முந்தைய பகுதிகள்:
காஷ்மீர் மாநிலத்தை மீட்க வேண்டி காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே துவக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்பாடுகள், பாரத தேசத்தில் அனைத்து மாநிலங்களிலும் எவ்வாறு பரவியது என்று கடந்த சில கட்டுரைகளில் கண்டோம். 4ம் பகுதியில்
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் எவ்வாறு தலையெடுத்தது என்பதைப் பார்தோம். அதன் தொடர்ச்சியாக வரும் தொடர் கட்டுரைகளில் தென்னகப் பகுதிகளான ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், கேரள மாநிலம் போன்ற இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்பாடுகள் எவ்வாறு தொடங்கி, எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காணலாம்.

கேரளம் கேவலமான கதை
பாரத நாட்டை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கும் போது 1956ல் கேரளா என்கிற மாநிலம் உருவாகியது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். அது மட்டுமல்ல, 1960ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிடத் தேர்ந்தெடுத்த பகுதியும் கேரளாவேயாகும்.
1960ல் இருந்து, முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் பிரம்மாண்டமாகப் பரவி விட்டது.
உதாரணமாக, 1997 டிசம்பர் மாதம் 6ந் தேதி திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம். (1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் அத்வானியைக் கொல்ல நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே நடந்த சம்பவம் இது.)
இந்தக் குண்டு வெடிப்பிற்குப் பொறுப்பேற்கும் ஒரு இ-மெயில் 14.8.2009ந் தேதி கண்ணணுர் காவல் நிலையத்திற்கு வந்தது. பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐ உதவியுடன் அரபு எமிரேட்டில் உள்ள எடிசாலடிலிருந்து இந்த இ-மெயில் அனுப்பப்பட்டது.
கேரளத்தின் வடக்கு பகுதியை இணைத்து முஸ்லீம் மாநிலம் அமைக்கப்படாவிட்டால் கேரளத்தில் தொடர் வெடி குண்டு வெடிக்கும் என எச்சரித்தது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில் காரச்சியை தலைமையிடமாகக் கொண்டு மலபார் முஸாஹூத் எனும் அமைப்பு செயல்படுவதாகவும் அதன் பொறுப்பாளர் கேரளாவில் உள்ள ஜாகீர் ஹூசைன் என்பதும் தெரிய வந்தது.
கேரளத்தில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இந்தியன் முஸ்லீம் லிக்கும் நெருங்கிய தொடார்பு உண்டு என்பது வெட்ட வெளிச்சமாகும். 26.2.2011ந் தேதி வடக்கு கேரளத்தில் உள்ள நந்தபுரத்தில் ரகசியமாக வெடி குண்டு தயாரிக்கும் பணியில் இருந்த போது தவறுதலாக குண்டு வெடித்ததில், ஐந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தொண்டர்கள் இறந்தார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள Hizb-ul-Mujahideen எனும் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த அல்டாப் அகமது 6.1.2008ந் தேதி இடக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் கைது செய்யப்பட்டான். இவன் பல்வேறு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டவன். இடக்கி மாவட்டத்திலிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்த போது இவன் வசமாக மாட்டிக்கொண்டான்.
தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சார்ந்த இருவர் 6.10.2008ந் தேதி கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒருவன் குருவாயூர் பகுதியைச் சார்ந்த அப்துல் ஹக்கீம், மற்றெருவன் கருகப்பட்டு பகுதியைச் சார்ந்த சமீர் என்பவன். 15.8.2006ல் பனயங்குளம் எனும் பகுதியில் நடந்த சிமி இயக்கத்தின் ரகசிய கூட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டவர்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நஸிர் மற்றும் அஸ்கர் என்பவர்கள் 21.10.2008ந் தேதி திருச்சூரில் கைது செய்யப்பட்டார்கள். இவர்களைப் போலவே காஷ்மீரில் நடந்த பயங்கரவாத பயிற்சி முகாமிற்கு ஆட்களை அனுப்பிய செயலுக்காக 9.11.2008ந் தேதி கண்ணணுரில் முகமது நைனார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் அதிக அளவில் சுதந்திரமாக இருக்கும் மாநிலம் கேரளாவாகும்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India)

அந்த வருத்தத்தைப் போக்க, 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 மற்றும் 26ந் தேதிகளில் பெங்களுரில் நடந்த தென்னக மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய அறிவுஜீவிகளின் மாநாடு நடந்தது. இந்த கருத்தரங்கில் இஸ்லாமியர்களுக்காக இட ஒதுக்கீடு பெறுவது, சமுதாய மாற்றங்கள் கொண்டு வருவது போன்ற விஷயங்கள் பேசப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 மற்றும் 27ந் தேதியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பாராளுமன்ற மேல் அவைத் தலைவரான கே.ரஹமான் கான் ஒரு கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். இந்தக் கருத்தரங்கில் இஸ்லாமியர்களுக்கு அனைத்து இடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இறுதி முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக நேரடியாக களத்தில் இறங்குவதாக அறிவித்தார்கள். இந்த எச்சரிக்கையைக் கண்டு பயந்து போன மத்திய அரசு அடி பணிந்தது. இதுவே கேரளத்தில் உடனடியாக புதிய அமைப்பு உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் உருவாகிய அமைப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
அதன்படி 22.6.2006ந் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் இந்த இயக்கம் துவக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் கேரளத்தில் அதிக அளவில் பயங்கரவாதப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்ற இயக்கம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவாகும். துவக்கிய மாநிலம் கேரளாவாக இருந்தாலும் இன்று தென் மாநிலங்களில் இந்த இயக்கம் அதிக அளவில் பரவியுள்ளது.
கேரளத்தில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவல்ப்மென்ட் ப்ரண்ட், தமிழகத்தில் இயங்கி வந்த மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் மறைமுகமாகச் செயல்பட்டு வந்த கர்நாடக ஃபோரம் ஆப் டிக்னிட்டி என்கின்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து இணைந்து ஒரு தளமாக இது செயல்படுகிறது.
இந்த இயக்கம் பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடனும், ஐ.எஸ்.ஐயால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் இந்த இயக்கதினர் ஈடுபட்டதாகக் காவல் துறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள்.

இவர்களின் முக்கியமான தலைமையிடமாக இருப்பது கண்ணணூர். 11.7.2010ந் தேதி இவர்களது அலுவலகத்தை சோதனையிடும் போது வெடி குண்டுகள், பயங்கரவாத தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பிடிக்காத கேள்வி கேட்ட பேராசிரியரின் கையை வெட்டுவதற்காக வெடி குண்டு தயாரித்தார்கள் என 4.7.2010ந் தேதி இருவரைக் கைது செய்தார்கள். இது சம்பந்தமாக விசாரணை நடத்தும் காவல் துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் இந்த அமைப்பின் மூலம் அனுப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வைத் தடை செய்யக் கோரி இந்திய உளவு துறையான ஐ.பி. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

2006ல் Thejas எனும் பத்திரிக்கையில் காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை வீரர்கள் என சித்தரித்துக் கட்டுரைகள் வெளியாகின. இநத பத்திரிக்கை பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா வின் அதிகார பூர்வ பத்திரிக்கையாகும்.
கேரளத்தில் உருவாகிய பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக Lillong Social Forum என்கிற மணிப்பூர் அமைப்பும், ஆந்திராவில் உள்ள Andhra Pradesh Association for social Justice என்கிற அமைப்பும், ராஜஸ்தானில் செயல்பட்டுவரும் Community Social and Educational Scoiety என்கிற அமைப்பும், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் இயக்கமான Nagarik Adhikar Suraksha Samithi என்கிற அமைப்பும், கோவில் உள்ள Goa Citizens Forum என்கிற அமைப்பும் அந்த அந்த மாநிலங்களில் பயங்கரவாத செயல்பாட்டிற்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன.
நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (National Development Front)
1993ல் சிமி இயக்கத்தை துவக்கியவர்களில் ஒருவரான பி. கோயா என்பவரால் இந்த அமைப்பும் துவக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் சமூகப் பொருளாதார நிலைகளை உயர்த்தப் பாடுபடும் என ஆரம்பிக்கும்போது அறிவித்தனர். ஆனால், பாக்கிஸ்தான் ஐ. எஸ்.ஐ.யின் ஆலோசனையின்படி தங்களது நடவடிக்கைகள் அனைத்தும் தேச நலனுக்கு விரோதமாக நடத்தினார்கள்.
1992ல் நாடு முழுவதும் முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட வெறுப்பு உணர்வு இவர்களின் வளர்ச்சிக்கு உதவியது. 1997ல் கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசீய மனித உரிமை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக Confederation of Human Rights Organisation எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது.
23.3.2007ந் தேதி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியில் NDFஐச் சேர்ந்த இரண்டு முக்கிய மூத்த தலைவர்களைக் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய கோரி கோட்டக்கல் காவல் நிலையம் சூறையாடப்பட்டது.
1992க்கு முன் பல்வேறு அமைப்புகளில் இருந்த இஸ்லாமியர்கள் தங்களை நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என கூறிக் கொண்டது கிடையாது. ஆனால், 1992க்குப் பின் பல்வேறு அமைப்புகளில் குறிப்பாக இஸ்லாமிய அமைப்பில் இருந்தவர்கள் தங்களை NDF எனக் கூறிக் கொள்ளத் தயக்கம் காட்டியது கிடையாது.
29.4.2009ந் தேதி பாக்கிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் முகமது தாகா முகமது என்பவர் தலைச்சேரிக்கு வருகை தந்தார். சுற்றுலா பயணிகள் விசாவில் வந்தவர் தலைச்சேரியில் மட்டுமே தங்கினார். இவர் தங்கிய விடுதியில் கேரளத்தில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பல மணி நேரங்கள் சந்தித்து பேசினார்கள்.
இந்தச் சந்திப்பில் NDFஐச் சார்ந்த முக்கிய மூத்த பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் மர்மம் என்ன என்பதை மாநில அரசு விசாரிக்கவில்லை என்பது கொடுமையான செய்தியாகும்.
மத மாற்றமா? கூலிப்படைக்கு ஆளெடுப்பா?
1921ல் நடந்த மாப்ளா கவரத்திலிருந்து கேரளத்தை தாலிபான் மாநிலம்போல் மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நாடு விடுதலை பெற்ற போது 61.5 சதவீதமாக கேரளாவில் இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு மத மாற்றம் முக்கியமான காரணமாகும்.
15.11.2004ந் தேதி குஜராத் முதல்வரைக் கொல்ல நடந்த சதியின் காரணமாக கைது செய்யப்பட்ட ஜாவேத் (Javed) கேரளத்தைச் சார்ந்த மதம் மாறிய இந்து. நாயர் வகுப்பைச் சார்ந்த பிரனேஷ் என்பவன் மதம் மாறி லஷ்கர்-இ-தொய்பாவில் பயிற்சி பெற்றவன்.
மதவெறிக்கு மாற்றப்பட்ட மலப்புரம்
1969ம் ஆண்டு ஜூன் மாதம் 16ந் தேதி, முகமதியர்களைத் தாஜா செய்ய இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் ஆண்ட இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விரும்பினார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்து மலப்புரம் எனும் மாவட்டத்தை உருவாக்கினார்கள். விளைவு?
இந்தியாவிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் பலர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டம் இந்தியாவின் குட்டி பாக்கிஸ்தான் என்றே அழைக்கப்படுகிறது.
கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, கோட்டயம், கண்ணணுர், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்களில் அதிக எண்ணிக்கையில் அரபு நாடுகளில் பணிபுரிகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இஸ்லாமியர்களை இணைக்கும் மாவட்டமாக மலப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது.
திட்டமிட்ட ரீதியில் இந்துக்களின் எண்ணிக்கையை பல்வேறு நிலைகளில் குறைக்கின்ற திட்டமும் இவர்களிடம் உள்ளது. 1980 வாக்கில் மலப்புரம் மாவட்டத்தில் பல சினிமா அரங்குகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இஸ்லாத்திற்கு விரோதமான நடவடிக்கை என பகிரங்கமாக அறிவித்துவிட்ட பின்னரே இவை தீயிடப்பட்டன. இது சம்பந்தமாக காவல் துறை எவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2005ம் வருடம் மலப்புரத்தில் நடந்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தியாகியாக சிறப்பிக்கப்பட்டவன் ”வரியம் குண்ணத்து குஞ்சஹமத் ஹாஜி” (Wariamkunnahtu Kunjahammed Haji). இவன் செய்த தியாகம் என்ன?
1921ல் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்களை கொன்றதுதான் இவன் செய்த தியாகம்.
அரசாங்க ஆதரவில் அடுத்த மதங்களை அழிப்பது எப்படி?
தேச விரோத இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இடதுசாரி அரசு எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் செல்வார்கள். அதற்காக மெக்கத்து வசனங்களின்படி இந்துக்களுக்கு இல்லாத சலுகைகளை எல்லாம் அரசே செய்து தரும். மெதீனத்து வசனங்களின்படி தீவிரவாதச் செயல்களுக்கும் அரசே துணைபோகும்.
உதாரணமாக, ஆளும் இடதுசாரி அரசு கேரளத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் ஏற்படுத்த மலபுரம் மாவட்டத்தில் 24 ஏக்கர் நிலத்தை முதலில் அளித்துள்ளது. இப்போது நடைபெறும் தேர்தலுக்குப் பின் இந்தப் பல்கலை கழகத்திற்கு சுமார் 1000 ஏக்கர் நிலம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். இந்த அளவு சலுகைகள் ஏதேனும் ஒரு இந்து அமைப்புக்குக் கேரளாவில் கிடைக்குமா? கேரளா மட்டுமல்ல இந்தியாவில்கூட இனி கிடைக்காது.
வடக்கு கேரளத்தில் 12க்கும் அதிகமான குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால், அரசானது குண்டு வெடிப்பு சம்பவங்களை வெளிச்சத்திற்கு வராமல் பார்த்துக் கொண்டது.
அரபியக் கடலோரத்தை அரிக்கும் அரபிய மத வெறி
இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குக் கேரள மாநிலம் ஒரு சொர்க்க பூமியாகும். எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத 850 கி.மீ. தூரம் கொண்ட கேரள கடற்கரை பயங்கரவாதிகளுக்குச் சொர்க்கமாகும்.

இதற்காக ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில் 22.3.1997 முதல் 16.5.1999 வரை கோழிக்கோடு சிட்டி போலீஸ் கமிஷனராக இருந்த திருமதி. நீரா ரவாட் என்பவர் சாட்சி அளித்தார். இவரது சாட்சியத்தில் நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட்க்கு ஐஎஸ்ஐ யுடன் தொடர்பும், ஈரானிலிருந்து நிதியும் வருவதாகத் தெரிவித்தார். இந்த வாக்கு மூலத்திற்கு பின்தான் நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் பயங்கரவாத இயக்கம் என்பது பலருக்கும் தெரியவந்தது.
மராட் கலவரத்தின் விசாரணை கமிஷன் முன் எர்ணாகுளம் காவல்துறை துணை ஆணையர் திரு. ஏ.வி.ஜார்ஜ், சட்ட விரோதமாக ஆயுதங்கள் கொள்முதல் செய்ய நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் க்கு அந்நிய நாடுகளிலிருந்து, குறிப்பாக அரபு நாடுகளிலிருந்து, கோடிக் கணக்கான பணம் வந்துள்ளது என்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். பல ஆண்டுகாலமாக NDFஐச் சார்ந்தவர்கள் பயிற்சிக்காக பாக்கிஸ்தான் சென்று வருகின்ற தகவல்களும் தொடர்ச்சியாக கிடைக்கின்றன என்பதாகவும் தெரிவித்தார்.
முராட் கலவரத்தின் பின்னர் பொண்ணானி (Ponnaini) முதல் பைப்பூர் (Beypore) வரையிலான 65 கி.மீ தூர கேரளக் கடற்கரையில் இஸ்லாமியர்களைத் தவிர வேறு ஒருவரும் மீன் பிடிக்க இயலாத நிலை நிலவுகிறது. கேரளத்தின் மூலம் தென் பாரத நாட்டை தாலிபானிஸமாக்கும் திட்டத்திற்கு ஆளும் இடதுசாரிகளும், ஆளப்போகும் காங்கிரஸ் கட்சியும் துணை போகின்றன என்பது கொடுமையிலும் கொடுமையாகும்.
கேரளத்தில் நேஷனல் டெவலப்மெண்ட் ப்ரண்ட், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, மக்கள் ஜனநாயகக் கட்சி, மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் பல்வேறு பெயர்களில் பயங்கரவாத செயல்களுக்குத் துணை போகின்றன. இம் மாதிரியான இயக்கங்களுக்கு கேரளத்தை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதால் பயங்கரவாத இயக்கங்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எல்லாவிதமான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். இந்த ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான சிமி மற்றும் சில இயக்கங்கள் மீது 2001ல் தடைவிதிக்கப்பட்டது. நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான தடா மற்றும் பொடாவில் கைது செய்யப்பட்டனர். ஆனால், கேரளத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சார்ந்த ஒருவர் கூட தடா மற்றும் பொடாவில் கைது செய்யப்படவில்லை !!
லவ் ஜிகாத்

இஸ்லாமிய இளைஞர்கள் மூலமாகக் கல்லூரிகளில் படிக்கின்ற இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களை மயக்கி, அவர்களை மதம் மாற்றி ஜிகாதிகளாக மாற்றுவதற்கு பெயர்தான் லவ் ஜிகாதாகும். 2006லிருந்து ஆரம்பித்த இந்த ஜிகாத்தின்படி, கேரளத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் கல்லூரிக்குச் செல்லும் அழகான பெண்களைக் காதலித்துப் பின் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து மத மாற்றம் செய்வார்கள்.
2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. அதாவது இஸ்லாமிய இளைஞர்கள் இரண்டு பேர் MBA படிக்கும் இரண்டு மாணவிகளை மயக்கி மத மாற்றம் செய்து விட்டார்கள் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்தத் தகவல்களினை ஆராய்ந்தபோது, லவ் ஜிகாத்திற்கு எனத் தனி அமைப்பு ஒன்றை பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவில் துவக்கி உள்ளது தெரிய வந்தது. அதற்குப் பெயர் காம்பஸ் ஃப்ராண்ட் என்பதாகும். இவ்வாறு மத மாற்றம் செய்வதற்காகவே தனியாக ஒரு நிதியும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலமாக மாணவர்களுக்குத் தேவையான “அனைத்து” வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த நிதி அரபு நாடுகளிலிருந்து ஹவாலா மூலம் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது.
கேரளத்தில் உள்ள Kerala Catholic Bishops Council அரசுக்குக் கொடுத்த மனுவில் சுமார் 4500 பெண்களைக் காணவில்லை என்றும், இவர்கள் கட்டாய மத மாற்றம் செய்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்கள். இதே கருத்தை வலியுறுத்தி ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன அமைப்பும் இவ்வாறு ஒரு மனுவை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தச் செய்தியை உறுதி படுத்தும் விதமாக Kerala Crime Record Bureauவும் Kochi National University of Advanced Studiesவும் இணைந்து நடத்திய ஆய்வில் 2007ம் ஆண்டு 2167 பெண்களும், 2008ல் 2530 பெண்களும் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்கள்.
2006ல் மதமாற்றம் சம்பந்தமான வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 2876. அதில் 705 வழக்குகள் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த லவ் ஜிகாத் சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்தக் கூட ஆளும் இடதுசாரி கட்சிகள் தயாராக இல்லை. எனவே லவ் ஜிகாத் எனும் இந்தப் பயங்கரவாதச் செயல்பாடு இந்த அமைப்பின் மூலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சரியான முறையில், நல்ல நோக்கத்தில், காதலுக்காக மட்டும் நடக்கும் கலப்புத் திருமணங்கள் நன்மையை ஏற்படுத்த வழிகோலும். இரு வேறுபட்ட மதங்களும், சாதியினரும், கலாச்சாரத்தினரும் ஒன்று சேர்ந்து மற்றவர் கலாச்சாரத்தை மதிக்கும் பண்பும் ஏற்படும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவார்கள். ஆனால், இங்கு நடப்பது காதலினால் எழும் கலப்புத் திருமணம் இல்லை. அன்னிய மதத்தின் ஆக்கிரமிப்பிற்குப் பலியாகும் அப்பாவிப் பெண்கள் மட்டுமே. ஆம், லவ் ஜிகாத்தில் ஆண்களுக்கோ, மதம் மாற விரும்பாதப் பெண்களுக்கோ வாழ வழியில்லை.

“God’s own country”யாக இருந்த கேரளம் இப்போது காதல் சமாதிகளின் மாநிலமாகிவிட்டது.
நன்றி: தமிழ் ஹிந்து