ஹிந்துத்வம் என்றால் என்ன ?



உலகில் ஆண்டவன் கோடான கோடி ஜெவராசிகளை படைத்துள்ளான் . ஒரு படைப்புக்கும் வேறுபாடு உள்ளது . ஒரு பூச்சிக்கும் மற்றொரு பூச்சிக்கும் , ஒரு மிருகத்துக்கும் மற்றொரு மிருகத்துக்கும் , ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் வேறுபாடு உள்ளது .


கோடான கோடி மனிதர்கள் ஒரே மாதிரி படைப்பாக தெரிந்தாலும் அவர்களுள்

புற வேறுபாடு உள்ளது . அமைப்பில் ,நிறத்தில் , உயரத்தில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு மனிதனது முக அடையாளம் மற்றொரு மனித அடையாளத்துடன் வேறுபடுகிறது .

இது போலவே தேசத்துக்கு தேசம் அடையாளங்கள் வேறுபடுகின்றன . மேம்போக்காக பார்க்கும் பொது ஒரே நிலப்பரப்பாக தெரிந்தாலும் அதில் வாழும் மக்கள் ஒரே மாதிரி தெரிந்தாலும் தேசத்துக்கு தேசம் மாறும் என்பது உண்மை .



இந்திய தேசத்துக்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது . ஒரு தனித்தன்மை உள்ளது . இது வெறும் தனித்தன்மை மட்டுமல்ல அது மிகப் பழமையான தன்மை . பாரம்பரியமாக வாழையடி வாழையாக தொடரும் தன்மை , உலகில் உள்ள ஏனைய நாட்டுத் தன்மையை விட சிறந்த தன்மை .

இந்த நிலப்பரப்பில் வாழும் மக்களை ஒன்றுபடுத்தும் ஒரே தன்மை .இந்த நிலப்பரப்பில் வாழும் மக்களை ஒரே தேசமாக அங்கீகரிக்கும் தேசியத் தன்மை .

இந்த தன்மைக்குப் பெயர் ஹிந்துத்தன்மை . சமஸ்கிருதத்தில் "ஹிந்துத்வ". ஆங்கிலத்தில் hinduness .