இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-03


2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி சிமி இயக்கத்திற்கு தடை விதித்த பின் அமைப்பின் பொறுப்பில் உள்ளவர்கள் பல்வேறு அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டும் வேறு பெயர்களில் புதிய அமைப்பை துவக்கினார்கள்.  அவ்வாறு துவக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று இந்தியன் முஜாஹூதீன் என்கிற அமைப்பாகும்.
இந்தியன் முஜாஹூதீன் (Indian Mujahedeen)
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் இந்தியன் முஜாஹூதீன் எனும் அமைப்பு முக்கியமான பயங்கரவாத இயக்கமாகும்.  2008ம் ஆண்டுக்கு முன் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றதா என்கிற சந்தேகம் பலர் மனதில் எழுந்தது.  2007ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி,  பைசாபாத், லக்னோ போன்ற மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வெடித்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இயக்கம் இந்தியன் முஜாஹூதீன் என தெரியவந்தது.  குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் உத்திரப் பிரதேச காவல் துறையினர் பல இடங்களில் உள்ள இஸ்லாமியர்களின் இல்லங்களில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தை நடத்தியவர்கள் புதிய இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.  நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்தJaish-e-Muhammad அமைப்பைச் சார்ந்தவர்களை வழக்குரைஞர் சிலர் தாக்கியதற்காகப் பழி வாங்கவே நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதாகப் பல்வேறு மீடியாக்களுக்குத் தகவல் கொடுத்த பின் தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியன் முஜாஹூதீன் எனும் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக உளவுத் துறைக்கு தெரியவந்தது.
இந்தியன் முஜாஹூதீன் அமைப்பின் விசித்திரம் தாக்குதல் நடத்துவதற்கு முன் அனைத்து மீடியாக்களுக்கும்  தகவல் கொடுத்து விட்டுத் தாக்குதல்களை நடத்துவது.  இந்த புதிய அமைப்பில் உள்ளவர்கள், தடை செய்யப்பட்ட மூன்று முக்கிய அமைப்பினர்:
 ஒன்று சிமி, இரண்டாவது ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி(Harkat-ul-jihad-e-islami) என்ற இயக்கமும்,  மூன்றாவதாக சிறையில் உள்ள அப்டாப் அன்சாரியின் (Aftab Ansari) ஆதரவாளர்கள் அடங்கிய அமைப்பும் உள்ளடங்கிய பயங்கரவாத இயக்கம்தான் இந்தியன் முஜாஹூதீன். 
தாக்குதல் நடத்துவதற்கு முன் இ-மெயில் அனுப்பும் போது தெளிவாகக் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுப்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 
நடுத்தர மற்றும் கீழ் தட்டு இஸ்லாமியர்களில் உள்ள இந்து விரோத சிந்தனை உள்ளவர்களை அணுகி அவர்களை இயக்கத்தில் இணைப்பது,  ஓசாமா பின்லேடனில் சிந்தனையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றிற்காகத் துவக்கப்பட்ட இயக்கம் இந்தியன் முஜாஹூதீன்.  இவர்களுக்கு லஷ்கார்-இ-தொய்பாவூடனும் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.யுடனும் இன்னும் சில பயங்கரவாத அமைப்புடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்களும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தியன் முஜாஹூதீன் அமைப்பைப் பற்றிய முழு விவரங்கள் கிடைத்துள்ளன.  முன்னாள் சிமி இயக்கத்தின் பொறுப்பாளாரான ஸாஃப்ட்வேர் என்ஜினியரான அப்துல் சுபான் குரேஷி (Abdul Subhan Qreshi) என்பவனால் இந்த இயக்கம் துவக்கப்பட்டது.  இதற்கு முன்னரே உத்திர பிரதேச மாநிலம் ஆஸம்காட் பகுதியில் எலக்ட்ராணிக் என்ஜினியரான முன்னாள் சிமி இயக்கத்தை சார்ந்த சாதிக் இஸ்ரார் சேஷ் (Sadiq Israr Sheikh) என்பவன் இந்த இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கியவன்.  இவனது மைத்துனர் பாகிஸ்தானைச் சார்ந்த முஜாஹித் சலீம் என்பவன் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் தொடர்பு ஏற்பட்டு, அதன் மூலம் பயங்கரவாத பயிற்சி பெற்றவன். 
2006ம் ஆண்டு ஜீலை மாதம் மும்பையில் நடந்த ரயில் தொடர் குண்டு வெடிப்பின் சூத்ரதாரியாவான். முழுமையாக இந்தியன் முஜாஹூதின் அமைப்பினர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் முன் பல்வேறு தாக்குதல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.  விசாரனையில் கிடைத்த தகவல்களில் ஆச்சரியப்படத் தக்க செய்தி இந்தியன் முஜாஹூதின் அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் ஐ.டி யில் பணிபுரிபவர்கள். இவர்களில் பலர்  பெரும் செல்வந்தர்கள்.  குறிப்பாக அஷ்கர்  பீர்பாய் (Asghar Peerbhoy) சல்மான் காதர் ஷைகாந்த் (Salman Kadar Shaikhand) அசிப் பஸிரிதின் ஷேக் (Asif Bashiruddin Shaikh) போன்றவர்கள் குறிப்பிட தக்கவர்கள்.  யாஹூ இணைய தளத்தில் பணிபுரிந்த பீர்பாய் இந்தியன் முஜாஹூதின் அமைப்பின் மீடியாவின் முக்கிய பொறுப்பாளார்.
 
இந்தியன் முஜாஹூதீன் அமைப்பைப் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.  கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் மும்பை காவல் துறையினர் நடத்திய 1809 பக்க விசாரணை  அறிக்கையின் அடிப்படையில் சில சம்பவங்கள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தியன் முஜாஹூதீன் நடத்திய முக்கியமான நான்கு தாக்குதல்கள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் முழுமையாக காவல் துறையினருக்கு தெரிய வந்தது.
13.5.2008ந் தேதி ஜெய்ப்பூரில் ஒன்பது இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளின் காரணமாக 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.  25.7.2008ந் தேதி பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும்,  26.7.2008ந் தேதி அகமதாபாத் நகரில் 16 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பும், இதில் 38 பேர்கள் கொல்லபட்டதும், நூற்றுக்கணக்கானவர்கள் படு காயமடைந்த சம்பவமும், 23.9.2008ந் தேதி தலைநகர்  டெல்லியில் ஐந்து இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும், இந்தியன் முஜாஹூதீனின் கொடூர செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. பல்வேறு சம்பவங்களில், குறிப்பாக 2008ம் ஆண்டு ஜீலை 26ந் தேதி அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட கோரி (Ghauri) ஹூசைனி (Husaini) இருவரும் சிமி இயக்கத்தினர்.
அகமதாபாத் மற்றும் சில இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் கேரளத்தில் உள்ள ஆல்வா என்கிற மாவட்டம்.  இந்த மாவட்டத்தில் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம்  50 நபர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது.  இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் உஸ்மான் அகர்பாட்டிவாலாவும்(Usman Agarbattiwala) சாஜீத் மன்சூரி என்பவனும் முக்கியமானவர்கள்.  ஆல்வாவில் கொடுக்கப்பட்ட பயிற்சியைப் போலவே கேரளமாநிலத்தில் உள்ள  Halol எனும் பகுதியில் உள்ள பாவகாத் மலைப் பகுதியில் (Pavagadh hills) 2008ல் பயிற்சி அளிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான பயங்கரவாதி முகமது சபி (Muhammed Saif). இவனிடம் நடத்திய விசாரனையில் இந்தியன் முஜாஹூதீன் அமைப்பின் செயல்பாடுகள் நோக்கங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.  பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காகவே நான்கு விதமான பிரிவுகள் செயல்படுவதாகத் தெரிவித்தான். 
இந்த நான்கு பிரிவுகளுக்கும் ஒரு கமாண்டர் இருப்பார். அவர் லஷ்கர்-இ-தொய்பாவில் முழுப் பயிற்சி எடுத்தவர் சகாபுதீன் கோரி (Shahabuddin Ghauri) என்பவன் தலைமையில் உள்ள பிரிவு தென்னகத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதும்,  அதை செயல்படுத்துவதும், இந்தப் பிரிவின் தலைமையிடமாக இருந்த மாநிலம் கேரளமாகும். 
இரண்டாவது பிரிவுக்கு சாகீத்-அல்-சர்கவீ (Shadeed-al-zarqawi) என்பவனின் தலைமையில் அரசியல் தலைவர்களையும் சில முக்கியமானவர்களையும் கொல்லுவதற்கு ஏற்படுத்தப்பட்ட தற்கொலை பிரிவாகும்.  மூன்றாவது பிரிவு முகமது கஷ்னவி (Muhammad Ghaznavi) வட இந்தியாவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதும், தாக்குதல்களில் அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய இலக்காகும். நான்காவதாக பூனாவைத்  தலைமையிடமாகக் கொண்டு அனைத்து மீடியாவிற்கும் செய்திகள் அனுப்புவது.
பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடகா ஃபோரம் டிக்னிடி என்கிற இஸ்லாமிய அமைப்பும், நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்கிற கேரளத்தில் இயங்கிய முஸ்லீம் பயங்கரவாத அமைப்பும், தமிழகத்தில் இந்து விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் மனித நீதி பாசறையும்,   தென்னகப் பகுதியிலிருந்து வட பகுதியில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கம்யூனிடி சோஷியல் அண்ட் எஜூகேஷனல் சொஸைட்டியும், ஆந்திராவில் ஏற்கனவே உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரியும் ஆந்திரப் பிரதேஷ் அஸோஷியேஷன் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் என்கிற இயக்கமும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நகரிக் அதிகார் சுரக்ஷா சமிதியும், இறுதியாகக் கோவா பகுதியில் உள்ள கோவா ஸிடிஸன்ஸ் ஃபோரம் போன்ற இருபது அமைப்புகளின் கலவையும் சேர்த்து பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் புதிய பெயரில் துவக்கப்பட்டுள்ளது.  இவர்கள் பெண்களுக்காக,   குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக,  இமாம்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக,  டாக்டர்களுக்காக, பத்திரிக்கையாளார்களுக்காக என்று எல்லா பிரிவுகளிலும் உள்ள இஸ்லாமியர்களை இணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிற்கு கேரளத்தில் மட்டும் 30,000 க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  நாடு முழுவதும் 80,000க்கும்  மேற்பட்டவர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.
இவர்கள் கொடுக்கும் சந்தாகையைக் கொண்டு இயக்கத்தை வளர்ப்பதாகக் கூறினாலும், உண்மையில் இவர்களுக்கு அரபு நாடுகளிலிருந்து கோடிக் கணக்கான நிதி வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக ஹவாலா முறையிலும் கேரளத்தில் குவியும் அந்நியச் செலாவணியே இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக இந்திய உளவுத் துறை தெரிவிக்கிறது.  இதில் கேரளத்தைச் சார்ந்த 25 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். இவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ 40,000 கோடிக்கு மேல் அந்நிய செலவாணியாக அனுப்பும் தொகையில் எழுபது சதவீதம் பயங்கரவாதிகளுக்கு செல்வதாகவும் உளவுத் துறையினர் தெரிவிக்கின்றனா.
“இருபது வருடங்களில் கேரளத்தை முஸ்லீம்கள் பெரும் பான்மையினராக வாழும் மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்.  மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற பணத்தையும் ஆசையைத் தூண்டும் வேறு வழிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.   முஸ்லீம்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இஸ்லாமியர் அல்லாத பெண்களைக் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்”. 
மேற்குறிய வார்த்தைகளை வெளிப்படுத்தியவர் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவரோ அல்லது சங்க பரிவார்களைச் சார்ந்தவர்களோ கிடையாது. முழுக்க முழுக்க தொழிலாளர் வர்க்கத்திற்குப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் என்பது வியப்பிற்குறிய செய்தியாகும்.  கேரள முதல்வர் மேலும் கூறும் போது “கேரள மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைப் பற்றி கூறினேன்.  இது தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கூறிய கருத்தாகும்” என்று சொல்லி உள்ளார்.
கராச்சி புராஜெக்ட்
ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹூஜி போன்ற அமைப்புகளுக்கிடையே 2003ல் தீட்டப்பட்ட சதியின் பெயர் கராச்சி புராஜெக்ட் என்பதாகும்.  இந்த சதி திட்டத்தின் ஒரு அங்கமே புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமாகும்.  இந்தியாவில் தேடப்பட்டு பாகிஸ்தானில் தஞ்சமடைந்தோர் மூலம் இந்திய முஸ்லிம் இளைஞர்களை பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் வழியாக வரவழைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி தருகிறது.  ஆயுதப் பயிற்சி பெறுபவர்களை மூளைச் சலவை செய்வதற்கு இந்தியாவில் 1992ந் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடைபெற்ற சம்வத்தின் வீடியோக் காட்சிகளையும், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் காட்சிகளையும் காட்டி அவர்களை இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவின் இறையான்மைக்கு எதிராகவும் தயார் செய்கிறார்கள்.  இந்த பணிகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கு இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான ரியாஸ்,  இக்பால் பட் போன்றவர்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். இந்த சதி திட்டத்தின் முக்கிய நோக்கமே இந்தியாவின் ராணுவ மற்றும் பொருளாதார சாதகங்களை குலைக்கும் பாகிஸ்தானின் முக்கிய நோக்கமான காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும்.
2005ம் ஆண்டு முதல் இந்த சதி திட்டத்தின் படி 10 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இந்த தாக்குதல்களில் 500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  திசைமாறிய இந்திய இஸ்லாமிய இளைஞர்களையூம், உள்ளுரிலேயே கிடைக்கும் வெடி மருந்துகளையும் பயன்படுத்துவது இந்தியாவின் இதயப் பகுதிகளை மட்டும் குறி வைத்து தாக்குவது.  இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நிகழும் போது பாகிஸ்தான் மீது எவ்வித சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்வது இந்த சதித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
பங்களாதேஷிலுள்ள ஹூஜி பிரிவின் தலைவனான ஷாஹித் பிலாலுக்கு  இரண்டாம் கட்டத் தலைவனான அப்துல் க்வாஜா கைதான பிறகுதான் இந்திய அரசிற்கே கராச்சி சதி பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தன.  2009ம் ஆண்டு பங்களாதேஷில ரா நடத்திய ரகசிய நடவடிக்கையின் காரணமாகக் கைது செய்யப்பட்ட க்வாஜாவை இலங்கை வழியாக சென்னைக்கு கொண்டு வந்து ஹைதராபாதில் 2010ம் வருடம் ஜனவரியில் நடத்திய விசாரணையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடிய இடங்களைப் பற்றிய விவரங்களை தொரிவித்தான்.  க்வாஜாவை போல இன்னும் சிலரை கைது செய்து விசாரித்த போது இந்திய இளைஞர்களுக்குப் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மறைவான மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளிப்பதாக தெரிந்தது.   2003ல் துவக்கப்பட்ட இந்தச் சதி திட்டத்திற்கு இரண்டு வருடங்களில் 40 முதல் 50 வரை ஜிகாதிக்கள் பயிற்சி பெற்று தாக்குதல் நடத்த இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்கள்.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்
மத மாற்றத்தின் காரணமாகவே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் துளிர் விட துவங்கியது.  1982ம் ஆண்டு மார்ச்சு மாதம் கன்னியாகுமாரி  மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நடந்த பயங்கர கலவரத்திற்குப் பிறகு தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தனது பணியினை செய்ய முற்பட்டது.  1981ம் ஆண்டு கோவை ஆர்.எஸ் புரத்தில் நடந்த இந்து முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திருக்கோலிலுர் சுந்தரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். 1961ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வகுப்பு மோதல்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக 1985ல் கோகுலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 1980ம் ஆண்டின் இறுதியிலிருந்து 1990ம் ஆண்டின் துவக்கத்திற்குள் தமிழகத்தில் நடந்த வகுப்புக்  கலவரங்களின் மூலமாக இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்கள் முளைத்தன.  உள்ளுர் முஸ்லீம் வியாபாரிகளாலும், அன்னிய ஏஜென்ட்களின் வழியே கிடைத்த நிதியினாலும் இந்த இயக்கங்கள் மெல்ல மெல்ல வளர்ந்தன.  தமிழகக் காவல்துறையினர்  அறிக்கையின் படி 1983ல் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைந்தது மட்டுமில்லாமல் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளையும் சிறப்பாகச் செய்யத்  துவங்கினார்கள்.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் 13க்கு மேற்பட்ட இஸ்லாமிய பங்கரவாத இயக்கங்கள் துவங்கபட்டன.  அல்-உம்மா, Muslim Defence Force, மனித நீதிப் பாசறை, தேசிய பாதுகாப்புப் பேரவை, ட்ரூத் வாய்ஸ், அகில இந்திய ஜிகாத் கமிட்டி, Deender Anjuman, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், சுன்னத் ஜமாத் பேரவை, சுன்னத் ஜமாத் இளைஞர் பேரவை, சிமி போன்ற இயக்கங்கள் துவங்கின.  1990ம் ஆண்டின் மத்தியில் இந்துக்களை தாக்குவதற்காகவே துவக்கப்பட்ட இயக்கம் அல்-உம்மா வாகும்.  துமிழகத்தில் பல் வேறு பயங்கரவாத இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அவைகளில் அல்-உம்மா மிகவும் முக்கியமான இயக்கமாகும்.  1993ல் உருவாக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தில் முஸ்லீம் வியாபாரிகளின் நிதி உதவியுடன் தனியார் படை ஒன்றையும் அமைத்திருந்தார்கள்.  அமைப்பைத் துவக்கும் போது இஸ்லாமியர்களின் நலனை காப்பதற்காக துவக்கப்பட்டதாகக் கூறினாலும், நாளடைவில் இந்துக்களைத் தாக்குவதற்காக துவக்கப்பட்டாக மாற்றினார்கள். 
இவர்களின் திட்டத்தின் படி 1984ம் ஆண்டு கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடந்த கவவரத்தில் திரு ஜனா. கிருஷ்ணமூர்த்தி, திரு. டி.ஆர். கோபால், திரு. நாராணராவ், திரு திருகோவிலுர் சுந்தரம் ஆகியோர் மிக கொடுரமான முறையில் தாக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து 1987ல் இந்து முன்னணியின் திரு இராம. கோபாலன் அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டார். அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்த கொடுரமான செயலை செய்தவர்கள். இதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டாலும், மாநிலக் காவல் துறையினரால் நிரூபிக்க இயலாத காரணத்தில் பாட்ஷா உட்பட பலர் விடுவிக்கப்பட்டார்கள்.  1987ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பின் அல் உம்மா இயக்கத்தினர் இந்து இயக்கங்களின் தலைவர்களைத் தாக்குவதற்காகவே Islamic Youth Association எனும் புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.  இந்த அமைப்பினரின் பணியே முஸ்லீம்களை கடுமையாக யாராவது தாக்கி பேசினால் அவர்களைத் தாக்குவது.  இந்த சிந்தனையினால்தான் 30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவரையும், 5.9.1991ல் அதே கோவையில் வீர சிவா என்பவரையும் இந்த இயக்கத்தினர் கொலை செய்தார்கள்.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதிக்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களின் உணர்வுகளைத் தூண்டித் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமைப்பு அல் உம்மா மட்டுமே. 
அயோத்தியில் நடந்த சம்பவங்களைப் புகைப்படங்களாக எடுத்து அனைத்து இஸ்லாமியர்கள் மத்தியில் காண்பித்து அவர்களிடம் இஸ்லாமியர்களைக் காக்க அதிக நிதி உதவி தேவைப்படுவதாக எடுத்து கூறும் காரியத்தில் ஈடுபட்டார்கள்.  1993ம் ஆண்டு அயோத்தி சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கோவையில் பெரும் கலவரத்தை உருவாக்க அங்கே சாலை மறியல்களும் கொள்ளையடித்தலும் நடைபெற்றன.
1993ம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர்கள் மாண்டார்கள்.  இந்த நிகழ்வுக்குப் பின் தமிழகம் முழுவதும் அல் உம்மா இயக்கத்தினரின் செயல்பாடுகள் வெகுவாக நிகழ துவங்கின.
1993ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியாக அல் உம்மா வின் பாட்ஷா உட்பட 15 பேர்கள் 1980ம் ஆண்டு தேசீய பாதுகாப்பு சட்டப்படியும், 1987ல் கொண்டு வந்த தடா சட்டத்தின் படியும் கைது செய்யப்பட்டார்கள். 
1996ல் நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதின் காரணமாக 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் எவ்விதக் காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட பாட்ஷா உட்பட 15 பேர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  விடுதலைக்குப் பின் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்கள் தங்குதடையின்றி அதிக அளவில் நடைபெற்றன.  கோவை காவல் துறையினர் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது அங்கு பல வீடுகளில் கையெறி குண்டுகள், ஐல்லட்டின் குச்சிகள்,  நாட்டு வெடி குண்டுகள் அதிக அளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1995ம் ஆண்டு இஸ்லாமிக் டிப்பன்ஸ் போர்ஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் சினிமா பட இயக்குநர் திரு மணிரத்தினம் வீட்டின் மீது வெடி குண்டு வீசினார்கள்.  1996ல் சென்னையில் தொடர்ச்சியாகப் பல உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தன.  மேலப்பாளையத்தில் இந்து முன்னணியின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.  அயோத்தியில் கும்மட்டம் இடிக்கப்பட்ட தினத்தன்று 5ம் ஆண்டு நினைவாக திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திருச்சூரில் ஆலப்புலா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டு வெடித்தது.  இந்த மூன்று சம்பவங்களிலும் பலர்  கொல்லப்பட்டார்கள்.
இந்த மூன்று சம்பவங்களையும் நடத்தியவர்கள் கேரளத்தில் உள்ள ஐ.டி.எப் என்கிற பயங்கரவாத இயக்கமும், தமிழகத்தில் உள்ள அகில இந்திய ஜிகாத் கமிட்டியும் ஆகும்.
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் கோவை குண்டு வெடிப்பு நிகழ்வு ஆகும். 98ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காகக் கோவையில் பிரச்சாரம் செய்ய வருகை தந்த திரு. அத்வானி அவர்களைக்  கொல்ல நடந்த சதி திட்டம். இந்தத் திட்டத்திற்கு அல் உம்மா இயக்கத்தினர் வைத்த பெயா; ‘Operation All-hu-Akbar என்பதாகும்.  அன்றைய தினம் விமானம் கால தாமதமாக கோவை வந்ததால் அத்வானி அவர்கள் உயிர் தப்பினார். ஆனால் 18இடங்களில் நடந்த குண்டு வெடிப்பின் காரணமாக 77 பேர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள்.  இந்தத்  திட்டத்தை நிறைவேற்ற அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வெடி மருந்துகள் கொணடு வரப்பட்டன.  இந்தச் சம்பவம் கொடுத்த தெம்பின் காரணமாக தொடர்ச்சியாக மதுரையில் இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு ராஜகோபலன் விடியற்காலையில் கொல்லப்பட்டார். திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொல்லபட்டார். 2000ம் ஆண்டு ஜனவாரி 31ந் தேதி சென்னையில் இந்த இரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் 10 பேரை காவல் துறையினர் கைது செய்தார்கள். இந்தக் கைது சம்பவத்தை கண்டித்து சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் குண்டு வெடித்தது.
    
நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் இந்தப் பயங்கரவாதிகள் மீது பல வழக்குகள் இருந்தாலும் சில நேரங்களில் பாரத பிரதம மந்தியே அவர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடத்திய சம்பவங்களும் உண்டு. 
JKLFன் பொறுப்பாளார் முகமுது யாசின் மாலிக் என்பவனுடன் பாரத பிரதம மந்திரியும் தேசீயப்  பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் பல முறை ரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்கள். 
இவர்களுடன் யாசின் மாலிக் ஜனவரி மாதம் 2006ல் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன் அதாவது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந் தேதி லஷ்கர்-இ-தொய்பாவின் சகோதர அமைப்பான Jameet-ud-Dawa வின் தலைமை பொறுப்பாளார் Hatiz Mohammad Saeed  என்பவருடன் கலந்து பேசி விட்டுத்தான் பாரத பிரதம மந்திரியை சந்திக்க முன்வந்தார்.  ஏற்கனவே யாசின் மாலிக் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. 
Awantipora விமான படைத்தளத்தின் பொறுப்பாளர்கள் நான்கு பேரைக் கொன்ற வழக்கிலும் குற்றவாளியாக உள்ள யாசின் மாலிக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்தது போல் அமைந்தது.
நன்றி: தமிழ் ஹிந்து