இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் - 04


1980க்கு முன் தமிழகத்தில் பெரிய அளவில் பயங்கரவாதச் செயல்கள்  நடைபெற்றதாக எவ்விதத் தகவல்களும் கிடையாது.  ஆனால், இப்போது?இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், இஸ்லாமிய பயங்கரவாத வேலைகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.  இது எப்படி ஆரம்பித்தது ?
காஷ்மீர் மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட பல்வேறு அமைப்புகள், 1980களில் இந்தியா முழுவதும் வேறு பெயர்களில் காலப் போக்கில் ஊடுருவியதே தீவிரவாதம் இந்தியாவில் வலிமைபெற மூல காரணமாகும்.
இதன் தொடர்ச்சியாக 1980களில் தென்னக மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளுக்கும் புனிதத் தீவிரவாதம் புனிதப் பயணம் செய்தது. 1980க்குப் பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. 
தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தனித்தனியாக இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள்.  அல்-உம்மாமனித நீதிப் பாசறைதமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம்தவ்ஹித் ஜமாத் என்கிற பெயர்களில் தங்களது செயல்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
இவ்வமைப்புக்கள் உருவான பின்பு தென்னிந்தியா முழுவதும், பல தீவிரவாதத் தாக்குதல்கள் ஒருங்கிணைந்து செய்யப்பட்டு வருகின்றன. நாம் அறிந்த கோயம்புத்தூர் கலவரம் கூட திட்டமிட்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களில் ஒன்றே.
உங்கள் ஊரில் நடந்ததும் நடப்பதும்
நாடு விடுதலை பெற்ற 1947ம் ஆண்டிலிருந்தே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரியும் எல்லாக் கட்சிகளும் சிறுபான்மையினர் நலனுக்காகப் பல சலுகைகளைச் செய்து வருகின்றன. இந்தச் சலுகைகள் இஸ்லாமிய நாடுகளிலும், கிறுத்துவ நாடுகளிலும்கூட அந்த மதத்தாருக்குக் கிடையாது. ஆனால், வன்முறை விரும்பிகளால் மறைக்கப்படுகிற, மறுக்கப்படுகிற, திரிக்கப்படுகிற உண்மையாக இப்போது அது மாறிப்போய்விட்டது.
“சமூக நீதி என்பது முஸ்லீம்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் மனித நீதிப் பாசறை தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது” என அந்த அமைப்பின் பொறுப்பாளர் பத்திரிக்கைகளுக்கு இப்போது செய்தி அனுப்புகிறார். யார் இந்த மனித நீதிப் பாசறையினர்?
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான  முக்கிய இயக்கம் அல்-உம்மா எனத் தெரிந்த பின் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்டதால் தங்களது அமைப்பிற்கு மனித நீதிப் பாசறை எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள் அல்-உம்மா இயக்கத்தினர். 
தமிழகத்தில் கோவையிலும், தேனியிலும் மனித நீதிப் பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கிறது. இந்த இரு மாவட்டங்களும் கேரளத்தின் எல்லையில் இருந்த படியால் இவர்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளும் கேரளத்தில் உள்ள NDFயிடமிருந்து கிடைத்து வருகின்றன. 
islam_terroristதடை செய்யப்பட்டவுடன் பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு செயல்பாடுகளைத் தொடர்வது அனைத்துத் தீவிரவாத அமைப்புக்களுக்கும் இப்போது சாத்தியமாகிவிட்டது. 2001ல் தடை செய்யப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பின் பெயரை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.
தடை பெயருக்கு மட்டும்தான் போலும். “பெயரளவில் தடை” எனும் வழக்குச் சொல்லுக்கு வேறு உதாரணங்கள் வேண்டியதில்லை. 
 
நடந்தவை நடந்தபடி
எல்லா வழிகளிலும் தங்களது வலிமையை தொடர்ந்து காட்டி வரவேண்டும் என்பது வன்முறை மதங்களின் போதனை. சட்டங்களை மதிக்காமல் புறக்கணிப்பது, காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் கலவரம் செய்வது மிரட்டுவது போன்றவை வலிமையை மற்றவர்களுக்குக் காட்டச் செய்யப்படும் வரலாற்று அடையாளங்கள்.
தமிழ்நாட்டில், தாங்கள் பெரும்பான்மையினராக உள்ள ஊர்களைத் தங்களுக்கேயான தனிநாடாகவே இஸ்லாமிய அமைப்பினர் நடத்துகின்றனர். தங்களது வலிமையைக் காட்டப் பல கொலைகளையும், அடாவடி மிரட்டல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர்.
கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று.
1981ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காகத் திருக்கோவிலூர் சுந்தரம் தாக்கப்பட்டார். 
1984ம் ஆண்டு மே மாதம் கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் தலைவர் நாராயணராவ் உட்பட சிலர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்கள். 
இதைத் தொடர்ந்து  அல்-உம்மா இயக்கத்தின் பொறுப்பாளர் பாட்சா, திரு ராமகோபாலன் அவர்களை மதுரை ரயில் நிலையத்தில் கொலை செய்ய முயன்றான்.
தொடர்ச்சியாக மூகாம்பிகை மணி, கூடங்குளம் ஜெயராஜ் உட்படப் பலர் தொடர்ந்து இந்த இயக்கத்தினரால் தாக்கப்பட்டார்கள்.
30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவர் படு கொலை செய்யப்பட்டார். 
5.9.1991ல் அதே கோவையில் வீர சிவக்குமார் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.  
கோவையில் தொடர்ந்து நடைபெறும் கொலைகள் காரணமாக அன்றைய காவல் துறை ஆணையர்களாக இருந்த திரு ஜீ.கணேசன் என்பவரும், துணை கமிஷனராக இருந்த டி.ராதாகிருஷ்ண ராஜாவும் உடனடியாகக் கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்தார்கள். 
கொலைகளைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட ஆய்வின் போது ஒரு ராணுவம் நடத்தும் அளவில் ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் இஸ்லாமியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக கோட்டை மேடு பகுதியில், 6க்கும் அதிகமான செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, சுயமரியாதைப் பாரம்பரியத்தில் வந்த திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது. அதனால், 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவின் பொறுப்பாளரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கோவை மு. ராமநாதன் பொதுக் கூட்டம் ஒன்றில் இவ்வாறு பேசினார்:
“…திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வெற்றி செய்தி கிடைக்கும் போதே, கோட்டை மேடு பகுதியில் உள்ள செக் போஸ்ட்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்….”
இந்தப் பேச்சின் காரணமாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதே இஸ்லாமிய இளைஞர்கள் செக் போஸ்ட்களை தகர்த்தனர். தடுத்த காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். செக்போஸ்ட்டுகளைப் பாதுகாத்த காவல் துறையினரை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தல்களும் எழுந்தன.
அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளக் கோவை சிறையில் வார்டனாக இருந்த பூபாலன் என்பவர் சிறையிலேயே கொலை செய்யப்பட்டார்.
கலவரம் விதைக்கப்பட்ட கதை
CORRECTION Pakistan Militant Patronsவன்முறையே உயிர்மூச்சு எனும் போதனைகளை நம்புபவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது மட்டுமே உயிர்ப்புடன் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள். அதனாலேயே வன்முறையைத் தேடி அலைகிறார்கள். வன்முறைக்கான வாய்ப்பு இல்லாவிட்டால், வாய்ப்புக்களை உருவாக்குகிறார்கள்.
29.11.1997ந் தேதி கோவை கடைவீதியில் உள்ள காவல் நிலையம் அருகில் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சந்திரசேகரன். 
அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, ஓட்டி வந்தவர்களிடம் லைஸன்ஸ் இல்லை என்பதைக் கண்டறிந்தார். அபராதம் கட்ட மறுத்து மோசமாக நடந்து கொண்டனர் அந்த ஓட்டுனர்கள். இந்தியாவின் இறையாண்மைக்கு, சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதை அந்த இளைஞர்களின் நடவடிக்கைகள் தெரிவித்தன. ஆகவே, வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அழைத்துச் சென்று விட்டார். 
இந்தத் தகவல் தெரிந்தவுடன் அல்-உம்மாவின் மாநில செயலாளர் முகமது அன்சாரி உடனடியாகக் காவல் நிலைத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தகராறு செய்து கொண்டு இருந்தார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் இஸ்லாமியர்களாம்.
அவர் அங்கு தகராறு செய்யும் அதே நேரத்தில், காவல் நிலையத்திற்கு அருகில் போக்குவரத்தைச் சீர் படுத்திக் கொண்டிருந்த காவலர் செல்வராஜ் மீது மூன்று அல்-உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அந்தக் காவலரைப் படு கொலை செய்தார்கள்.  
விதைத்தவன் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டாமா? 1997ம் வருடம் தங்களது எதிர்ப்பைக் காட்ட  மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடி குண்டு வைத்து வெடிக்கச் செய்தார்கள். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புலா எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகளில் குண்டு வெடித்துச் சிலர் கொல்லப்பட்டார்கள். 
இதே போலவே 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அடியில் குண்டு வைக்கப்பட்டு , குண்டு வெடித்ததில் பலர் படு காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்குக் காரணம் தமிழகத்தில் உள்ள ஜிகாத் கமிட்டி என்பதும், எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தவர்கள் நேஷனல் டிபன்ஸ் போர்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடன்பிறந்தும் கொன்றனரே உடன்பிறப்புக்கள்
ஜனவரி மாதம் 31ந் தேதி அன்றே, கோவையில் உள்ள காவல் துறையின் உயர் அதிகாரிகள் முதல்வருக்கு அவசரம் அவசரமாக ஒரு தகவலைத் தெரிவித்தனர். 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கக் கூடிய சூழ் நிலை இருப்பதாக அந்தத் தகவல் தெரிவித்தது. உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவு எதிர்பார்த்தார்கள் தகவல் அனுப்பிய உயர் அதிகாரிகள். 
coimbatore_bomb_ramakrishnan_bodyஆனால், திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதால் அப்போதைய முதல்வரான கருணாநிதி அவர்கள் எவ்விதமான உத்திரவும் கொடுக்கவில்லை.
19.2.1998ந் தேதி “தி ஹிந்து” நாளிதழில் “Prior warning not taken seriously” எனத் தலைப்பிட்டு வந்த கட்டுரை இந்த உண்மை பற்றி சாட்சி கூறுகிறது.
காவல் துறையினர் எதிர்பார்த்த அந்தத் தாக்குதல் நடந்தே விட்டது.அல்-உம்மாஅகில இந்திய ஜிகாத் கமிட்டிஇஸ்லாமிக் டிஃபன்ஸ் போர்ஸ்மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டாகச் சேர்ந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய குண்டு வெடிப்புகளாகும்.
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் அத்வானியைக் கொலை செய்ய நடந்த குண்டு  வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் கூட, இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் மென்மையான போக்கையே திராவிட இயக்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர். 
அமைதியை நாடியவர் அழிக்கப்பட்டார்
2006 டிசம்பர் மாதம். தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். கோவிலுக்கு அருகில், கோவில் நிலத்தில் பள்ளிவாசல் எழுந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழும் என்று சொல்லி, அந்தப் பிரச்சினைகள் உருவாகக் கூடாது என்று பேசி வந்தார் இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியன். பள்ளிவாசல் முயற்சியைத் தடுத்ததற்காக குமார பாண்டியன் 17.12.2006ல் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார். 
குட்டி பாக்கிஸ்தான்களும், குண்டு வெடிப்புகளும்
ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பிரச்சினைக்குரிய பகுதியாகும். ஆகவே, மேலப்பாளையத்தை மையப் பகுதியாக வைத்துக் கொண்டு இவர்கள் செயல்படுகிறார்கள். பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தஞ்சம் புகும் இடமாக மேலப்பாளையம் விளங்குகிறது.
26.7.2006ல் மனித நீதிப் பாசறையில், புதிதாக அறிவகம் எனும் அமைப்பை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டன. மத மாற்றத்தின் மூலம் ஜிகாதிகளை அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய அம்சமாகக் கொண்டு  இந்தமுகாம் நடத்தப்பட்டது. 
மனித நீதிப் பாசறையில் இரண்டு முக்கிய அமைப்புகள் செயல்படுகின்றன: அறிவகம் மற்றும்தமிழ்நாடு டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட். இந்த இரண்டு அமைப்புகளைப் பற்றி துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் சஞ்சய் அரோரா தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகும்.
“மனித நீதிப் பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த இரண்டு துணை அமைப்புகளும் மனித நீதிப் பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகின்றன.” 
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
“நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்து, மதம்  மாறியவர்களைத் தேனி மாவட்டத்தில் உள்ள முத்துத்தேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்புகிறது இந்த அமைப்பு.  அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்குப் பயிற்சி எனும் பெயரில் மூளைச் சலவை செய்வது,  1992 டிசம்பர் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவங்களின் சி.டி.யை காட்டுவது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்களின் காட்சிகள் அடங்கிய சி.டியைக்  காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது போன்றவற்றை அவர்கள் செய்கிறார்கள்.
நெல்லிக்குப்பத்தில் உள்ள முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனை நடத்திய போது 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து long sickles, foreign-made daggers, along with other items - celephones, audio and video cassettes, an amplifier, a binocular, a camera, digital diaries போன்றவை கைப்பற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.
குப்பையிலும் மலரும் குண்டுமணிகள்
1997 பிப்ரவரி 10ந் தேதி சென்னைக்கு அருகில் வேப்பேரியில் ஒரு குப்பை கூடையில் 1000 டெட்டனேட்டர்கள் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு பிடித்தார்கள். 
கோவையிலிருந்து சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அப்துல்லா என்பவன் இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டான். இவன் கைது செய்யப்பட்ட இரண்டு தினங்களுக்குள், டெட்டனேட்டர்கள் கண்டு பிடிக்கப்பட்ட அதே இடத்தில், 750 எலக்டிரிக் டெட்டேனட்டர்கள், அத்துடன் வெடி குண்டுகள் தயாரிக்கத் தேவையான கெமிக்கல்களும் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டன. 
ஆகவே, தொடரும்  இம்மாதிரி சம்பவங்களின் காரணமாகத் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டிகள் திட்டமிட்டுள்ளது நன்கு தெரிந்தும் அரசு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை நிலவரம். 
பலமடையும் பயங்கரவாதமும், பலமூட்டும் விஷக்கிருமிகளும்
தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம், கட்சி துவக்கப்பட்ட காலங்களிலிருந்தே இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன்  செயல்படுகிறது. அது தவறல்ல. ஆனால், மற்ற நம்பிக்கைகளுக்கு மரியாதை தரும் இஸ்லாமியப் பெரியவர்களை ஆதரிக்க மறுத்து, அவர்களை ஒதுக்கிவிட்டு, மதவெறி பரப்பும் வன்முறை விரும்பிகளை ஆதரிப்பதுதான் தவறு.
மாற்று மதத்தினர் மீதும், தனிநபர் மீதும் இஸ்லாமியர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினால் கூட, அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கூடத் தயக்கம் காட்டும் கட்சி திமுகவேயாகும்.
1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த  குண்டு வெடிப்பில் 11 பேர்கள் கொல்லப்பட்டது அல்-உம்மா எனும் பயங்கரவாத அமைப்பின் செயலாகும். 
இதன் காரணமாகத் தமிழகக் காவல் துறையினர் பல இடங்களில் தங்களது சோதனைகளைத் துவங்கிய போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தன. 
11.3.1997ந் தேதி சென்னைக்கு அருகில் கொடுங்கையூரில் அல்-உம்மா இயக்கத்தைச் சார்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடத்திய போது, வெடி குண்டுகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஜெல்லட்டின் குச்சிகள், டெட்டேனட்டர்கள், வெடிகுண்டு தயாரிக்க உதவும் இரும்பு பைப்கள், வெடிக்கும் நேரத்தை நிர்ணையிக்கும் அலாரம் டைம்பீஸ் ஆகியவை கிடைத்தன. 
இதன் காரணமாக இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் முகமது கான் -  எஸ்.ஏ. பாட்சாவின் சகோதரர். இரண்டாமவர் சாகுல் ஹமீது. கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது முறையான வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
கொடுங்கையூர் போலவே 8.2.1997ல் தஞ்சாவூருக்கு அருகில் சாலியமங்கலத்தில் இருந்த முகமதியா ரைஸ் மில்லில் குண்டு வெடித்து இருவர் மாண்டார்கள். பலர் காயமடைந்தார்கள்.
இந்த ஆலையில் 84 ஜெலட்டின் குச்சிகள், 50 கிலோ சல்பர், 11.5 கிலோ அமோனியம் நைட்ரேட், 100 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. 
இந்த சம்பவத்தில் அரிசி ஆலை அதிபர் அப்துல் ஹமீதும் அவரது மகன் அப்துல் காதரும் படு காயமடைந்தார்கள். படு காயமடைந்த அப்துல் காதருக்குத் தமிழகத்தில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகப் பின்னாளில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அப்துல் குத்தூஸ், அப்துல் சலீம் என்ற இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தமிழகக் காவல் துறை முழுமையான  நடவடிக்கை எதுவும் எடுக்க இயலவில்லை.
இதில் அதிர்ச்சி அடையும் ஒரு விஷயமும் இருக்கிறது. திட்டமிட்டதற்கு முன்பாகவே தவறுதலாக முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி  ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யாரென்பதைக் கடைசியில் பார்ப்போம். (ஒரு க்ளூ: அவர் கோயம்புத்தூரில் பேச வந்த அத்வானி அல்ல. இந்தச் சம்பவம் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பே நடந்தது.)
islamic-fundamentalism031இதில் நாம் நினைவில் உறுதியாக பதிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இதுவரை நாம் பார்த்த அத்தனைத் தீவிரவாதச் செயல்களும், குண்டு வெடிப்புகளும், கொலைகளும் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துவருகின்றன. அந்த முடிவற்ற தொடர்கதையின் ஒரு அத்தியாயம்தான் கோவை குண்டு வெடிப்புகள்.
1998ல் நடைபெற்ற கோவை குண்டு வெடிப்புக்குப் பின்பு, அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் போல் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பை 22.7.2006ந் தேதி நடத்தப் போட்டிருந்த திட்டம் காவல்துறைக்குத் தெரிய வந்தது. தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக மனித நீதிப் பாசறையைச் சார்ந்த ஐந்து பேர்களைக் கோவை காவல் துணை கண்காணிப்பாளர் திரு ரத்தினசபாபதி கைது செய்தார்.
கைது செய்து சில தினங்களில் மனித நீதிப் பாசறை தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியது. கைது செய்த துணை ஆணையர் உடனடியாகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். 
குற்றம் நீருபிக்கப்பட்ட, ஆயுள் தண்டனை கைதியாகக் கோவை சிறையில் இருந்த பக்ரூதின் அலி அகமது உட்பட எட்டு குற்றவாளிகளை விடுவித்தது திமுக அரசு.  
 
கோவையில் பயங்கரவாதச் சம்பவங்கள் நடப்பதற்குரிய அறிகுறி எதுவும் கிடையாது எனக் கூறி ஐந்து பேர்களையும் 9.2.2008ல் திமுக அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், மத்திய உளவுத்  துறை செய்திப்படி  முஸ்லிம் அமைப்பான மனித நீதிப் பாசறை  ரத்ததானம் செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சிலேட்டு புத்தகம் வழங்குவது போன்றவை ஒருபுறம் வழங்கிக் கொண்டு, மறுபுறம் தீவிரவாதப் பயிற்சிகளை அளிப்பதும், குண்டு தயாரிப்பதும், மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகக் கொண்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
2006ம் ஆண்டு மே மாதம் இறுதியில் 20க்கு மேற்பட்ட அல்-உம்மா அமைப்பைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தனர். அவர்களைத் திமுக அரசு எவ்வித காரணமும் இல்லாமல் விடுவித்தது. 
இது போல்,  தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகளை இந்த அரசு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விடுவித்தது.
karunanidhi-with-kulla-iftarதிமுகவின் ஸ்தாபகர் சி.என். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவின் போது 2011 வரை சிறையில் இருக்க வேண்டிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை 2008 செப்டம்பர் மாதமே  விடுதலை செய்த அரசு, திராவிட பாரம்பரியத்தில் வந்த திமுக அரசேயாகும்.
வளர்த்த கடா ?
அரிசி ஆலையில் குண்டு தவறுதலாக வெடித்தபோது அதற்கு அருகாமையில் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி பேசிக்கொண்டிருந்தார் என்று பார்த்தோம் அல்லவா? சம்பவ இடத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் பேசிக் கொண்டிருந்தவர் திமுகவின் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள்தான்.
அரபியப் பெருங்கடலின் அழிவு அலைகள் ஓயவில்லை.
நன்றி:தமிழ் ஹிந்து