ஹிந்துத்வம் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரானதா ?

ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் ,ஹிந்துத்வம் என்பது ஹிந்துத்தன்மை , இந்த தேசத்தின் தன்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள் .


மற்றொன்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், பாரத நாட்டுக்கு வெளியே இருந்து வந்தது இஸ்லாமும் , கிறிஸ்தவமும் என்பது உண்மை . ஆனால் இங்கு வாழும் முஸ்லீம்களும் , கிறிஸ்தவர்களும் வெளியே இருந்து வந்தவர்கள் அல்ல என்பதும் உண்மை .

அவர்கள் நம்மவர்கள் ; அவர்களது முன்னோர்களும் நம் முன்னோர்களும் ஒன்று . அவர்களது பாரம்பரியமும் நம் பாரம்பரியமும் ஒன்று .அவர்களது உடலில் ஓடும் ரத்தமும் நம் ரத்தமும் ஒன்று . அவர்களது பண்பாடும் நம் பண்பாடும் ஒன்று . நம் தேசியமும் அவர்களது தேசியமும் ஒன்று . சுருக்கமாகச் சொன்னால் இனத்தால் அவர்களும் நாமும் ஒன்று .

மதத்தால் ?

அவர்களது மதம் நாட்டில் தோன்றிய மதம் இல்லை என்பதால் ஹிந்து மதம் என்கின்ற குடைக்குள் அவர்கள் வர மாட்டார்கள் . ஆனால் ஹிந்து இனம் என்கின்ற குடையின் கீழ் வருவார்கள் .

அதாவது நம் நாட்டில் உள்ள மக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்

ஒன்று ) மதத்தாலும் இனத்தாலும் ஹிந்துக்கள் .

இரண்டு ) இனத்தால் ஹிந்து , மதத்தால் இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவர் .

இந்த இரு பிரியுகள் தான் தற்போது உள்ளவர்கள் .

கேரிஷ்தவர்களும் முஸ்லீம்களும் வழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டிருக்கலாம் தவறில்லை .ஆனால் அதன் காரணமாக பெயர் மாற்றம் , உடை மாற்றம் , பண்பாடு மாற்றம் ஆகியவை அறியாமையின் காரணமாக ஏற்படும் விளைவு . அது கடைசியில் தேசியத்தில் மாறிவிட்டதாக அறிவித்து பிரிவினைக்கு வித்திட்டு விடும் .

மதம் மாறியவர்கள் தங்களது அறியாமையின் காரணமாக இந்த மண்ணின் பழக்க வழக்கங்களை , மதத்தின் பழக்க வழக்கங்களாக நினைத்து விட்டு விடுகிறார்கள் .

மாறாக இந்த மண்ணுக்கு புறம்பான பழக்க வழக்கங்களை தங்களது மதத்தின் பழக்க வழக்கமென கருத்து ஏற்று விடுகிறார்கள். இதனால் வெறும் பழக்கம் மட்டுமல்ல பண்பாட்டு அடையாளமும் மாறிவிடுகிறது .

உதாரணமாக வாசலிலே கூலமிடுவது, சுப நிகழ்ச்சிக்கு வாயிலிலே வாழை மரம் கட்டுவது , ஒரு நிகழ்ச்சியின் துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றுவது போன்றவைஎந்த மதத்துக்கும் சொந்தமல்ல , இந்த மண்ணுக்கு சொந்தம் . இதை அவர்களுக்கு உணர்த்த அந்த பிரிவிலேயே ஒரு இயக்கம் உருவாக வேண்டும் .