கேள்வி : தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சி, அரசின் சாதனை இவற்றால் மக்களின் வாழ்க்கை முன்னேறியுள்ளதாக, தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்து வருவதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பொன். ராதாகிருஷ்ணன் : மக்களுக்குத் தேவையான நீராதார வசதி, கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறான முறையில் இலவச டி.வி., கேஸ் அடுப்புக்குப் பயன்படுத்தி உள்ளனர். முதல்வர் போலித்தனமான பொருளாதாரச் சித்தாந்தத்தை முன்வைக்கிறார். மக்கள் இவர்களிடம் டி.வி. வேண்டும் என்று கேட்டார்களா? தமிழகத்தில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. அரசு, மக்களைக் குடிகாரர்களாக, கொலைகாரர்களாக மாற்றியுள்ளது. பயங்கரவாதிகள், தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது.
அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. படுகொலை, முத்துப்பேட்டையில் மத மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் பா.ஜ.க. நிர்வாகி மீது நடந்த தாக்குதல் – ஆகிய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. பொதுவாக சட்டம் – ஒழுங்கு நிலை திருப்தி அளிப்பதாக இல்லை.
நன்றி : துக்ளக் 11_02_2010