடுகளில் Maududiயின் சொல்வாக்கும் செல்வாக்கும் அடிமட்டம் வரையில் ஊடுருவி இருந்தன. இதன் காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமிய இயக்கத்தின் ஒரு பகுதி பாரத தேசத்தில் துவங்கப்பட்டது. அதற்குப் பெயர் ஜமாத்-இ-இஸ்லாமி-இந்த் என்பதாகும்.

சிமி இயக்கத்தினருக்கு ரியாத்தில் உள்ள World Assembly of Muslim Youth (WAMY) எனும் அமைப்பிலிருந்தும், குவைத்தில் தலைமையகமாகச் செயல்படும் International Islamic Federation of Students Organisationலிருந்தும் பெருமளவு நிதி கிடைக்கிறது. சிக்காகோவில் அமைக்கப்பட்ட Consulation Committee of Indian Muslims எனும் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிமி இயக்கத்தினருக்குத் தார்மீக ஆதரவும் பொருளுதவியும் அதிக அளவில் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் பெறப்படும் நிதியை வைத்துக் கொண்டு குஜராத் கேரளா உத்திர பிரதேசம் பீகார் ஜார்கண்ட் கர்நாடக போன்ற மாநிலங்களில் மட்டும் 25,000க்கு அதிகமான இஸ்லாமிய இளைஞர்கள சிமி இயகத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் சிமி இயக்கத்தினர் வைத்துள்ளார்கள். கேரளத்தைத் தலைமையிடமாக அமைத்து செயல்படும் National Democratic Front , Islamic Youth Centre என்கிற இரு அமைப்புகளும் , தமிழகத்தில் உள்ள தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் பெயரில் உள்ள இந்த அமைப்பும் சிமி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1993ம் ஆண்டு சீக்கிய தீவிரவாதிகளைத் தொடர்ச்சியாகக் கைது செய்த போது , சீக்கிய தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் ஒருங்கிணைக்கும் பணியினைச் செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். இப் பணியினைச் செய்ய சிமி இயக்கத்தினருக்கு ஆதரவாகத் துணை நின்றவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஜமாத்-இ-இஸ்லாமி என்கிற அமைப்பினர்.
சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பினை விரிவுபடுத்த உத்திரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களை அதிக அளவில் சேர்த்து மிகப் பெரிய வலிமையான இயக்கமாக மாற்றினார்கள். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அவுரங்காபாத், மலோகான், ஜலாகான், தானே போன்ற நகரங்களில் அதிக ஆட்களை சிமி இயக்கத்தில் சேர்த்தனர். சித்தாந்த ரீதியாக இவர்கள் ஆசிய கண்டத்தில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்த Sha Waliullah, Sayyid Ahmad, Haji Shariat Allah , Maulana Maududi ஆகியவர்களின் போதனையில் சிமி இயக்கத்தினர் செயல்படுகிறார்கள். பல சந்தர்பங்களில் சிமி இயக்கத்தினர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை துவக்கிய Maulana Maududi வழிகாட்டுதலில் தங்களின் பணிகளை நிர்ணயிக்கிறார்கள்.

அவ்விதமாக இசுலாமிய மதப் பணிகள் Lucknow, Kanpur, Aligarh, Agra, Faizabad, Bahraich, Barabanki, Lakhimpur Kheri, Azamgarh ஆகிய இடங்களில் நடக்கின்றன. கேரளாவில் இயங்கும் 12 முன்னணி நிறுவனங்களும் அதில் அடக்கம். திருவனந்தபுரத்தில் இரண்டும் கொச்சியில் ஒன்றும் மலப்புரம் மாவட்டத்தில் Kondotty ஆகிய இடங்களிலும் சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளன.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அவுரங்காபாத், மலோகான், ஜலகான், தானே, ஆகிய நகரங்கள் சிமி இயக்கத்தின் வலிமையான பகுதிகளாகும். ஜலகான், நாசிக், தானே, சோலப்பூர், கோலாப்பூர், நான்டாட், அவுரங்காபாத் , பூனே, போன்ற மாவட்டங்களில் மதராசாக்கள் சிமி இயக்கத்தின் பணிகளை செய்கின்றன.
மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் 3000 மதராசாக்கள் இயங்குகின்றன. இதில் மும்பையில் மட்டும் 500 மதராசாக்கள் உள்ளன. 2001ம் வருடம் சிமி இயக்கத்தின் மீது தடைவிதிக்கப்படுவதற்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் மீது 33 வழக்குகள் பதிவாயிருந்தன. இந்தூர், உஜ்ஜினி, போபால் போன்ற நகரங்களில் அதிக அளவில் சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. சிமி இயக்கத்தின் தேசீயப் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி (Safdar Nagori) மீது மட்டும் 49 வழக்குகள் பதிவாயிருந்தன. 2001ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட பின் 180 சிமி இயக்கத்தினர் மகாராஷ்ட்ர மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Khandwa பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட 10 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிமி இயக்கத்தின் மீது தடை விதித்த பின் மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மதராசாக்கள், முஸ்லீம் கிளப், முஸ்லீம் வாசகசாலைகள், முஸ்லீம் கலாச்சார மையங்கள் போன்றவற்றில் சிமி இயக்கத்தினர் அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள். 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24பர்கான மாவட்டத்தில் உள்ள Mograhat எனுமிடத்தில் Islamic Siksha Shivirs என்கிற அமைப்பின் மூலமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பில் பயங்கரவாத செயல்கள் எவ்விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் எவ்வாறு ஊடுருவ வேண்டும் என்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் சிமி இயக்கத்தின் ஆதரவுடன் இந்திய தேசீய லீக் என்கிற பெயரில் இயக்கம் துவக்கப்பட்,டு அந்த இயக்கத்தின் சார்பாக 2004ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டார்கள். அவை Jangipur,Murshidabad, Diamond Harbour, Basirhat, Jadarpur, Kolkata North east ஆகிய தொகுதிகள் ஆகும்.
சிமி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் மேற்கு வங்கத்தின் முக்கிய பொறுப்பாளருமான Hasan Saidullah Ashraji என்பவர் Basirhat தொகுதியில் போட்டியிட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் சிமி இயக்கத்தினரின் வளர்ச்சி அந்த மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டங்களான மால்டா,மூர்ஸிதாபாத், வடக்கு தெற்கு Dinajpur மற்றும் கல்கத்தா போன்ற பகுதிகளில் தங்களின் செயல்பாடுகளை அதிக அளவில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
சிமி இயக்கத்தினர் ஜனநாயம் மதச்சார்பின்மை தேசீயம் போன்ற கொள்கைகளில் எவ்வித நம்பிக்கையும் மதிப்பும் வைக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக 400 முழு நேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 20000க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சிமியில் 30வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இவர்களுக்கு எனத் தனியாக பிரசுரங்கள் உள்ளன. அவை மளையாளத்தில் விவேகம் என்கிற இதழ், தமிழில் செய்தி மடல், குஜராத்தியில் Iqraa என்றும் வங்கத்தில் Rupantar என்றும் இந்தியில் Tahreek என்றும் உருதுவில் Al Harkah மற்றும் Shaheen Times என்ற பெயரில் இதழ்கள் வெளிவருகின்றன.
இந்திய துணை கண்டத்திற்கு அப்பாலும் சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இதில் சவுதி அரேபியாவும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளிலும் சிமி க்கு அமைப்புகள் உள்ளன. 2003ல் சுமார் 350 இந்திய இஸ்லாமியர்கள் ஜோர்டான், லிபியா, சவுதி அரோபியா, ஓமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இந்திய துணை கண்டத்திற்கு அப்பாலும் சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இதில் சவுதி அரேபியாவும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளிலும் சிமி க்கு அமைப்புகள் உள்ளன. 2003ல் சுமார் 350 இந்திய இஸ்லாமியர்கள் ஜோர்டான், லிபியா, சவுதி அரோபியா, ஓமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் International Islamic Front என்கிற அமைப்பின் மூலமாக ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தேவைப்பட்டால் கையில் ஆயுதங்களை எடுப்பதுமாக மதப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
சிமி அமைப்பில் உள்ள மாணவர்களிடம் உள்ள உலக வரைபடத்தில் காஷ்மீர் பாக்கிஸ்தானில் இருப்பது போல் அச்சடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலமே இந்தியாவில் இல்லாதது போல் அச்சடிக்கப்பட்ட படத்தை அவர்கள் மாணவர்களிடம் விநியோகித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை சி.பி.சி.ஜ.டி. போலீசார் கைது செய்தார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட அந்த நபரும் சிமி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது. ஆந்திராவில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அதிக அளவில் படிக்கும் பள்ளிகளில் உள்ள இந்திய வரைபடத்தில காஷ்மீர் மாநிலம் தனி நாடாக இருப்பது போல் அச்சடிக்கபட்டு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னையில் 2002ம் ஆண்டு மூன்று முறை தாவூத் இப்ரகீம் ஆட்கள் பிடிப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடித்து மும்பை போலீஸில் ஒப்படைப்பதைத் தவிர சென்னை போலீஸார் வேறு எதுவும் செய்யவில்லை. அவர்கள் எதற்காக வந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்ததது யார், சென்னையில் அவர்கள் யார் யாரைச் சந்தித்தார்கள் என்பதைப் பற்றி சென்னை காவல் துறையினா தங்களது விசாரனையை நடத்தவில்லை என்பவை கேள்வி குறியானது.

1993ம் வருடம் மார்சு மாதம் 12ந் தேதி மும்பையில் 13 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு நடந்தன. இச் சம்பவத்தில் 257 பேர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படு காயம் அடைந்தார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து. இந்த வெடிமருந்து முதன் முதலில் மும்பை குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்டது. இவ்வளவு மோசமான குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தியவன் மும்பை உலகின் தாதா இப்ரகீம் தாவுத் ஆவான்.
1993ம் வருடம் ஜனவரி மாதம் 29ந் தேதி முதல் பிப்ரவரி 2ந் தேதிக்குள் இந்த சம்பவத்திற்குரிய வெடிப் பொருட்கள் கொண்டு வருவதற்கு கடற்கரை பகுதியான ஷெகாடியில் உள்ள காவல்துறையினரைச் சரிகட்டினார்கள். இதற்காக அவர்களுக்குப் பல லட்சம் ரூபாய்கள் லஞ்சமாக வழங்கப்பட்டன. அதிகாரிகளைச் சரிகட்டியபின் 1993ம்வருடம் பிப்ரவரி மாதம் 3ந் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் உள்ள பாக்கிஸ்தானுக்குச் சொந்தமான கப்பலிருந்து வேறு கப்பலுக்கு 1500 கிலோ. ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, ஏ.கே.56 ரக துப்பாக்கிகள், மற்றும் கையெறி குண்டுகள் மாற்றப்பட்டன. ஏற்கனவே, இந்த வகையான குண்டுகளை கையாளுவது எப்படி என்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு இரண்டு குழுக்கள் பாக்கிஸ்தான் வழியாக துபாய்க்கு 19 பேர்கள் அனுப்பபட்டார்கள். இவர்கள் துபாயில் தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு 1993ம் வருடம் பிப்ரவரி மாதம் 4ந் தேதி மும்பைக்கு வந்தார்கள்.

வெடிபொருட்களை ஏற்றுவதற்கு போர்ட் ஸ்டிகினி எனும் கப்பல் தயார் நிலையில் இருந்தது. வெடிமருந்தை இறக்குவதற்கு முன்பாகவே அருகில் இருந்த ஸ்டிகினி எனும் கப்பல் எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. மாற்று கப்பலுக்கு இறக்க வேண்டிய 1400 டன் வெடிமருந்துகள் வெடித்தன. 800க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். 1944ம் ஆண்டு சம்பவத்திற்குப் பின் 1993ம் வருடம் மார்சு மாதம் 12ந் தேதி நடந்த சம்பவம் தான் மிகப் பெரிய நாசகார சம்பவமாகும்.
1993ம் வருடம் மும்பையில் நடந்த சம்பவத்திற்கு முழு முதற் காரணம் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்பது விசாணையில் தெரியவந்தது. பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருக்கும் Wah Cantt என்கிற வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனம்தான் இந்த வெடிபொருட்களைத் தயாரித்தது என்பது பின்னர் தெரியவந்தது. அல்கூசைனியில் டைகர் மேமனின் வீட்டில் விசாரணை நடத்திய போது Wah Nabel Industries, Wah Cantt. என்று அச்சிடப்பட்டிருந்த பெட்டிகள் கிடைத்தன.
லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டு இந்தியாவில் நடத்திய தாக்குதல்கள், 1.10.2001ந் தேதி காஷ்மீர் சட்டமன்ற வளாகத்தில் நடத்திய தாக்குதல், சட்டமன்றத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து காரில் வைத்திருந்து வெடிகுண்டு வெடித்து 38 பேர்கள் கொல்லப்பட்டது, 13.12.2001ந் தேதி பாராளுமன்ற கட்டிடம் தாக்குதல் சம்பவம், இந்த சம்பவத்தில் ஜந்து தீவிரவாதிகளும் ஏழு பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டது இவை அனைத்திலும் சிமியின் பங்கு தலைமைத்துவம் வாய்ந்தது. பாராளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஜந்து தீவிரவாதிகளும் பாக்கிஸ்தானைச் சார்ந்தவர்கள்.

டாட்டா கன்சல்டனசி நிறுவனம் தனக்கான ஆள் எடுக்கும் விளம்பரத்தில் அலிகார் பல்கலை கழக மாணவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.
நன்றி :தமிழ் ஹிந்து