ஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக் காட்டிலும் முன்தோன்றியது
உங்களைச் சுற்றி எல்லா திசைகளையும், உற்று நோக்கிப் பாருங்கள். இவ்வாறு நோக்குங்கால், காற்றோடு காற்றாக மறைந்து போகாமல், தண்ணீரில் அமிழ்ந்து போகாமல், அல்லது மண்ணோடு மண்ணாகாது இந்நாள்வரை உறுதியுடன் வாழும், வேத வழி நன்நெறி கலாச்சாரம் போன்று, வேறொரு கலாச்சாரம் ஏதாகிலும் உலகில் தென்படுகிறதா? ஹிந்து கலாச்சாரமோ, குறைந்து, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக (இன்னமும் அதிகமாகச் சொல்ல வேண்டும்), ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அதே வீரியம் இன்றும் குன்றாது, வெற்றிகரமாக செழித்தோங்கி, இதற்கிணையில்லை என கூறுமளவிற்கு, இயங்கும் ஆற்றலுக்குரியதாகவும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே வழி வழியாக மரபு கொண்டு, தழைத்தோங்கி, அந்நாட்களில் செயலாற்றிய அதே திறனுடன், இந்நாட்களிலும் கொள்கையளவில் இல்லாது தற்காலத்திற்கு ஒப்ப மெய்யாக செயலிலும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சமயம் வேறொன்றுண்டா? மற்ற பழைய கலாச்சாரங்களான, எகிப்திய, இன்கா, மயன்***, அஸ்டெக், (Egyptian, the Inca, Maya, Aztec) ஆகிய இவையெல்லாமே, 5000 ஆண்டுகள் புராதனமானது தான், ஆனால் இதில் ஒன்றுகூட இன்று வரை நிரந்தமாக இல்லையே. இவைகள் எல்லாம் மறைந்து, அந்நாளிலிருந்து இன்றுவரை எஞ்சியுள்ள, அக்கால மனிதர்களால் உண்டாக்கப்பெற்ற சில கட்டங்கள், வடிவங்கள் என நமக்கு அக்கால கலாச்சாரம் எப்படி உண்மையில் செழித்தோங்கி இருக்கவேண்டுமென தெரிந்து கொள்ளும் நம் ஆவலை மட்டுமே தூண்டிவிட்டு, ஆனால், நம்மிடம் மௌன மொழியில்தான் பேசுகின்றன. அவ்வளவுதான். இவைகளைப்பற்றி நிரந்தரமான. உண்மையென தகவல் இதுதான் என நிரூபித்து நமக்கு உறுதியளிக்கவில்லையே! இக்கலாச்சாரங்கள் இருந்தன என நம் கண்ணெதிரே தெரிந்தாலும், அவைகளைப் பின்பற்றுவோர் எப்படி வாழ்ந்தனர், இன்று அக்கலாச்சாரங்களை அனுசரிப்பவர்கள் எங்கேயாவது இருக்கின்றனரா? இருந்தால், எங்குள்ளனர்? என்றோ, அல்லது அவர்களது சமயப் பெயர்கள் தான் என்ன? அவர்கள் சமய சித்தாந்தங்கள் தான் என்ன, என சொல் வழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ விவரமாக, முடிவாக, நாம் காண முடியலில்லையே! இவைகளைப்பற்றி எல்லா முடிவுகளும் கற்பனையில், அல்லது ஆராய்ச்சியால், தர்க்க ரீதியில் ஊகித்து சொல்லப் படுபவைகளாகவே இன்று நமக்குக் கிடைகின்றன. இவைகள் எல்லாமே காலத்தின் கோலத்தால் நமக்கு விவரமாகக் கிடைக்க நாம் கொடுத்துவைக்க வில்லை.