கேரளாவில் ஒரு கிறிஸ்துவ பேராசிரியரது கையை வெட்டியதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள அரசு பொங்கி எழுந்து பலரை கைது செய்து, FI என்ற இஸ்லாமிய தீவிரவாத கட்சியை தடை செய்ய வேண்டும் என்பது போல பேசுகிறது. முதல்வர் அச்சுதானந்தன் கேரளாவை இஸ்லாமிய நாடாக ஆக்க பிஎஃப் ஐ திட்டமிட்டு மதமாற்றம் செய்கிறது என்று பேசி காங்கிரஸின் கடும் எதிர்ப்பையும், முஸ்லீம் தீவிரவாத கட்சிகளின் கடுங்கோபத்தையும் எதிர்கொண்டுள்ளார்.
இதில் வினோதம் என்னவென்றால், கிறிஸ்துவ பேராசிரியரின் கையை வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளவர் முன்னரே ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரது கையை வெட்டி பிறகு கொலை செய்திருக்கிறார். அதற்காக சும்மா கைது செய்து பிறகு விட்டுவிட்டது இதே கம்யூனிஸ்டு அரசு. ஆனால் இப்போது வெட்டப்பட்டிருப்பது இன்னொரு சிறுபான்மையினரது கை. அதெப்படி சும்மா இருக்கமுடியும்? ஏற்கெனவே, முவட்டுப்புழாவில் கிறிஸ்துவர்களை முஸ்லீம்கள் கடைகளில் எதுவும் வாங்கக்கூடாது என்று சர்ச் ஆணையிட்டிருக்கிறதாக தெரிகிறது.
பிரச்னை முற்றுவதற்கு முன்னால், அரசு உடனே இறங்கி ஆட்களை கைது செய்து சர்ச்சை குளிர வைக்க வேண்டிய நிலை. ஆனால் இந்துத்வ தொண்டர்களுக்கு ஆதரவாக பலமான அமைப்பு இல்லை என்பதால், சும்மா வேடிக்கை காட்டுகிறார்கள் போலிருக்கிறது. ஆனால் பெரிய பிரச்னை என்னவென்றால், ஒரு சிறுபான்மை கிறிஸ்துவரது கை வெட்டப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கமான மனித உரிமை காவலர்களான வி ஆர் கிருஷ்ணய்யர், சிவிக் சந்திரன், அ மார்க்ஸ் போன்றோர் குரலை காணவில்லை. அல்லது நான் தான் படிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்