ஓவியங்களை திருடியதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீது குற்றசாட்டு

ஆகஸ்ட் 6, 2010
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உலகப் புகழ் பெற்ற பாகிஸ்தான் ஓவியரின் ஓவியங்களைத் திருட உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மறைந்த ஓவியர் லைலா ஷாஸதாவின் மகள் ஷாஹின். இவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அதிபர் சர்தாரி மீது திருட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஷாஹினின் இல்லம் கராச்சியில் உள்ளது. அங்கு தான் லைலாவின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 1994ம் ஆண்டு சர்தாரி, ஷாஹினின் சகோதரருடன் சேர்ந்து 93 ஓவியங்களைத் திருடி, லண்டனுக்கு கப்பலில் கொண்டு சென்றதாக புகார் கூறியுள்ளார்.

சர்தாரி தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு ஷாஹின் லண்டன் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.