மதமாற்றம் மூலம் கேரளாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி-அச்சுதானந்தன்

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2010


இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு முஸ்லிம் அமைப்பினர், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களை தங்கள் பக்கம் கவர பணத்தை வாரி இறைத்து, கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திசை திருப்பவும் முயல்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை.
20 ஆண்டுக்குள் கேரளாவில் முஸ்லிம்களை பெரும்பாமையாக்கி, கேரளத்தை முஸ்லிம் நாடாக்க சதிகள் நடக்கிறது.
இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாம். அவர்கள் ஆகஸ்டு 15ந் தேதி நடத்த இருந்த மாநாட்டுக்கு தடை விதித்து இருக்கிறோம். இது போன்ற ஆபத்தான இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும்.



தற்போது இந்த இயக்கம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை எதுவும் முஸ்லிம் சமூதாயத்தை பாதிக்காத வகையில் இருக்கும் என்றார்.



மாநில காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் தான் இந்தப் புதிய இயக்கமாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.